Latest News
Home / இலங்கை (page 148)

இலங்கை

இலங்கையில் கறுப்பு பூஞ்சை பரவல் : சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!!

கறுப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றுமொருவருக்கு பரவாதென சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்கள் இந்த பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இலங்கையில் மிக குறைவாக எண்ணிக்கையிலானோரே உள்ளனர். கொழும்பு, குருணாகல், இரத்தினபுரி பிரதேசங்களில் கொவிட் தொற்றுக்குள்ளான சிலர இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த நோய் தோல், மூக்கு, மூளை, …

மேலும் வாசிக்க

கொழும்பு தாமரை கோபுரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

உலக நோயாளர்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும், சுகாதார துறையை சேர்ந்த அனைவரையும் கௌரவிக்கும் முகமாகவும் கொழும்பு தாமரை கோபுரத்தில் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளன. அதற்கமைய, இன்றைய தினம் மாலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இவ்வாறு மின்விளக்குகள் ஒளிரவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் கொழும்பு மத்திய பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

போதைப்பொருளுக்கு அடிமையாகிய சிறைத்தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்.

போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறைத்தண்டை அனுபவித்துவரும் குற்றவாளிகளுக்கு, புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார். போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவிக்கும் கைதிகளைக் கையாளவேண்டிய முறை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய தன்னார்வ மருத்துவ உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர், நீதியமைச்சர் அலிசப்ரியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து …

மேலும் வாசிக்க

மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக் கடைகள் : நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள்!!

மதுபானக் கடைகளைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மலையக தோட்டப் பகுதிகளில் இன்று (17.09) மதுபானங்களை வாங்குவதற்கு ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்ட போதிலும் மதுப்பிரியர்கள் பெருமளவில் திரண்டு காணப்பட்டனர். ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சில மதுபானக் கடைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள மதுப்பிரியர்கள் சரியான சுகாதார நடைமுறைகளைக் கூட பின்பற்றாமல் மதுபானங்களை …

மேலும் வாசிக்க

நிந்தவூர் பிரதான வீதியில் சற்று முன்னர் சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதுஇச்சம்பவம் இன்று 17 மாலை 3.25 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க

பரீட்சாத்திகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 2 ஆயிரத்து 922 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற 6 ஆயிரத்து 589 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது. இரண்டு பரீட்சைகளுக்குமான விண்ணப்ப முடிவுத்திகதி செப்டம்பர் 15ஆம் திகதி (நேற்று) என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை அதிபர்கள் மூலம் கல்வி அமைச்சிற்கு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போது …

மேலும் வாசிக்க

21 ஆம் திகதி ஊரடங்கு தளர்வு? இறுதி தீர்மானம் குறித்த அறிவிப்பு வெளியானது!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்தப்படுமா என்பது குறித்து நாளை(வெள்ளிக்கிழமை) தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா ஒழிப்பு செயலணியின் வாராந்த மீளாய்வுக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. இதன்போதே நாட்டின் தற்போதைய நிலைமை மீளாய்வு செய்யப்பட்டு, தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலும் கடும் சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படலாம் எனவும், மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை …

மேலும் வாசிக்க

நாட்டை முழுமையாகத் திறக்கும் ஆரோக்கிய நிலைமை இல்லை!!

நாட்டை முழுமையாகத் திறக்கும் அளவுக்கு ஆரோக்கியமான மட்டத்தை நாம் இன்னமும் அடையவில்லை. இப்போதும் நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் கட்டுப்பாடுகள் இல்லாது நாட்டைத் திறந்தால், மிக மோசமான இன்னொரு கோவிட் வைரஸ் அலைக்கு முகங்கொடுக்க நேரிடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விசேட வைத்திய நிபுணர்கள் நேற்று கூட்டாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். பலவீனமான சுகாதாரக் கட்டமைப்பு காரணமாக நாட்டில் தென்னாபிரிக்க வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் …

மேலும் வாசிக்க

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கைக்கு விஜயம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். GSP+ சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பொறுப்பேற்பு

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் சற்றுமுன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து, அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால் இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும் சுமார் 9 மாதக் காலப்பகுதி வரையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க