Latest News
Home / இலங்கை (page 147)

இலங்கை

பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலை குறித்து விரைவில் இறுதி முடிவு

எதிர்வரும் நாட்களில் பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலை தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். விலை உயர்வை அனுமதித்தால் எந்தப் பற்றாக்குறையும் இல்லாமல் பொருட்களை வழங்க முடியுமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் கூறினார். உலக சந்தையில் விலை உயர்வு காரணமாக, பால்மா, கோதுமை மா மற்றும் சிமென்ட் நிறுவனங்கள் பலமுறை விலை உயர்வை …

மேலும் வாசிக்க

பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலை குறித்து கவனம்

உயர் தர பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை பூர்த்தி முடியாத நிலை இருப்பதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ள விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி அமைச்சர் தினைஷ் குணவர்தன இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ,உயர் தர பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை பூர்த்தி முடியாமை நிலைமை தொடர்பில் தீர்வை காண்பதற்கு பரீட்சை திணைக்கள ஆணையாளருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் …

மேலும் வாசிக்க

Miss Teen International Botswana 2021 பட்டத்தை வென்ற இலங்கை பெண்!

கிம்ஹானி பெரேரா என்ற இலங்கைப் பெண் “Miss Teen International Botswana 2021 ” கிரீடத்தை வென்றுள்ளார். இந்த போட்டி நேற்று (19) நடைபெற்றுள்ளது. அவர் போட்டியில் போட்ஸ்வானாவின் ´பிலிக்வே´ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். அதன்படி, நான் இந்தியாவில் இடம்பெறவுள்ள ´Miss Teen International´ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக கிம்ஹானி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். “அந்த கிரீடத்தை வெல்வதே எனது நோக்கம்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க

இலங்கையில் சிறுவர்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை நோய் தொடர்பில் எச்சரிக்கை!!

இலங்கையில் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த சிறுவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் சிறுவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு விசேட வைத்தியர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றாளர்களுக்குள் சிறுவர்களுக்கு இதுவரையில் கருப்பு பூஞ்சை தொற்றியதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் சிறுவர்களை கருப்பு பூஞ்சை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   …

மேலும் வாசிக்க

அரச மருந்தகக் கூட்டுத்தாபன தலைவர் வௌியிட்டுள்ள அறிவிப்பு

18 வயதிற்கு உட்பட்ட 15.67 மில்லியன் மக்களுக்குத் தேவையான கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் வழங்குவதற்குத் தேவையான தடுப்பூசி மருந்து இலங்கைக்கு தற்போது கிடைத்திருப்பதாக இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இதுவரையில் 32 மில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்து இலங்கைக்கு கிடைத்திருப்பதாக கூறினார்.

மேலும் வாசிக்க

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரைச் சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியுயோர்க் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

பல்கலைக்கழகங்களை விரைவில் திறப்பதற்கு திட்டம்

இலங்கை பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட் எதிர்ப்பு தடுப்பூசிகள் இரண்டையும் வழங்கி, பல்கலைக்கழகங்களை விரைவில் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UCG) தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். பல்கலைக்கழகங்களை துரிதமாகத் திறப்பது குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு நேற்று (17) தெரிவித்த போதே, அவர் இதனைத் தெரிவித்தார். சுகாதாரத் தரப்பினருடன் இணைந்து இதற்காக துரித வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார். …

மேலும் வாசிக்க

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி!!

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 84 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,022 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 33 பெண்களும்,51 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி அமெரிக்கா பயணம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். செப்டம்பர் 21 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த விஜயம் மிகவும் முக்கியமானது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடந்த ஊடக சந்திப்பில் கூறியிருந்தார். குறிப்பாக ஜெனீவா, ஐ.நா மனித …

மேலும் வாசிக்க

ஜனாதிபதி, பிரதமர் வெளிநாட்டில் : நாட்டின் தலைவரானார் சபாநாயகர் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ள நிலையில் நாட்டின் தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தற்காலிகமாக செயற்படவுள்ளார். அதன்படி, ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளார். இதற்கிடையே, கடந்த வாரம் இத்தாலியில் …

மேலும் வாசிக்க