Latest News
Home / இலங்கை (page 395)

இலங்கை

மே 23ஆம் திகதி பொதுத் தேர்தல்? தாமதித்தால் அது அரசுக்கு ஆப்பாக அமையும் என்பதால்

எதிர்வரும் மே 23ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தலாம் என அரசு உத்தேசமாகத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினத்தில் தேர்தலை நடத்தினால், அரசமைப்பு மீறல் எதுவுமில்லாமல் ஜூன் தொடக்கத்தில் – நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானியில் குறிப்பிட்டதைப்போல் – புதிய நாடாளுமன்ற அமர்வை கூட்டலாம் என்று அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா அச்சுத்தலால் நாடாளுமன்றத் தேர்தலைப் பிற்போட வேண்டும் எனப்  பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போதைக்கு தேர்தலை நடத்துவது பொருத்தமானதல்ல …

மேலும் வாசிக்க

ரிசாட்டின் சகோதரருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் நேரடி தொடர்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாத் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட …

மேலும் வாசிக்க

நிந்தவூர் பகுதியில் சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தியவர் கைது!

பாறுக் ஷிஹான் சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய ஒருவரை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் இச்சம்பவம்  சம்பவம் அம்பாறை மாவட்டம் ஒலுவில் நிந்தவூர் பிரதான வீதியில் உள்ள கழியோடை  பாலத்தில் சம்மாந்துறை பொலிசாரினால் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட சோதனைச்சாவடியில் புதன்கிழமை(14) அதிகாலை இச்சந்தேக நபர் கைதானார்.  வீதிச் சோதனைச் சாவடியில் ஈடுபட்டிருந்த சம்மாந்துறை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  தொழிலில் இருந்து நீக்கப்பட்ட குறித்த சந்தேக நபர் சமுர்த்தி …

மேலும் வாசிக்க

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக்கான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இடமில்லை…!

கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து தம்மை மீட்டுக்கொள்ள சகல நாடுகளும் செயற்பட்டு வருகின்ற நிலையில் வளர்சிகண்டுவருகின்ற நாடுகளுக்கு உதவும் விதத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நெருக்கடிகளை சந்திக்கும் நாடுகளுக்கு கடன் உதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நாடுகளில் இலங்கை உள்வாங்கப்படவில்லை. இதில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து  மறுசீரமைக்கப்பட்ட பேரழிவு கட்டுப்பாடு மற்றும் நிவாரண …

மேலும் வாசிக்க

பொலிஸாரின் 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை – சுமார் 1000 ற்கும் மேற்பட்டவர்கள் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக பொலிஸார் மேற்கொண்ட 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சுமார் 1001 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்குச் சட்ட அனுமதிபத்திரமின்றி வீதிகளில் நடமாடியவர்களும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை 6 மணி முதல் நேற்று வரை பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை …

மேலும் வாசிக்க

இடர் வலையங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை ஊரடங்கு நீக்கம்

இடர் வலையங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) ஊரடங்கு உத்தரவு தற்காலிகமாக நீக்கப்படுகின்றது. அந்தவகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை அமுல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏனைய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 4 மணிக்கு மீண்டும் …

மேலும் வாசிக்க

ஊரடங்கு நேரத்தில் சீட்டு விளையாடியோருக்கு பொலிஸார் எச்சரிக்கை.

கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக்காக, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் பொதுமக்கள் வெளியில் செல்வதையும், ஒன்று கூடுவதையும் தவிர்க்கும் படி பொலிஸார் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர். அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் பகல் மற்றும் இரவு வேளைகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பொலிஸ் பிரிவில் நேற்றிரவு சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட குழுவினரை மடக்கிப் பிடித்த பொலிஸார் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து வீடுகளுக்கு …

மேலும் வாசிக்க

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – அம்பாறை மாவட்டத்தில் இராட்சத முதலை யானைகள் சுதந்திரமாக நடமாட்டம்!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தை அண்டிய பிரதான வீதி ஊடறுத்து செல்லும் கழியோடை ஆற்றில் அதிகளவிலான முதலைகள் பெருகி வருகின்றது. இப்பகுதியில் தற்போது பெய்த மழை காரணமாக ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதுடன் மக்களின் நடமாட்டம் இன்மையினால் வீதியோரங்களில் நடமாடி திரிகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமான சுமார் 9, 5,4அடி நீளமுடைய முதலைகள் …

மேலும் வாசிக்க

ரஞ்சனுக்கு ஏப். 20 வரை விளக்கமறியல்

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. அவர் நேற்று (14) நுகேகொடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.. முன்னாள் எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், மாதிவலவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியில் வைத்து நேற்று (13) மாலை 7 …

மேலும் வாசிக்க

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய ஆயுர்வேத மருந்துகள் கையளிப்பு!

கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு   அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தின் ஒரு பகுதியில்  கடற்படையினரால்  பராமரிக்கப்படுகின்ற  தனிமைப்படுத்தல்  முகாம் வைத்திய பொறுப்பதிகாரியிடம்   நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய வகையில்  ஒரு தொகுதி  ஆயுர்வேத மருந்து வகைகள்  புதன்கிழமை(14) நண்பகல்   வழங்கி வைக்கப்பட்டது. கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இத்தனிமைப்படுத்தல் முகாமிற்கு  சென்று பராமரிப்பாளர் அங்கிகள் முகக்கச கண்ணாடிகள் உள்ளிட்ட …

மேலும் வாசிக்க