Latest News
Home / இலங்கை (page 399)

இலங்கை

பெரும் சிக்கல் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்: வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை!

கொரோனா அச்சுறுத்தலினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக வேலையற்ற பட்டதாரிகள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் தொடர்பாக அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் க.அனிரன் விடுத்துள்ள அறிக்கையில், “ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் எமது நாடு கொரோனா தொற்றினால் பாதுகாக்கப்பட்டுவருகின்றது. அது அனைவரும் அறிந்த விடயமே. இவ்வாறான விடயங்கள் நாட்டிற்கு …

மேலும் வாசிக்க

ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது: ஊரடங்கு நேரம் அதிகரிப்பு!!!!எத்தனை மணிவரை???

19 மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 04 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸை அடுத்து அதி அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய பகுதிகளும் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு …

மேலும் வாசிக்க

18 ஆயிரம் பேர் இதுவரை கைது – பொலிஸார்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 18 000 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு 4,667  வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (08) நண்பகல் 12மணி வரையான காலப்பகுதியினுள்ளேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில் கடந்த 19 நாட்களில் 18 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் …

மேலும் வாசிக்க

பருப்புக்கு ‘கட்டை’ எனப் பெயர் வைத்துள்ள சில மொத்த வியாபாரிகள்: மக்கள் அவசர கோரிக்கை!

நாடு முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தால் விலை நிர்ணயிக்கப்பட்ட  சில பொருட்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள சில மொத்த வியாபாரிகளினால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் முறைப்பாடு அளித்துள்ளனர். அத்துடன் அரசாங்கத்தால் விலை நிர்ணயிக்கப்பட்ட சில பொருட்களை விற்பனை செய்யாமல் வியாபார நிலையங்களின் களஞ்சிய பகுதிகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 65 ரூபாய் நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்ட பருப்பு …

மேலும் வாசிக்க

ஜனாதிபதி கோட்டாவிற்கு இருக்கும் நிதி அதிகாரம் இம்மாதம் மட்டுமே – சுமந்திரன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தற்போது இருக்கும் நிதி அதிகாரம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னர் இருக்காது என்பதனாலேயே அந்த அதிகாரத்தை பயன்படுத்த நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க சட்டம், நீதி மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் முறையே இயங்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். …

மேலும் வாசிக்க

இலங்கையில் இணையம் ஊடாக கொள்வனவு செய்யும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

சமகாலத்தில் இணையம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யும் பொதுமக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையம் ஊடாக விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடும் சில்லறை விற்பனையாளர்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. பொருட்களை வாங்குவதற்கு இணையம் ஊடாக பணம் செலுத்துவது குறித்து பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொது மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அவ்வாறு விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் நிரந்தர முகவரியை உறுதி செய்த பின்னர் இணையம் …

மேலும் வாசிக்க

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு…

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் கொரோனா தொற்றுநோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட 180 பேரில் 132 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் 750 தனிமைப்படுத்தல் நபர்கள் உட்பட அவர்களின் குடும்பம் சார்ந்த 2000 இற்கும் அதிகமானவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்…

வி.சுகிர்தகுமார்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் தற்போதைய நிலையில் 750 தனிமைப்படுத்தல் நபர்கள் உட்பட  அவர்களின் குடும்பம் சார்ந்த 2000 இற்கும் அதிகமானவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.சுகுணன் தெரிவித்தார். அக்கரைப்பற்றில் இடம்பெற்ற அம்பாரை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார். இதேநேரம்  அம்பாரை மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா தொற்றுள்ள யாரும் …

மேலும் வாசிக்க

குடும்பத்தகராறு காரணமாக காரைதீவு12 இல் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை!

சம்மாந்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காரைதீவில் குடும்பத்தகராறு காரணமாக நபர் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று (07) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது. சனசமூக வீதி காரைதீவு12 வசித்துவந்த 42வயது நிரம்பிய கிருஸ்ணபிள்ளை தட்சணாமூர்த்தி (கண்ணன்) என்ற 3 ஆண் பிள்ளைகள் 2 பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில். சம்பவ இடத்திற்கு காரைதீவு தவிசாளர் …

மேலும் வாசிக்க

கனடாவில் இலங்கைத்தமிழர் ஒருவர் அடித்து கொலை…

    கனடாவில் ஸ்காபுரோவில் Finch Avenue East And Bridletowne Circle பகுதியில் நேற்றுமுன்தினம் நிகழ்ந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நபர் இலங்கை தமிழர் என ரொரண்ரோ பொலிஸார் உறுதிசெய்துள்ளனர். இரண்டு நபர்களின் கடுமையான தாக்குதலில் 58 வயதான கமலக்கண்ணன் அரசரட்ணம் உயிர் இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஞயிற்றுக்கிழமை 3.40 மணியளவில் மோதல் தொடர்பான தகவல் ரொரண்ரோ பொலிஸாருக்கு கிடைக்கபெற்றுள்ளது. உடனடியாக அங்கு சென்ற பொலிஸார் ஆபத்தான நிலையில் …

மேலும் வாசிக்க