Latest News
Home / இலங்கை (page 380)

இலங்கை

நாடளாவிய ரீதியில் 5,700 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,700 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும். இந்நிலையில், அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றின் ஆபத்து அதிகளவில் இல்லாத 21 …

மேலும் வாசிக்க

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நாளை வெளியாகவுள்ள விசேட சுற்றுநிரூபம்

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும்போது கடைபிடிக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான சுற்றுநிரூபம் நாளை கல்விஅமைச்சினால் வெளியிடப்படவுள்ளது. மாகாணக்கல்வி பணிப்பாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இச் சுற்றுநிரூபம் அனுப்பப்படவுள்ளது. குறித்த வழிகாட்டல்களின் ஊடாக தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டிய நடவடிக்கைகளை பாடசாலை முறையாக முன்னெடுக்கவேண்டும் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது முதல் வாரத்தில் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து …

மேலும் வாசிக்க

அரசியல் தீர்வே தமிழருக்கு முக்கியம் இனவாதிகளின் வாய்களை அடக்குவது அரசின் பொறுப்பு – மஹிந்தவிடம் சுட்டிக்காட்டினோம் என்கின்றனர் சம்பந்தன், மாவை

“தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். அதில் புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது மிக முக்கியம். இதைப் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ வுடன் நடத்திய பேச்சின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரிவாக எடுத்துரைத்துள்ளது. தீர்வுத் திட்டத்தை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் அரசின் ஆதரவுடன் இயங்கும் இனவாதிகள் அதனைக் குழப்பியடிக்கும் விதத்தில் கருத்துக்களை வெளியிடுவார்கள். எனவே, அவர்களின் வாய்களை அடக்குவது அரசின் …

மேலும் வாசிக்க

சம்மாந்துறையில் இரு ஆண் சிறுவர்கள் மரணம்-தடயவியல் பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு!

பாறுக் ஷிஹான் பட்டம் விடுவதை பார்வையிட சென்ற இரு ஆண் சிறுவர்கள் பாதுகாப்பற்ற கிணறு போன்ற ஒரு குழியில்  தவறி  வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு -3 பகுதியில் கடந்த சனிக்கிழமை(9) மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.மேலும் குறித்த கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்த இரு சிறுவர்களது சடலங்களும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் …

மேலும் வாசிக்க

திருமலையில் சுவர் இடிந்து வீழ்ந்து 4 வயது சிறுவன் பலி – 2 வயது சிறுவன் படுகாயம்!

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் எனவும், அவரது சகோதரரான இரண்டு வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பரிதாப சம்பவம் கிண்ணியா 03, மாஞ்சோலைச் சேனை, ஆலீம் வீதியிலுள்ள வீடொன்றில் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ரணீஸ் முஹம்மது ஷான் (வயது 04) எனும் சிறுவனே இதன்போது உயிரிழந்துள்ளார் . இவரது சகோதரான …

மேலும் வாசிக்க

கூட்டமைப்புக்காக தமிழீழத்தை தாரைவார்க்கோம்! – ராஜபக்சக்களின் சகா விமல் கூறுகிறார்

“நாட்டின் நலன் கருதி நெருக்கடியான சூழ்நிலையில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வந்தமைக்காக அவர்களின் வடக்கு, கிழக்கு இணைப்புக் கனவை – சமஷ்டிக் கோட்பாட்டை – பிரபாகரனின் தமிழீழ இலட்சியத்தை அரசு நிறைவேற்றும் என்று எவரும் தப்புக்கணக்குப் போடக்கூடாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் அதை நாம் வழங்கவே மாட்டோம். எமது படையினரின் தியாகத்தை நாம் கொச்சைப்படுத்தவே மாட்டோம்.” – இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அவர் மேலும் …

மேலும் வாசிக்க

வீதியில் நடப்பட்ட மரக்கன்றுகளின் பாதுகாப்பு கூடுகளை திருடியவர் கைது!

பாறுக் ஷிஹான் வீதியில் நடப்பட்ட  மரக்கன்றுகளின் பாதுகாப்பிற்காக போடப்பட்ட மரக் கூடுகளை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை   திருடி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையின் தேசிய மர நடுகை செயல்திட்டத்திற்கமைய சம்மாந்துறை பிரதேசத்தின் வங்கலாவடி தொடக்கம் மல்வத்தை பிரதேசம் வரையான அரச நிறுவனங்களின் பிரதானிகள் ஊடாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடப்பட்ட மரங்களின் பாதுகாப்பிற்காக மரக் கூட்டுத்தாபனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட பாதுகாப்புக் கூடுகள் …

மேலும் வாசிக்க

யானை மின்வேலியில் சிக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு!

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ஆம் கட்டைப் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது. காட்டு யானைகளின் தொல்லையால்  அப்பகுதியைச் சுற்றி யானை மின்வேலி  பொருத்தப்பட்டிருந்த நிலையில் கடைக்குச் சென்ற சிறுவன் மின் வேலியில் மோதியதாலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவன் திருகோணமலை, மொரவெவ, வில்கம் விகாரை பாடசாலையில் தரம் 3இல் கல்வி பயிலும் 10ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 08 …

மேலும் வாசிக்க

விசாவின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு மேலும் நீடிப்பு!

இலங்கையில் தற்போது உள்ள வெளிநாட்டவர்களின் விசாவின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்சமயம் இலங்கைக்கு வந்திருக்கும் வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்துவகையான விசாக்களின் செல்லுபடிக்காலம் மே 12 முதல் ஜூன் 11 வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களம் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது அவை வருமாறு,

மேலும் வாசிக்க

எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய நாடாளுமன்றம் கூட்டப்படாது – அரசாங்கம் திட்டவட்டம்

எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்போவதில்லை என அரசாங்கம் இன்று (சனிக்கிழமை) மீண்டும் தெரிவித்துள்ளது. நாட்டின் நெருக்கடி குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, அவசரகால சூழ்நிலையில் கூட பழைய நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் பழைய நாடாளுமன்றத்தை கூட்டபோவதில்லை என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் …

மேலும் வாசிக்க