Latest News
Home / இலங்கை (page 400)

இலங்கை

இந்தியாவிலிருந்து நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றது ஒருதொகை மருந்து!

கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது விரிவாக விளக்கினார். கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது முதல் …

மேலும் வாசிக்க

ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 15 ஆயிரம் பேர் கைது!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 14 ஆயிரத்து 966 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 3,751 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) நண்பகல் 12மணி வரையான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில் இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான 06 மணித்தியால காலப்பகுதியினுள் …

மேலும் வாசிக்க

தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் அமுலானது!

நாட்டின் 19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் நண்பகல் 2 மணி தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டமே மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்த ஊரடங்கு சட்டம் மீண்டும் தளர்த்தப்படும் திகதி குறித்த அறிவிப்பு எதனையும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதுவரையில் வெளியிடவில்லை. எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் …

மேலும் வாசிக்க

தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி இருந்தமையை இந்நிலைக்கு காரணமாயிற்று – சுமந்திரன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தமையினாலேயே நாம் இந்த நிலைக்கு முகம் கொடுத்திருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிக்கைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் அவர் கூறிய சிறிய பகுதியை நாம் மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். அவர் மேலும் பதிலளிக்கையில், “மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான …

மேலும் வாசிக்க

நிர்ணய விலைக்கு மேல் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடன் அழையுங்கள்-அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்

வி.சுகிர்தகுமார் நிர்ணய  விலைக்கு மேல்  பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்களையோ அல்லது அளவைகள் நிறுவைகள் திணைக்கள அதிகாரிகளையோ அல்லது மாவட்ட செயலக அதிகாரிகளையோ உடன் அழையுங்கள் என தெரிவித்த அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் அவர்களது தொலைபேசி இலக்கத்தினையும் வழங்கினார். அம்பாரை மாவட்டத்தின் நிலைவரம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் மாவட்ட மட்ட கொரோனா …

மேலும் வாசிக்க

ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக கல்வி நடவடிக்கை – கல்வி அமைச்சர்

மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்க சவாலை பெற்றிக்கொள்ள முன்னெடுக்கும் திட்டங்களை பலவீனப்படுத்த வேண்டாம் என்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கொரோனா …

மேலும் வாசிக்க

நாட்டில் பருப்பு, வெங்காயம், டின் மீனுக்கு தட்டுப்பாடு

கடந்த வாரத்தில் இருந்து நாடு முழுவதும் பல பகுதிகளிலில் பருப்பு, வெங்காயம், டின் மீன் போன்ற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாட்கள் இந்தியா முடக்கப்பட்டமையினால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டது என்றும் இது பருப்பு, சிவப்பு வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் வேறு சில மசாலாப் பொருட்களின் இறக்குமதியை பாதித்தது என்றும் அறியமுடிகின்றது. இலங்கைக்கு பருப்பு, சிவப்பு வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் …

மேலும் வாசிக்க

தமிழ் புத்தாண்டின் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படும்?

இலங்கையில் குறைந்தளவான வைரஸ் பாதிப்புகள் உள்ள இடங்களில் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவினை தளர்த்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதுவரை நடைமுறையில் உள்ள ஊரடங்கு அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் ஊரடங்கு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், இலங்கையில் அதி அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட சில மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டடங்களில் கொரோனா வைரஸ் பரவல் அபாயம் குறைவாகவே …

மேலும் வாசிக்க

19 மாவட்டங்களில் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படுகின்றது ஊரடங்கு!

நாட்டின் 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை …

மேலும் வாசிக்க

இலங்கையில் உச்சம் கொடுக்கின்றது சூரியன்!

இலங்கையில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜனவரி 14ஆம் திகதி வரையில் சூரியன் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை நண்பகல் 12.13 மணிக்கு அம்பலங்கொடை, தல்கஸ்வல, பஸ்கொட, மித்தெனிய, உஸ்வெவ மற்றும் வீரவில ஆகிய இடங்களில் சூரியன் உச்சம் பெற்று காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, சப்ரகமுவ, மேல், வடமேல், மத்திய, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மன்னார் மற்றும் வவுனியா …

மேலும் வாசிக்க