Latest News
Home / இலங்கை (page 370)

இலங்கை

சாகாமம் கிராமத்தில் அடையாளம் காணப்படாத வயோதிபரின் சடலம் மீட்பு!

வி.சுகிர்தகுமார்  அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகாமம் கிராமத்தில் அடையாளம் காணப்படாத சுமார் 70வது வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்று மாலை (11) மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். சடலமானது காயங்களுடன் குடியிருப்பு பகுதியில் இருந்து சற்று தொலையில் காணப்பட்ட நிலையில் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் எஸ்.பார்த்தீபன் மற்றும் திருக்கோவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டனர். சடலமாக மீட்க்கப்பட்டவர்; திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்தவர் …

மேலும் வாசிக்க

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிறந்த தேசியத்தின்பால் பற்றுறுதிமிக்க வேட்பாளர்களையே களத்தில் இறக்கியுள்ளது: மு.பா.உ கோடீஸ்வரன்….

வி.சுகிர்தகுமார்   தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிறந்த தேசியத்தின்பால் பற்றுறுதிமிக்க வேட்பாளர்களையே களத்தில் இறக்கியுள்ளது. இதன் மூலம் வெற்றியை பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். பொதுத்தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அம்பாரை மாவட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில்  களம் இறக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் மக்களின் ஆதரவை பெற்ற சமூக …

மேலும் வாசிக்க

22, 260 அபாயகரமான வெடிபொருட்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சியில் அகற்றல்

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 22 ஆயிரத்து 260 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2020 ஜீன் மாதம் 08ஆம் திகதி வரையான காலப்பகுதியில் …

மேலும் வாசிக்க

மட்டு அம்பாறை எல்லை பிரச்சினை எச்.எம்.எம்.ஹரீஸால் ஏற்படுத்தப்பட்டாது

பாறுக் ஷிஹான் மட்டு அம்பாறை எல்லை பிரச்சினை என்பது முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனை மாநகர முதல்வராக இருக்கும் போது வலிந்து தோற்றுவிக்கப்பட்டது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் வியாழக்கிழமை (11) மாலை கல்முனை கட்சி காரியாலயத்தில்  இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறினார். மேலும் …

மேலும் வாசிக்க

வணக்கத் தலங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் அறிவிப்பு!

வணக்கத் தலங்களில் பின்பற்றப்படவேண்டிய கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து நாளை வெள்ளிக்கிழமை வணக்கத் தலங்களில் சமய வழிபாடுகளை கடைப்பிடிக்க முடியும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வணக்கத் தலங்களில் ஆகக்கூடுதலாக 50 பேர் மட்டுமே சமய நிகழ்வுகளில் பங்குபற்ற அனுமதிக்கப்படுகின்றது. வழிபாடுகள் நடத்தும்போது இருவருக்கிடையேயான இடைவெளி ஒரு மீற்றர் இருப்பது கட்டாயமாகும். ஆலயத்தின் வாசலில் …

மேலும் வாசிக்க

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பெண் ஒருவர் கொடுரமான முறையில் கொலை

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் பெண் ஒருவர் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று  இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.   கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை உசன் வைத்தியர் வீதியில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தாயான வெள்ளக்குட்டி றகுமத்தும்மா (வயது – 60) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பிறைந்துரைச்சேனை உசன் வைத்தியர் வீதியில் …

மேலும் வாசிக்க

ஆர்ப்பாட்டங்களை தடுக்க மாற்றுவழி – ஜனாதிபதி ஆலோசனை

எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு தாக்குதல் நடத்தாது மாற்று வழிகளூடாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டார். முன்னிலை சோசலிசக் கட்சியினரால் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன …

மேலும் வாசிக்க

வாக்குச் சீட்டுக்களின் அளவு குறித்த விபரம்

பொதுத் தேர்தலில் நீளமான வாக்குச் சீட்டு 23 அங்குலம் கொண்டதாகவும் அகலமான வாக்குச் சீட்டு 9 அங்குலம் கொண்டதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சீட்டுக்கள் கம்பாஹா, யாழ்ப்பாணம், கொழும்பு, வன்னி, திகாமடுல்ல, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கம்பாஹா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளதுடன், கொழும்பு, வன்னி, திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அகலமான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் …

மேலும் வாசிக்க

தீர்வை வென்றெடுக்க கூட்டமைப்பின் கரங்களைத் தேர்தலில் பலப்படுத்துக! வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

“தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வென்றெடுக்க நாம் ஓயாது பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எம்மைத் தவிர வேறு எவரும் இந்தப் பயணத்தில் ஈடுபடவில்லை என்பது எமது அன்புக்குரிய தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். எனவே, அரசியல் தீர்வை வென்றெடுக்க எமது கரங்களைப் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் மென்மேலும் பலப்படுத்த வேண்டும்.” – இவ்வாறு வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் கோரிக்கை …

மேலும் வாசிக்க

கனடாவில் உள்ள சுவாமி விபுலாநந்தர் கலை மன்றத்தினால் நிவாரணம் வழங்கி வைப்பு

இன்றைய தினம் அம்பாறை மாவட்டத்தின் கணபதிபுரம் கிராமத்தில் உள்ள 41 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் அம்பாறை மாவட்டத்தின் பழவெளி கிராமத்தில் உள்ள 19 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டன. இதனை காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் , உதவிக் கல்விப் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான வீ.ரி.சகாதேவராஜா, கோரக்கர் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் சோ.தினோஸ்குமார், சுவாமி விபுலாநந்தர் கலை மன்றத்தின் அம்பாறை …

மேலும் வாசிக்க