Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது இம்மாதம் 29, 30, 31ம் திகதிகளில் திருக்கோயில், அக்கரைப்பற்று பிரதேசங்களில் நடாத்துவதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூர் கிரிக்கெட் பிரியர்களையும் இளந்தலைமுறை கிரிக்கட் விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்தும் முகமாகவும் மேலும் அவர்களுக்கு சிறந்த விளையாட்டு வழிகாட்டுதலுக்குமாக, நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய (05) அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட (10) ஓவர்களைக் கொண்ட மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டியாக அமைய இருக்கிறது

LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டியில்
a) Super Legend
b) Flash Legend
c) Legend Worriers
d) Legend Stars
e) Legend Kings ஆகிய ஐந்து அணிகள் போட்டியிட இருக்கிறது.

ஐந்து அணிகளுக்குமான சீருடை வழங்கல் நிகழ்வானது போட்டிகள் ஆரம்ப நாளான எதிர்வரும் 29.03.2024 வெள்ளிக்கிழமையன்று காலை 8.00 மணிக்கு சிறப்பாக அனுசரணையாளர்களை உள்ளடக்கியதாக திருக்கோவில் உதயசூரியன் மைதானத்தில் இடம்பெற இருப்பதுடன்.

இதற்கான ஆரம்ப தெரிவுக்கான பயிற்சிப் போட்டிகள் மாசி, பங்குனி மாதங்களில் திருக்கோவில் உதயசூரியன், தம்பட்டை லெவன் ஸ்டார், பனங்காடு அக்னி மைதானங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

இறுதிப் போட்டிகள் யாவும் அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *