Latest News
Home / இலங்கை (page 397)

இலங்கை

காரைதீவு பகுதியில் இரண்டு புதிய கொரோனா நோயாளிகள் தொற்றியுள்ளனமை உண்மையா? கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் விளக்கம்.

காரைதீவு பகுதியில் கொரோனா தொற்றியுள்ளனமை வெறும் வதந்தி என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை(12) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற நிலையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் மேலும் தனது கருத்தில் அம்பாறை மாவட்டம் காரைதீவு  பகுதியில்  இரண்டு புதிய கொரோனா  நோயாளிகள் அடையாளப்படுத்தி இருப்பதாக சில முகநூல் செய்திகள் உலா …

மேலும் வாசிக்க

மட்டக்களப்பில் இ.போ.ச. பேருந்திலும் மதுபானம் கடத்தல்: சாலை முகாமையாளர் உட்பட 4 பேர் கைது!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மதுபானக் கடத்தல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், மதுபானப் போத்தல்களை கடத்திச்சென்ற சென்ற சாலை முகாமையாளர், பேருந்து சாரதி, நடத்துநர் உட்பட நான்கு பேரை நேற்று (சனிக்கிழமை) மாலை கும்புறுமூலை சோதனைச் சாவடியில் வைத்து கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஜ.தனஞ்சய பெரமுன தெரிவித்தார். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவதினமான நேற்று …

மேலும் வாசிக்க

பல்கலைக்கழகம் திறக்கப்படவுள்ளமை குறித்த அறிவிப்பு வெளியானது!

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக  மானியங்கள்  ஆணைக்குழுவினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்  மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏனைய   மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்  மே மாதம் 18 ஆம் திகதி  ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று நோயாளியின் மனைவிக்கும் கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற பரிசோதனையின்போது பெண் ஒருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 198 இலிருந்து 199ஆக உயர்ந்துள்ளது. குறித்த பெண் அம்பாறை மாவட்டத்தில் கடந்த 8ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுடன் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட நபரின் மனைவியாவார். அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் அண்மையில் கட்டார் …

மேலும் வாசிக்க

ஜாஎல – சுதுவெல்ல பிரதேசத்தில்கைது செய்த 28 நபர்கள் ஒலுவில் பகுதியில் கடற்படை அமைந்துள்ள மத்திய நிலையத்துக்கு மாற்றம்

ஜாஎல – சுதுவெல்ல பகுதியில் சுயதனிமைக்குட்பட மறுப்பு தெரிவித்த நபர்கள் 28 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் ஜாஎல – சுதுவெல்ல பகுதியில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளான பல நபர்கள் மதுவுக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்கள் பெரும்பாலானோருடன் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுவுக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்களை கட்டுப்படுத்துவது கடினம். முதலாம் நபரின் மனைவிக்கும் 7 …

மேலும் வாசிக்க

19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு நீடிப்பு….

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை …

மேலும் வாசிக்க

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மே 11 ஆரம்பம்

2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பமாக திட்டமிடப்பட்டிருந்த இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கையே மாற்றப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றி அடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை…..!

கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுவரும் நாடுகளில் இலங்கை மற்றும் சீனா முன்னணியில் உள்ளதாகவும் இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் முன்னாயத்த ஏற்பாடுகள் மிக சிறப்பானதாக அமைந்துள்ளதாகவும் சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் உலக அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கலக்கம் மற்றும் பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள ஆய்வொன்றின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த …

மேலும் வாசிக்க

உள்ளூராட்சி அமைப்புக்களின் தலைவர்கள் பொறுப்புடன் செயல்படவேண்டும் – பொதுநிர்வாக அமைச்சர்

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையினை கருத்திற்கொண்டு உள்ளூராட்சி அமைப்புக்களின் தலைவர்களும் பொறுப்புடன் செயல்படுமாறு பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் விசேட அறிவிப்பை விடுத்துள்ளார். குறித்த நடவடிக்கைகளை முன்னிறுத்தி இந்த காலகட்டத்தில் பொது கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதேவேளை குப்பைகளை அகற்றும் பணிகளும் சரியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அத்தோடு பொதுமக்களைப் போலவே உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கும் தற்போதுள்ள …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று தொற்றாளருடன் தொடர்வுப்பட்ட 10 நபர் பொலன்னறுவை தாமின்னவுக்கு இராணுவத்தினரின் அனுமதியுடன் அனுப்பிவைப்பு

அக்கரைப்பற்று கொரோனா தொற்றாளருடன் தொடர்வுப்பட்ட 10 நபர்களும் பொலன்னறுவை தாமின்ன  கொரோனா விசேட மருத்துவமனைக்கு இராணுவத்தினரின் அனுமதியுடன்   அனுப்பிவைக்கப்பட்டனர் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பாக காலை ஊடகவியலளார்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கட்டார் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நிலையில் நோய் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பொலன்னறுவை தாமின்ன …

மேலும் வாசிக்க