Latest News
Home / இலங்கை (page 396)

இலங்கை

அக்கரைப்பற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் தொற்று நீக்கி மருந்தினை விசிறும் நடவடிக்கை

வி.சுகிர்தகுமார்   சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் அமைதியான முறையில் வீடுகளில் கொண்டாடிவரும் இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு படையினர் மக்களை பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டுவருகின்றனர். அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசம் பாதுகாப்பு தரப்பினரின் முழுமையான கண்காணிப்பின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருவர் கொரோனா தொற்றாளர்களாக சுகாதாரத்துறையினரால் இனங்காணப்பட்டதை அடுத்து குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேநேரம் இன்று பாதுகாப்பு தரப்பினர் அக்கரைப்பற்று பொலிசார் மற்றும் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார …

மேலும் வாசிக்க

ஊரடங்கு சட்டம் அமுல்- அம்பாறை மாவட்டத்தின் புத்தாண்டு தினத்தில் பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு

புத்தாண்டு தினத்தில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சம்மாந்துறை சவளக்கடை மத்தியமுகாம் அக்கரைப்பற்று  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்  பொலிசார் விசேட அதிரடிப்படை  இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை இரவு  பகலாக முன்னெடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை தொடர்ந்து திங்கட்கிழமை(13) இரவு முதல் செவ்வாய்க்கிழமை(14) முற்பகல் வரை அம்பாறை மாவட்டத்தில் உள்ள மேற்குறித்த பொலிஸ் எல்லைப்பகுதியில் உள்ள முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் தற்காலிக …

மேலும் வாசிக்க

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் – அமைச்சர் ரமேஷ்

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார். தற்போது இக்கட்டான சூழ்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது என தெரிவித்த அவர் இந்நிலையில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார். மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், சுகாதார துறையினர் குறிப்பிடும் ஆலோசனைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் …

மேலும் வாசிக்க

அரசுக்கு எதிராக 32 சிவில் அமைப்புக்கள் போர்க்கொடி – கொரோனா தடுப்பு என்ற பெயரில் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்காதீர் என கோட்டாவுக்குக் கடிதம்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க அரசு முயற்சிக்கின்றது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – இவ்வாறு 32 சிவில் அமைப்புக்கள்  ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நேற்று விசேட கடிதம் அனுப்பி வைத்துள்ளன.   ‘தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மறைந்து கருத்து வெளியிடல் மற்றும் எதிர்ப்புத் தெரிவித்தல் உரிமையை ஒடுக்குதல் ஆகாது’ எனத் தலைப்பிட்டு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. …

மேலும் வாசிக்க

சித்திரைப் புத்தாண்டையொட்டி பொலிஸார் விசேட தேடுதல் வேட்டை!

தமிழ் – சிங்களப் புத்தாண்டையொட்டி இன்று (13) மாலை 6 மணி முதல் நாளை (14) மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடவுள்ளனர். இந்தக் காலப்பகுதியினுள் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் கைதுசெய்யப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

கொரோனா தொற்று சந்தேகத்தில் மேலும் 32 பேர் ஒலுவில் முகாமுக்கு – இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு

ஜா – எலப் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் பழகிய மேலும் 32 பேர் இனங்காணப்பட்டு ஒலுவில் கடற்படை முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று சந்தேகத்தில் இவர்கள் 21 நாட்களுக்குத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

மேலும் வாசிக்க

தோப்புக்கரணம் போட வைத்த இரு பொலிஸார் இடைநிறுத்தம்: இந்தியப் பொலிஸாரின் பாணியா?

கொழும்பு டார்லி வீதியில் நேற்று ஊரடங்குச் சட்ட அமுலாக்க நேரத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த சிலரைப் பிடித்து தோப்புக்கரணம் போடவைத்த கொழும்பு போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்தியப் பொலிஸாரின் பாணியில் செயற்பட முனைந்த குறித்த இருவர் தொடர்பிலும் மனித உரிமைகள்  ஆர்வலர்கள் தெரிவித்த விமர்சனங்களையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

தனிமைப்படுத்தலுக்கு வடக்கில் தனித் தீவு! – இராணுவத் தளபதி தெரிவிப்பு

“கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் எவராவது சட்டவிரோதமாக ஊடுருவினால் அவர்களைத் தடுத்து வைப்பதற்கும், தனிமைப்படுத்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் வடக்கில் தீவொன்று உள்ளது.” – இவ்வாறு கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. அங்கிருந்து கடல் மார்க்கமாக யாராவது இலங்கைக்குள் ஊடுருவினால் அவர்களைத் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்கு வடக்கில் …

மேலும் வாசிக்க

கொரோனாகொரோனா தொற்று 214 – மேலும் நால்வர் அடையாளம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 147 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்யும் முறை குறித்த வர்த்தமானி வெளியானது!

    கொரோனா வைரஸினால் மரணிப்பவரின் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டிய முறை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு அமைய தகனம் செய்யப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க