Latest News
Home / இலங்கை (page 170)

இலங்கை

முதலாம் தர மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வருடத்துக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தது. இந்நிலையில் குறித்த விண்ணப்ப முடிவு திகதி ஓகஸ்ட் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

கல்முனைப் பிராந்தியத்துக்கு அடுத்தவாரம் 50 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள்

கல்முனைப் பிராந்தியத்துக்கு அடுத்தவாரம் 50 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படுமென்று  சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்தார். பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தலைமையிலான உயர் மட்ட சுகாதார அதிகாரிகள் குழுவினர் கல்முனைக்கு  (18)  விஜயம் செய்த போதே மேற்கண்ட விடயம் அறிவிக்கப்பட்டது. கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் தலைமையில் நீண்டநேரம் கலந்துரையாடல் இடம்பெற்றது. பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் எல்.பானப்பிட்டிய, …

மேலும் வாசிக்க

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தயாராகும் ஜனாதிபதி

எரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இன்று(திங்கட்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தியினரால் பாரிய போராட்டமொன்றும் பத்தரமுல்லை, நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது. எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், எரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிராக இன்று நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ள நிலையில், இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமான இன்று பத்தரமுல்லையில் போராட்டமொன்று இடம்பெற்றது. ஐக்கிய …

மேலும் வாசிக்க

க.பொ.த உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

இவ்வாண்டுக்கான க.பொ.த உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் இன்று(19/07) காலை அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விபரம்!

நாட்டில் மேலும் 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் 1,402 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 284,914 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் …

மேலும் வாசிக்க

இலங்கையில் இதுவரை 2 ஆயிரத்து 250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா

இலங்கையில் இதுவரை 2 ஆயிரத்து 250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக குடும்பநல சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக சிகிச்சை பெறுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க

ஆபத்தான பகுதியாக மாறியுள்ள கொழும்பு : வெளியாகியுள்ள தகவல்!!

கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்ற எல்லைக்குள் பரவியுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகர சபையின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி இதனை தெரிவித்துள்ளார். டெல்டா திரிபுக்கு ஆளான 11 பேர் கொழும்பு நகர எல்லைக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கெத்தாராமவில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்ட …

மேலும் வாசிக்க

சிறுமியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் – அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். – பெண்கள் அமைப்பு கருத்து

மலையக சிறுமியின் மரணம் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இவற்றை வலியுறுத்தி நாம் போராடுவோம். அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – என்று வீட்டுப் பணிப்பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பான ட்ரொடெக்ட் .அமைப்பின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்தார். 18.07.2021 அன்று அட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ …

மேலும் வாசிக்க

ரிஷாத்தின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உ.யிரிழப்பு : காரணம் வெளியானது!!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில், வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் ஹிஷாலினி எனும் 16 வயது சிறுமி , உடலில் தீ பரவி பலத்த காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், குறித்த சிறுமி சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 3ம் திகதி உடலில் தீ பரவியமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஹிஷாலினி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி கடந்த 15ம் …

மேலும் வாசிக்க

கொவிட் தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு ஏற்படும் புதிய வகை நோய்

கொவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உள்ளக உடல் உபாதைகளுக்கு உள்ளான 34 குழந்தைகள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 21 குழந்தைகள் கொழும்பு ரிஜ்வோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நோய்க்கு உள்ளானதாக சந்தேகிக்கும் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக விஷேட வைத்தியர் நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 2 முதல் 6 வாரத்திற்குள் இந்த நோய் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க