Latest News

Recent Posts

April, 2024

March, 2024

  • 30 March

    பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இராஜேந்திரன் அபிராஜ்

    எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் இராஜேந்திரன் அபிராஜ் அவர்கள் நேற்று (29.03.2024) வெள்ளிக்கிழமை தனது 22வது பிறந்ததினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் இராஜேந்திரன் அபிராஜ் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்துகின்றனர். மேலும் இராஜேந்திரன் அபிராஜ் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

    மேலும் வாசிக்க
  • 28 March

    2ஆம் ஆண்டு நினைவஞ்சலி ரத்னம் நடராஜன் (மூத்த ஊடகவியலாளர்)

    அக்கரைப்பற்றினை பிறப்படமாகவும் பனங்காடு பிரதேசத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட மூத்த ஊடகவியலாளர் ரத்னம் நடராஜன் அவர்களின் 02 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டான கிரிகைகள் இன்றைய தினம் (03) அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். ஆண்டுகள் இரண்டு ஆனாலும் ஆறவில்லை எங்கள் மனம் நேற்றுப்போல் உள்ளதப்பா நினைக்கும் போதெல்லாம் ஏற்க முடியவில்லை ஏங்கித் தவிக்கின்றோம்! கண்ணுக்குள் ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய் என்றும் எங்களோடு …

    மேலும் வாசிக்க
  • 28 March

    பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

    இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களுடைய 21 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வானது 27/03/2024 பாடசாலையின் அதிபர் ச. திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. கல்விற்க்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்று “எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் தொனிப்பொருளில் …

    மேலும் வாசிக்க
  • 26 March

    அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

    அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது இம்மாதம் 29, 30, 31ம் திகதிகளில் திருக்கோயில், அக்கரைப்பற்று பிரதேசங்களில் நடாத்துவதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். உள்ளூர் கிரிக்கெட் பிரியர்களையும் இளந்தலைமுறை கிரிக்கட் விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்தும் முகமாகவும் மேலும் அவர்களுக்கு சிறந்த விளையாட்டு வழிகாட்டுதலுக்குமாக, நாற்பது வயதிற்கு மேற்பட்ட …

    மேலும் வாசிக்க
  • 22 March

    மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை….

    மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (22) பாலர் பாடசாலை ஆசிரியர்கள் P.சுபாஜினி மற்றும் ஜஸ்மிலா தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது. நிகழ்வில் அதிதியாக மகாசக்தியின் செயலாளரும் முகாமையாளருமா S.திலகராஜன், கூட்டுறவு திணைக்கள உத்தியோகத்தர் K. காந்தரூபன், திருக்கோவில் வலயக்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் முன்பள்ளி பிள்ளை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் S.விவேகானந்தராஜா, அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் முகாமைத்துவ உதவியாளர் …

    மேலும் வாசிக்க
  • 22 March

    ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை….

     -ஹரிஷ்- ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (22) பாலர் பாடசாலை ஆசிரியர்கள் J.நிரோஜினி, T.குலதர்ஷினி மற்றும் S.சிந்துஜா அவர்களின் தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது. நிகழ்வில் அதிதியாக மகளிர் அபிவிருத்தி நிலைய தலைவி திருமதி. காந்திமதி ஜோய், திருக்கோவில் வலயக்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் முன்பள்ளி பிள்ளை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் S.விவேகானந்தராஜா, அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் முகாமைத்துவ …

    மேலும் வாசிக்க
  • 21 March

    ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகத்தின் தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா – 2024 கோலாகலமாக நடாத்தப்பட ஏற்பாடு….

    ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகம் நடாத்தும் தமிழ்,சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா மற்றும் இசை நிகழ்வு எதிர்வரும் (19/04/2024) வெள்ளிக்கிழமை நண்பகல் 2.00 மணிமுதல் ஆலையடிவேம்பு , ஸ்ரீ முருகன் ஆலய மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடாத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ”விளையாட்டினுடாக பாரபட்சமற்ற சமூக ஒற்றுமையினை மேன்படுத்தல்” எனும் நோக்குடன் குறித்த நிகழ்வுகள் உதயம் விளையாட்டுக் கழகத்தினரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன். அன்றைய தினம் சீட்டிழுப்பின் மூலமாக பெறுமதி மிக்க …

    மேலும் வாசிக்க
  • 20 March

    வெற்றிகரமாக இடம்பெற்ற தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு….

    தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்கள் தங்களது கற்கை நெறிகளை எவ்வாறு தெரிவு செய்வது, எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ”சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் (இலண்டன்) அமைப்பு மற்றும் Alayadivembuweb.lk இணையக்குழுவினர் பூரண ஏற்பாட்டில் ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) பதில் அதிபர் க.ஜயந்தன் தலைமையில் இன்றைய தினம் (20) வெற்றிகரமாக இடம்பெற்றது. கருத்தரங்கு ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி …

    மேலும் வாசிக்க
  • 17 March

    தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு துறைசார் விரிவுரையாளர்களை கொண்டு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு…

    இம்முறை தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு தங்களது கற்கை நெறிகளை எவ்வாறு தெரிவு செய்வது, எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ”சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் (இலண்டன்) அமைப்பு மற்றும் Alayadivembuweb.lk இணையக்குழுவினர் இணைந்து கல்வியல் கல்லூரியின் பொறுப்புமிக்க துறைசார் விரிவுரையாளர்களை கொண்டு எதிர்வரும் (20.03.2024) புதன்கிழமை அன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கலந்து கொள்ளவுள்ளவர்கள் தங்களது பெயர் விபரங்களை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம். …

    மேலும் வாசிக்க