Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
இலங்கை – Page 120 – Website of Alayadivembu
Latest News
Home / இலங்கை (page 120)

இலங்கை

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கல்லடியில் வடிகான் பகுதி அபகரிப்பு: மட்டக்களப்பு மாநகர மேயர் தலையீட்டில் முறியடிப்பு…

ஜே.கே.யதுர்ஷன்   மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிகான் பகுதியை அபகரிக்க ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி நேற்று (22) மட்டக்களப்பு மாநகர மேயர் திரு.சரவணபவன் அவர்களின் தலையீட்டினால் முறிடியக்கப்பட்டது . குறித்த அபகரிப்புக்கு கொண்டுவரப்பட்ட பொருட்களும் மாநகரசபையினால் கையகப்படுத்தப்பட்டன. மேலும் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் பகுதியை தொடர்ச்சியாக அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அவற்றினை தடுத்து நிறுத்துதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. மட்டக்களப்பு …

மேலும் வாசிக்க

கிண்ணியாவில் பதற்றம் – படகு விபத்து – 7 பேர் பலி!

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர்களுள் பாடசாலை மாணவர்கள் 4 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று (23) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை வழமை போன்று மாணவர்கள் …

மேலும் வாசிக்க

உணவுப் பொதி மற்றும் தேநீரின் விலை அதிகரிப்பு!

நாளை (23) முதல் உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், உணவுப் பொதியொன்றின் விலை 20 ரூபாவினாலும், ஒரு கோப்பை தேநீரின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலையின் அடிப்படையில் மீன் உணவுப் பொதியின் விலை 200 ரூபாவாகவும், மரக்கறி உணவுப் பொதியின் விலை 160 …

மேலும் வாசிக்க

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 12 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இன்று வரையில் 7 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. அதன்படி, இன்று சற்று முன்னர் வரவு செலவு …

மேலும் வாசிக்க

அரச ஊழியர்களுக்குவிடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!!

அரசாங்க நிர்வாகத்திற்கு எதிரான விமா்சனங்களை தடுக்கும் ஒரு புதிய நடவடிக்கையாக சமூக ஊடக தளங்கள் ஊடாக அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு அரச பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பொது நிர்வாக அமைச்சகத்தின் இந்த உத்தரவை மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரச பணியாளா்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர் உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தையும் அதன் …

மேலும் வாசிக்க

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர் – வர்த்தமானி வெளியீடு!

நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில் பாதுகாப்பைப் பேணுவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆயுதம் தாங்கிய படையினரை …

மேலும் வாசிக்க

இளைஞர், யுவதிகளை தொழில் நிமித்தம் ஜப்பானுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை

ஜனாதிபதியின் சிந்தனையில் உருவான சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் இளைஞர், யுவதிகளுக்கு வெளிநாட்டில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புத்தளத்தில் இன்று அதற்கான பதிவுகளும், ஆரம்ப நிகழ்வும் இன்று (21) இடம்பெற்றது. புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்னவின் வேண்டுகோளுக்கிணங்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். இப்பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் கல்விப் பொதுத் …

மேலும் வாசிக்க

சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களிற்கு எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை

சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களிற்கு எதையும் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை எனவும் அறைகளிற்குள் விளக்கேற்றி படங்களை பிரசுரிப்பதை விடுத்து பொது வெளிக்கு வர வேண்டும் எனவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் 27ம் திகதிவரை மாவீரர் தினம். அதேபோல மே 18ம் திகதி பொதுமக்களிற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். …

மேலும் வாசிக்க

பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டை கட்டாயம் – நாடாளுமன்றின் அனுமதியைப் பெற நடவடிக்கை: சுகாதார அமைச்சு!

பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்ட ஆவணங்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொது இடங்களுக்குச் செல்லும்போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் யோசனைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அண்மையில் அனுமதி வழங்கியது. இது தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்த …

மேலும் வாசிக்க

வீதியில் குப்பைகளை வீசிவாறு சென்றவர்கள் CCTV யில் மாட்டினர் – வீசிய குப்பைகளை அள்ள வைத்த பொலிஸார்!

யாழ்.தொல்புரம் பகுதியில் பொதுமக்கள் பாவனையிலுள்ள வீதியில் குப்பைகளை வீசி சென்றவர் சீ.சி.ரீ.வி கமராவில் சிக்கியதால் கொட்டிய குப்பைகளை அவரையே பொலிஸார் அள்ள வைத்தனர். உழவு இயந்திரத்தில் தன்னுடைய வீட்டு குப்பைகளை ஏற்றிவந்த குறித்த நபர் மக்கள் பாவனையிலுள்ள வீதிகளில் பொறுப்பற்ற விதமாக வீசியவாறு சென்றுள்ளார். இது தொடர்பாக ஆராய்ந்த அப்பகுதி பிரதேச சபை உறுப்பினர், அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரீ.வி கமராக்களை ஆராய்ந்துள்ளார். இதன்போது வேண்டுமென்றே குப்பைகளை வீசி …

மேலும் வாசிக்க