Latest News
Home / இலங்கை (page 398)

இலங்கை

கல்முனை முன்னணி பாடசாலையில் தரம்-10 மாணவர்களுக்கு வட்ஸ்அப் மூலம் கல்வி நடவடிக்கை

கல்முனை ஸாஹிறா கல்லூரியின் தரம்-10 மாணவர்கள் வீட்டில் இருந்தவாறு தமது கல்வி நடவடிக்கைகளை தொடரும் நோக்கில் E-LEARNING G10 ZCK எனும் Whats App roup ஒன்று ஆரம்பிக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுவரை இக்குழுவில் இணைந்து கொள்ளாத தரம்-10 மாணவர்கள் தங்களது பெயர், வகுப்பு, Whats App இலக்கம் என்பவற்றை பகுதித் தலைவர் ஏ.எச்.எம்.றிஸான் அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கல்லூரியின் அதிபர் எம்.ஐ.ஜாபீர் வேண்டிக் கொள்கின்றார். குறித்த …

மேலும் வாசிக்க

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிப்பு

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் N.H.சித்ரானந்த இதனைத் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமடையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமையவே இது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எட்ட முடியும் என செயலாளர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை …

மேலும் வாசிக்க

இலங்கையில் ஏப்ரல் 19 இற்குள் கொரோனா வைரஸுக்கு முடிவு – சுகாதார அமைச்சர் பவித்ரா நம்பிக்கை

உலக மக்களை மிரட்டி வருகின்ற கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதிக்குள் முடிவுக்குக் கொண்டு வரலாம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்று தொடர்பில் நாளாந்தம் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “ஏப்ரல் 19 ஆம் திகதிக்குள் அனைத்து கொரோனா வைரஸ் நோயாளிகளையும் அரசால் …

மேலும் வாசிக்க

இதுவரை 50 பேர் குணமடைவு; 133 பேர் வைத்தியசாலையில்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து இன்று (10) வீடு திரும்பியுள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49 இலிருந்து 50 ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை, புதிதாக கொரோனா தொற்றிய எவரும் இன்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 190 பேரில் தற்போது 133 நோயாளிகள் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் …

மேலும் வாசிக்க

கொரோனா தொற்று சந்தேகத்துடன் பதுங்கியிருந்த 49 பேர் சிக்கினர் – பொலிஸார் அதிரடி

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் 49 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் சிக்கினர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 49 பேரும் கடந்த மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வந்த நிலையில் மறைந்திருந்தனர் என்று பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன வழங்கிய உத்தரவுக்கமைய இந்த நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த 49 பேரின் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்றுக்கான போக்குவரத்திற்கு கட்டுப்பாடு!

அக்கரைப்பற்றுக்கு செல்வதற்கு அத்தியாவசிய சேவையாளர்கள் தவிர்ந்து ஏனையோர் போக்குவரத்துக்கு இன்று அனுமதிக்கப்டவில்லை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து வெளிப்பிரதேசங்களுக்கும் வெளிப்பிரதேசங்களில் இருந்து அக்கரைப்பற்று பிரதேசத்திற்கும் பொதுமக்கள் போக்குவரத்து செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. நேற்றையதினம் (9) அக்கரைப்பற்று 19 ஆம் பிரிவில் கொரனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த கட்டுப்பாடு நட்டிவடிக்கை எடுக்கப்ட்டிருந்தது. கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி, ஒலிவில் பாலத்தில் தடை ஏற்படுத்தப்பட்டிருந்து அவ்வாறே ஏனைய அக்கரைப்பற்றுக்கான வீதிகளிலும் தடை …

மேலும் வாசிக்க

கோழி திருடச் சென்றவர்கள் விட்டுச் சென்ற தொலைபேசியினால் சிக்கினர்.

கோழிகளை திருடச் சென்ற இருவர் திருடிய இடத்தில் கைத்தொலைபேசியை விட்டுச் சென்றதால் திருடர்கள் சிக்கிக் கொண்ட சம்பவமொன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கோழி வளர்ப்பாளர் ஒருவரின் கோழிகள் சிலவற்றை இருவர் சேர்ந்து திருடியுள்ளனர். திருடும் போது திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவருடைய கையடக்கத் தொலைபேசி தவறுதலாக விழுந்துள்ளது. அதனை அறிந்து கொள்ளாத திருடர்கள் அவ்விடத்திலிருந்து சென்றுள்ளனர். கோழி வளர்ப்பாளர் கண்டெடுத்த தொலைபேசி …

மேலும் வாசிக்க

ஊரடங்கு விதிமுறையை மீறினால் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் – பொலிஸ் அதிரடி அறிவிப்பு

“ஊரடங்குச் சட்டத்தின் விதிமுறைகளை மீறி மாவட்ட எல்லைகளைக் கடந்து செல்வோர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.” -இவ்வாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாளை (10) முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, பொதுமக்கள் ஊரடங்குச் சட்டத்தின் விதிமுறைகளைக் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க

வருமானம் குறைந்த சமுர்த்தி முத்திரைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள்!!!

வி.சுகிர்தகுமார் வருமானம் குறைந்த மக்களின் நன்மை கருதி அரசாங்கம் பல்வேறு நலனுதவி திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. இதற்கமைவாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்று நிருபங்களுக்கமைய சமுர்த்தி வங்கியினால்  வருமானம் குறைந்த சமுர்த்தி முத்திரைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி வங்கியினூடாக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரனின் வழிகாட்டல் மற்றும் பங்களிப்புடன் தலைமையக …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்றில் கொரோனா வைரஸ் முதல் தொற்றாளர் அடையாளம்!!! (Update)

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுள்ள ஒருவர் முதன்முறையாக  அக்கரைப்பற்று பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். அக்கரைப்பற்று காசிம் ஆலிம் வீதி  அருகில் வசித்து வந்த சுமார்   56 வயது  மதிக்கத்தக்க  குறித்த நபருக்கே கொரோனாவைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில்  கட்டார் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நிலையில்  கடந்த சில தினங்களுக்கு …

மேலும் வாசிக்க