Latest News
Home / இலங்கை (page 145)

இலங்கை

மாகாணசபைத் தேர்தல் விரைவில்?

மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் பொதுவான நிலைப்பாடு என அக்குழுவின் தலைவர், சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். இந்தத் தேர்தலை விரைவில் நடத்த முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். …

மேலும் வாசிக்க

50,000 கெக்கரிக் காய்களை மாடுகளுக்கு வழங்கிய விவசாயி!

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் கெக்கரிக்காய் பயிர்ச் செய்கையில் ஈடுப்பட்டு வந்த விவசாயி ஒருவர் தனது உற்பத்திக்களை சந்தைப்படுத்த முடியாததன் காரணமாக அவற்றை மாடு வளர்க்கின்றவர்களை பிடுங்கிச் செல்ல அனுமதித்துள்ளதாகவும் இதனால் தனக்கு பல இலட்சங்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயியான சுப்பிரமணிம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கெக்கரிக்காய் உற்பத்தி செய்த போது அவை நல்ல விளைச்சலை தந்ததாகவும், இந்த முடக்க காலத்திற்கு முன் கிலோ 50 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாகவும் …

மேலும் வாசிக்க

நாடு திறந்த பின்னர் எவ்வாறு செயற்பட வேண்டும்? இராணுவத் தளபதி விளக்கம்!!

நாடு திறக்கப்பட்டதன் பின்னர் புத்தாண்டு காலப்பகுதியில் செயற்பட்டதனை போன்று செயற்பட வேண்டாம் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் கொவிட் அலை மீண்டும் ஏற்படுவதனை தவிர்க்க முடியாமல் போய்விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு திறக்கப்பட்டதன் பின்னர் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாகும் வரை சுகாதார சட்டத்தை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் …

மேலும் வாசிக்க

நாடு முதலாம் திகதி திறக்கப்படுகின்றது? – சுகாதார வழிகாட்டல் விரைவில்!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவரும் சூழ்நிலையில், கடுமையான சில சுகாதார கட்டுப்பாடுகளுடனேயே நாடு திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான சுகாதார வழிகாட்டல்கள், கட்டுப்பாடுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், பொது போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டாலும், அதில் 25 வீதமானோரே பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. சிலவேளை இந்த எண்ணிக்கை 50 வீதமாக அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு …

மேலும் வாசிக்க

முதல் முறையாக யூடியூப் நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு!!

அமெரிக்காவின் யூடியூப் நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் முதல் முறையாக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவதூரான காணொளி ஒன்றை வெளியிட்டமை தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமது கல்வி நிறுவனம் செய்த முறைப்பாடு மற்றும் சட்டத்தரணி ஊடான கடிதத்தை கவனத்தில் கொள்ளாது யூடியூப் நிறுவனம் இந்த அவதூரான காணொளியை நீக்காததை காரணமாக கொண்டு, இலங்கையின் கல்வி நிறுவனம் யூடியூப் எல்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு …

மேலும் வாசிக்க

உயர் தர வகுப்பில் பிரவேசிப்பதற்கு தேவையான ஆகக்குறைந்த தகுதிகளை உள்ளடக்கிய விசேட சுற்றிக்கை

2020 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் அழகியல் பாடநெறி பரீட்சைக்காக தோற்றிய மாணவர்கள் உயர் தர வகுப்பில் உள்வாங்குவதற்கு தேவையான ஆகக்குறைந்த தகுதிகளை உள்ளடக்கிய விசேட சுற்றிக்கையை வெளியிட கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்று (24) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதுதொடர்பாக தெரிவிக்கையில், அழகியல் பாடநெறி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஏனைய பாடங்களில் இரண்டு திறமை …

மேலும் வாசிக்க

பரீட்சை இலக்கத்தை மறந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் பெரும்பாலான மாணவர்கள், தங்களது பரீட்சை இலக்கத்தை மறந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. ஆகவே, அத்தகைய மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி தங்களது பரீட்சை பெறுபேறுகளை பார்க்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித கூறியுள்ளார். இதேவேளை பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 011 2 784 …

மேலும் வாசிக்க

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல நியமனம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்றுக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அவர் செயற்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கிராமத்தை அபிவிருத்தி செய்தலின் உரையாடல் மூலம் பெற்றுக்கொள்வதற்கான விசேட கூட்டம் காரைதீவில் இன்று…

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் கீழ் கிராமத்தை அபிவிருத்தி செய்தலின் உரையாடல் மூலம் பெற்றுக்கொள்வதற்கான விசேட கூட்டம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் காரைதீவு 6ம் பிரிவு பல் தேவை கட்டடத்தில் இடம்பெற்றது இன் நிகழ்வில் காரைதீவு பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் எல்.மோகனகுமார்,காரைதீவு பிரதேச சபையின் முன்னால் தவிசாளரும் அம்பாறைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல வீர திசாயநாயக்க அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு.ஜிவராஜா அவர்களும் …

மேலும் வாசிக்க

O/L பரீட்சை பெறுபேறுகள் வௌியானது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாகியுள்ளது. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

மேலும் வாசிக்க