Latest News

Recent Posts

May, 2023

  • 23 May

    நரிப்புல் தோட்டம் நடேஸ்வரா பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

    மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் ஆயித்தியமலை மட்/ நரிப்புல் தோட்டம் நடேஸ்வரா தமிழ் வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன 20/05/2023 இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு. வேலுப்பிள்ளை மாதவன் தலைமையில் இடம்பெற்றது. மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களுக்கான நிதிப்பங்களிப்பினை அவுஸ்ரேலியா சிட்னி நகரில் வசிக்கும் ராஜா சூப்பர் மார்க்கட் உரிமையாளர் வழங்கி இருந்தார். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் …

    மேலும் வாசிக்க
  • 22 May

    அக்கரைப்பற்று “இளந்தளிர்” மாலை நேர இலவச கல்வி நிலையத்தின் சாதனையாளர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வு….

    உலக சிறுவர் நலன் காப்பகத்தினால் வழிநடாத்தப்படுகின்ற அக்கரைப்பற்று “இளந்தளிர்” மாலை நேர இலவச கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை பாராட்டுதல், சித்திரைப் புத்தாண்டு விளையாட்டில் தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் மற்றும் ஆளுமை விருத்தி சார்ந்து திறமைகளினை வெளிக்காட்டியவர்கள் போன்றோரை பாராட்டி கௌரவித்து அவர்களிற்கு நினைவுச் சின்னங்கள் வழங்கும் நிகழ்வு (2023.05.21) அன்று வடிகான் வீதி, கோளாவில்-03, அக்கரைப்பற்றில் அமைந்துள்ள “இளந்தளிர்” மாலை நேர …

    மேலும் வாசிக்க
  • 20 May

    பிறந்தநாள் வாழ்த்து செல்வன் யனோஷன்

    எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் யனோஷன் இன்று (20.05.2023) சனிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். செல்வன் யனோஷன் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். மேலும் செல்வன் யனோஷன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

    மேலும் வாசிக்க
  • 20 May

    நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு !!

    இலங்கையில் நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள 370 வைத்திய அதிகாரி பிரிவுகளில் 59 டெங்கு அபாய பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு …

    மேலும் வாசிக்க
  • 19 May

    அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை மாணவருக்கு Cadet Company Sergeant Major ஆக பதவி பதவியுர்வு….

    அக்கரைப்பற்று கமு/திகோ/ ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் Defence Cadet மாணவன் I.ராகேஷ் Cadet Company Sergeant Major (CSM) ஆக பதவி உயர்ந்ததை முன்னிட்டு அவருக்கான கௌரவிப்பு விழா நேற்று (18) அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் 17வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி( Commanding officer) அவர்கள் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

    மேலும் வாசிக்க
  • 19 May

    தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் வாபஸ்!

    இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்க்கப்பட்டுள்ளன. 32 வயதான தனுஷ்க குணதிலக ரி20 உலகக் கிண்ணத்திற்காக சிட்னியில் இருந்தபோது, நகரில் உள்ள பெண் ஒருவரை தனது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டிருந்தது. குறித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான சர்ச்சை தொடர்ந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுகள் வாபஸ் பெற்றதாக அரச வழக்கறிஞர் …

    மேலும் வாசிக்க
  • 19 May

    ஆலையடிவேம்பு பிரதேசத்தில் May18 நினைவேந்தல் நிகழ்வு….

    அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நேற்று வியாழக்கிழமை மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அந்தவகையில் ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று வம்மியடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஆலையடிவேம்பு பிரதேச பொது மக்கள் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இன் நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு இருந்தமையும் …

    மேலும் வாசிக்க
  • 19 May

    சுமந்திரன் எம்.பியை மறைமுகமாக தாக்கிய சீனித்தம்பி யோகேஸ்வரன்!

    யாழ்ப்பாணத்தில் ஓர் இனம் வெளியேற்றப்பட்டது, அதற்கு இனச்சுத்திகரிப்பு எனக் கூறுபவர்கள் எங்கள் இனம் அழிக்கப்பட்டமைக்கு எமது இனப்படுகொலை செய்யப்பட்டது எனக் கூறத் தயங்குகின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உண்மையில் இந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும். இதற்காக சர்வதேசம் எமக்கு உதவ வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு – அம்பாறை இலங்கை தமிழரசுக்கட்சி கிளை ஏற்பாடு செய்த வலிசுமந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வின் …

    மேலும் வாசிக்க
  • 18 May

    சிறுவர்களைக் கடத்தல் தொடர்பில் பொலிஸாரின் விசேட அறிவித்தல்!

    அக்மீமன மற்றும் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் சிறுவர்கள் கடத்தல் அல்லது முயற்சிக்கும் குழு குறித்து எவ்வித அறிவித்தல்களும் பொலிஸாரால் வழங்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் தாம் அறிவித்தல் விடுத்ததா வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சிறுவர்களை கடத்த முயற்சிக்கும் குழு தொடர்பில் அக்மீமன பொலிஸாரினால் சமூக ஊடகங்களில் ஊடாக எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

    மேலும் வாசிக்க
  • 17 May

    ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்: விவசாயிகளுக்கும் நீர்ப்பாசன அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பு குறைவாகவுள்ளது பா.உ கலையரசன்

    ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அபிவிருத்திக் குழுத் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி. வீரசிங்க தலைமையிலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பாபகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலுடன் இடம்பெற்றது. இதன்போது பிரதேச ரீதியிலான உத்தேசிக்கப்பட்ட பல்வேறு பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன. இதன்போது விவசாய அமைப்பின் பிரதிநிதிகளால் கடந்த மூன்று வருடங்களாக முன்மொழியப்பட்ட நீர்ப்பாசன முன்மொழிவொன்று இதுவரையில் எதுவித நடவடிக்கையும் …

    மேலும் வாசிக்க
  • 14 May

    அமரர்.சறோஜா கணேசபிள்ளை 30வது வருட ஞாபகார்த்த மாபெரும் மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டியின் கோளாவில் காந்தி விளையாட்டு கழகத்திற்கு வெற்றி!

    ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் காந்தி விளையாட்டு கழகம் நடாத்த்திய அமரர்.சறோஜா கணேசபிள்ளை அவர்களின் 30வது வருட ஞாபகார்த்த மாபெரும் மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டி (29.04.2023) சனிக்கிழமை கோளாவில், தியாயப்பர் பாலாத்தை பொது விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வந்தநிலையில். குறித்த போட்டியின் இறுதிப் போட்டி இன்றைய தினம் (14/05/2023) மாலை 4.00 மணியளவில் கோளாவில் தியாயப்பர் பாலாத்தை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் கோளாவில் …

    மேலும் வாசிக்க
  • 14 May

    திருநாவுக்கரசர் குருபூசை தினத்தையொட்டி கோளாவில் அறுத்த நாககொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையின் சிறப்பு ஊர்வலம்….

    திருநாவுக்கரசர் குருபூசை தினத்தையொட்டி கோளாவில் அறுத்த நாககொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையின் ஏற்பாட்டில் அறநெறி மாணவர்களின் பங்குபற்றலுடன் சிறப்பு ஊர்வலம் இன்று (14/05/2023) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த திருநாவுக்கரசர் குருபூசை தினத்தையொட்டி கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வர ஆலயத்த்தில் சிறப்பு பூசை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றது. மேலும் நிகழ்வு அறுத்த நாககொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையின் தலைவர் பெ. சண்முகம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன் கலந்துகொண்ட மாணவர்களுக்கு அப்பியாசக் …

    மேலும் வாசிக்க
  • 14 May

    அக்கரைப்பற்று, ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்திற்கு ஆண்டின் 3வது வெற்றிக்கிண்ணம் : பெருமையில் பிரதேசம்

    அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தினர் 2023ம் ஆண்டின் 03வது வெற்றிக்கிண்ணத்தை நேற்றய தினம் (13/05/2023) வெற்றிகொண்டிருந்தனர். துறைநீலாவணை சூப்பர் கிங்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய 2023ம் ஆண்டிற்கான 32 அணிகளை உள்ளடக்கிய 06 ஓவர்கள் 09 பேர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் தொடரில் 32 அணிகளை கடந்து அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியன் பட்டம் பெற்றதுடன் மாபெரும் வெற்றிக்கிண்ணத்தையும் 20,000/- பணப்பரிசையும் எமது மண்ணிற்கு கொண்டு சேர்த்துள்ளர்.

    மேலும் வாசிக்க
  • 13 May

    மத்தியமுகாம் சலஞ்சஸ் விளையாட்டு கழகத்தினரின் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு….

    மத்தியமுகாம் சலஞ்சஸ் விளையாட்டு கழகத்தினால் இவ் வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான கணிதம் மற்றும் வரலாறு படங்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு கமு /சது றாணமாடு இந்து கல்லூரியில் தினாகரம்பிள்ளை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கமு /சது றாணமாடு இந்து கல்லூரி , மட்/ பட் மண்டூர் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் (13ம் கிராமம்), கமு/சது வாணி மகா வித்தியாலயம் …

    மேலும் வாசிக்க
  • 13 May

    பால்மாவின் விலை 200 ரூபாயினால் குறைப்பு!

    எதிர்வரும் 15ஆம் திகதி முதல் கிலோ பால்மாவின் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 200 ரூபாயினால் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடலை அடுத்து பால் மாவின் விலையை குறைப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

    மேலும் வாசிக்க