Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
இலங்கை – Page 390 – Website of Alayadivembu
Latest News
Home / இலங்கை (page 390)

இலங்கை

பாடசாலைகள் மே 11இல் ஆரம்பமாவது சந்தேகம்!!! – இராணுவத் தளபதி தெரிவிப்பு

“இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து மூடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது சாத்தியப்பட முடியாத நிலை உள்ளது.” – இவ்வாறு கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பாடசாலைகளின் வகுப்பறைகளில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார். …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி: தாக்குதலை மேற்கொண்டவர் கைது

வி.சுகிர்தகுமார் இக்கட்டான சூழ்நிலையிலும் உயிரையும் மதிக்காது அர்ப்பணிப்பான சேவையை வழங்கிவரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதல்  அதிகரிக்கப்பட்டு வருகின்றது. அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அக்கரைப்பற்று நகர் பிரிவு 5இல் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மீதாக நேற்று(22) மாலை இடம்பெற்ற தாக்குதல் இதனை உறுதி செய்யும் வண்ணம் அமைந்துள்ளது. இதனால் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் தமது பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்ந்து …

மேலும் வாசிக்க

கொரோனா வைரஸ் சுகாதார விழிப்புணர்வு-எச்சரிக்கை செய்யப்பட்ட கல்முனை பிரதேச வர்த்தகர்கள்!!!

பாறுக் ஷிஹான்   கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கல்முனை பிராந்தியத்தில்  சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தி   விழிப்புணர்வு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டதுடன் சுகாதார நடைமுறையை கடைப்பிடிக்காதவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர். வியாழக்கிழமை(23) நண்பகல் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்வின் தலைமையிலான  பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் பொலிஸார் இணைந்து  இச்சுகாதார விழிப்பூட்டல் செயற்பாட்டில் ஈடுபட்டனர் குறிப்பாக  இலங்கை போக்குவரத்து பேருந்துகள்  தனியார் …

மேலும் வாசிக்க

உணவு ஒவ்வாமையால் 11 வயது சிறுவன் பரிதாப மரணம் ; சோகத்தில் மட்டக்களப்பு மக்கள்

உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் 11 வயதுடைய அன்புமாரன் கோகுல் என்ற சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் வயிற்றோட்டம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த குடும்பத்தின்‌ 10 வயதுடைய சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த சனிக்கிழமை கல்லடி பகுதியில் …

மேலும் வாசிக்க

அழகு நிலையங்கள் சிகை அலங்கார நிலையங்களை திறக்க அனுமதி இல்லை!!!

பாறுக் ஷிஹான் சிகை அலங்கார நிலையங்களிலிருந்து தொற்றுகள் ஏற்படலாம் என்ற காரணம் பலமாக உள்ளமையினால்  சுகாதார அமைச்சின் அறிவுரைக்கு அமைய எமது பிராந்தியத்திலும் சகல சிகை அலங்கார நிலையங்களும் அழகு நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன என என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட  கொரோனா தொற்று தொடர்பில்   தொடர்பாக வெளிவந்த செய்தி  தொடர்பாக வியாழக்கிழமை(23)  கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனது …

மேலும் வாசிக்க

பொலனறுவை உள்ளிட்ட 16 மாவட்டங்கள் பாதிப்பு – கொழும்பு, களுத்துறையில் கொரோனா தொற்று அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 16 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. வெலிசறை கடற்படை முகாமில் மின்சார தொழில்நுட்பப் பிரிவில் கடமையாற்றும் 32 வயதான சிப்பாய் ஒருவர் விடுமுறைக்காக பொலனறுவை – புலஸ்திகம பகுதியிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் திடீர் சுகயீனமுற்று பொலனறுவை வைத்தியசாலையில் நேற்று (22) கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பொலனறுவை மாவட்டத்தில் இருந்து பதிவாகிய முதல் கொரோனா வைரஸ் தொற்றாளராவார். இதையடுத்து கொரோனா தொற்றுக்கு இலக்காகிய …

மேலும் வாசிக்க

புதிய பட்டதாரிகள் நியமனம் ரத்து செய்யப்படவில்லை- இடை நிறுத்தப்பட்டது உண்மை: கருணா

பாறுக் ஷிஹான் பட்டதாரி நியமனங்கள் என்பது ரத்து செய்யப்படவில்லை இதனை பட்டதாரிகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். பொதுத்தேர்தல் தொடர்பில்  தனது  கட்சி ஆதரவாளர்களுடன்  சந்திப்பில்  ஈடுபட்ட பின்னர்   அம்பாறை மாவட்டம்   கல்முனையில் அமைந்துள்ள  புதன்கிழமை(22)  ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் பட்டதாரி …

மேலும் வாசிக்க

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். இதற்கமைய பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள், தங்களது விண்ணப்பங்களை மே மாதம் 4ஆம் திகதிக்கு முன்னதாக மாவட்டத் தேர்தல்கள் காரியாலயங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அவர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே தபால்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அன்றைய தினம் அரசாங்க விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் அதற்கான …

மேலும் வாசிக்க

மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவதற்கு தடை!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில், கல்வி, கல்விசாரா ஊழியர்களுக்காக மீள பல்கலைக்கழகங்களை திறக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அறிவிப்புக்களுக்கு அமையவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இவ்வாறு தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இணையங்கள் ஊடாக மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளைத் தொடர …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவருக்கு நெகடிவ் பெறுபேறு!!

பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட  இரண்டு   சந்தேக நபர்களில் ஒருவருக்கு நெகடிவ் பெறுபேறு தற்போது வெளியாகியுள்ளது  என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட  கொரோனா தொற்று தொடர்பில்   அடையாளப்படுத்த நபர்கள்  தொடர்பாக வெளிவந்த செய்தி  தொடர்பாக வியாழக்கிழமை(23)  கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனது கருத்தில் கல்முனை பிராந்திய  சுகாதார பணிமனைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் …

மேலும் வாசிக்க