Latest News
Home / இலங்கை (page 410)

இலங்கை

பொதுத்தேர்தலுக்கான அம்பாறை வேட்பாளரை அறிவித்தது ரெலோ

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அம்பாறை மாவட்டத்துக்கான வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனும் பட்டிருப்பு கல்முனையைச் சேர்ந்த தாமோதரம் பிரதீவன் என்பவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாண்டிருப்பைச் சேர்ந்த தாமோதரம் பிரதீவன் ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் சமூக சேவையாளருமாவார். கல்முனை தமிழ் இளைஞர் சேவை அமைப்பின் …

மேலும் வாசிக்க

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிரமங்களை ஏற்படுத்திய 60 பேர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு சில தரப்பினர் தொடர்ந்தும் சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்துபவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்கானித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த வாரங்களில் பயணிகளுக்கு அழுத்தம் பிரயோகித்த 60 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கடந்த வியாழக்கிழமை 4 பேரும் நேற்றைய தினம் இரண்டு பேரும் அடங்கலாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக …

மேலும் வாசிக்க

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பு நாடுகளினால் விவாதிக்கப்படவுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் …

மேலும் வாசிக்க

ஐ.நா. பிரேரணை தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

ஐ.நா. பரிந்துரைகள் மற்றும் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ.நா. வலியுறுத்த வேண்டும் என தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் …

மேலும் வாசிக்க

பேஸ்புக் காதலில் வீழ்ந்த யாழ் இளைஞனுக்கு கிளிநொச்சிக் காதலி கொடுத்த பேரதிர்ச்சி..!!

முகநூல் மூலம் பெண்ணொருவரை காதலித்த யாழ் இளைஞன் ஒருவர் காதலித்த பெண்ணை நேரில் கண்டதும் அதிர்ச்சியடைந்து தாக்கிய நிலையில், குறித்த சம்பவம் பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் முகநூலில் அறிமுகமான ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்துள்ளார். அழகான இளம் பெண்ணின் படங்களை பதிவேற்றம் செய்த குறித்த பெண், அது தான் கூறி வந்துள்ளார்.இருவரும் பேஸ்புக், தொலைபேசியில் கதைத்து காதலை …

மேலும் வாசிக்க

ஜெனீவா தீர்மானம் தொடர்பில் அரசின் பாரதூரமான முடிவு!! இலங்கை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்தப்படும் விடயம்..!

ஐ.நாவின் 30/1ஆம் இலக்க தீர்மானம் தான் மஹிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரையில் இருந்து பாதுகாத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நினைவுப்படுத்தியுள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது மஹிந்த அரசின் இறுதி காலகட்டத்தில் எமது இராணுவம் மற்றும் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.தன்னை மின்சாரக் கதிரைக்குக் கொண்டு செல்லப்போகின்றார்கள் என்று மஹிந்த ராஜபக்சவே அன்று தெரிவித்து வந்தார்.எனினும், …

மேலும் வாசிக்க

1 வருடகாலப் பயிற்சி…20,000 ரூபா சம்பளம்..!! பட்டதாரிகள் நியமனம் மார்ச் 1 முதல்!!

ஒருவருட காலத்துக்கு மேலாக தொழில் வாய்ப்பு இன்றி இருக்கும் சுமார் 50 ஆயிரம் பட்டதாரிகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சரவை துணைப்பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இவர்களது தகமைகளை பரிசீலனை செய்து மார்ச் 1 ஆம் திகதி தொடக்கம் இவர்களுக்கான பயிற்சியாளர் நியமனங்கள் வழங்கப்படும். 2020 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி தொடக்கம் 2021 மார்ச் 01 ஆம் திகதி வரையில் பயிற்சி வழங்கப்படும். …

மேலும் வாசிக்க

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து 8 பேர் கொண்ட குழு களேபரம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களைத் தாக்கியும் அச்சுறுத்தியும் உள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, அச்சுவேலி-தெல்லிப்பளை வீதியில் கடந்த 16ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதனைச் செலுத்தியவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். …

மேலும் வாசிக்க

பொது மக்கள் மத்தியில் அமைதியை பேணும் வகையில் அதிவிசேட வர்த்தமானியினை வெளியிட்டார் ஜனாதிபதி!

பொது மக்கள் மத்தியில் அமைதியை பேணும் வகையில் முப்படையினரை நாடு முழுவதும் ஈடுபடுத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன், குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 40ஆம் அத்தியாயத்தில், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தரைப்படை, கடற்படை மற்றும் வான்படை ஆகியவற்றுக்கு பொதுமக்களின் அமைதியைப் பேணுவதற்கான …

மேலும் வாசிக்க

யாழ், மட்டு மாவட்டங்களில் போட்டியிலிருந்து விலகுகின்றது பெரமுன..!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கின் சில இடங்களில் பொதுஜன பெரமுன போட்டியிடுவதில்லையென தீர்மானித்துள்ளது. அந்த பகுதிகளில் பெரமுனவின் பங்காளிக் கட்சிகள் தமது சின்னத்தில் போட்டியிடவுள்ளன. வடக்கு, கிழக்கில் பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்கி வாக்கு சேகரிப்பது, கல்லில் நார் உரிப்பதற்கு சமன் என்பது பெரமுனவிற்கு இப்பொழுது நன்றாகவே புரிந்துள்ளது.குறைந்த பட்சம் ஏதாவது அதிசயம் நிகழலாமென்ற பெரமுனவின் எதிர்பார்ப்பும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொய்யாகி விட்டது.இதையடுத்து, நாடாளுமன்ற …

மேலும் வாசிக்க