Latest News
Home / இலங்கை (page 146)

இலங்கை

கல்முனையில் பயங்கரம் – அறிவுரை கூறிய இளைஞன் மீது வாள் வெட்டு

வீதியில் இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்றின் காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் காயமடைந்த கல்முனை இளைஞன் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் . அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை மதரஸா வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (22) காலை பொது முடக்கம் அமுலில் உள்ள போது தன்னுடைய வீட்டுக்கு முன்னால் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர்களை நிறுத்தி வேகமாக வாகனத்தை ஓட்டவேண்டாம் …

மேலும் வாசிக்க

கல்முனை வடக்கு , நாவிதன்வெளி பிரதேச இந்து ஆலயங்களுக்கான புனரமைப்பு நிதி வழங்கும் நிகழ்வு இன்று…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று (22.09.2021) கல்முனை வடக்கு , நாவிதன்வெளி ஆகிய பிரதேச இந்து ஆலையங்களை செய்வதற்கான புனரமைப்பு நிதி நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் அதிசயராஜ் அவர்கள் தலைமையில் அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கௌரவ வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள் மேலும் …

மேலும் வாசிக்க

காணாமற்போனவர்கள் தொடர்பாக எதனையும் மறைப்பதற்கில்லை – அரசாங்கம்

காணாமற்போனவர்கள் தொடர்பாக எதனையும் மறைப்பதற்கில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிணைந்த செயற்பாடுகளே அவசியம் என்றும் இலங்கையர் என்ற ரீதியில் இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே இறுதியான பதிலாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது, மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் …

மேலும் வாசிக்க

இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினர் : வெளியானது விசேட அறிவிப்பு!!

நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான விசேட அறிப்பொன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வின் போது வாசித்துள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த கட்டளையை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் கூறியிருந்தார். பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் …

மேலும் வாசிக்க

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஓகஸ்ட் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதற்கமைய, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு உணவை விற்பனை செய்வார்களாயின், …

மேலும் வாசிக்க

ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன – உண்மையினை வெளிப்படுத்தினார் சாணக்கியன்!

ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு முக்கி தகவல்களை வெளியிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் பார்த்தோம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவிற்கு …

மேலும் வாசிக்க

பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் போனமை குறித்து ரணில் கவலை – விரைவில் தீர்வு என அமைச்சர் தெரிவிப்பு

இந்த ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் போனமை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். மேலும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் …

மேலும் வாசிக்க

இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வட்ஸ்அப் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் இருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் நைஜீரிய பிரஜைகள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் வசமாக சிக்கியுள்ளனர். இந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை பெண்ணொருவருக்கு பரிசு கிடைத்துள்ளதாகவும், அதற்காக குறிப்பிட்டளவு பணத்தை வைப்பு செய்ய …

மேலும் வாசிக்க

பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலை குறித்து விரைவில் இறுதி முடிவு

எதிர்வரும் நாட்களில் பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலை தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். விலை உயர்வை அனுமதித்தால் எந்தப் பற்றாக்குறையும் இல்லாமல் பொருட்களை வழங்க முடியுமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் கூறினார். உலக சந்தையில் விலை உயர்வு காரணமாக, பால்மா, கோதுமை மா மற்றும் சிமென்ட் நிறுவனங்கள் பலமுறை விலை உயர்வை …

மேலும் வாசிக்க

பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலை குறித்து கவனம்

உயர் தர பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை பூர்த்தி முடியாத நிலை இருப்பதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ள விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி அமைச்சர் தினைஷ் குணவர்தன இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ,உயர் தர பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை பூர்த்தி முடியாமை நிலைமை தொடர்பில் தீர்வை காண்பதற்கு பரீட்சை திணைக்கள ஆணையாளருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் …

மேலும் வாசிக்க