Latest News
Home / இலங்கை (page 108)

இலங்கை

தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணம் தயார் !

தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணத்தைத் தயாரிக்கும் முயற்சியில் புதிய நகல் ஒன்று இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆவணம் தமிழ்த் தரப்புக் கட்சித் தலைவர்களின் பரிசீலனைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) புதிய நகல் ஆவணம் தயாரிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய ஆவண நகல் தயாரிப்புக்காக தமிழ் …

மேலும் வாசிக்க

பொது இடங்களுக்கு செல்லும்போது தடுப்பூசி அட்டை அவசியமா – அரசாங்கத்தின் அறிவிப்பு!

பொது இடங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் நடைமுறை பல தரப்பினரால் தாமதமானது. இந்நிலையில், இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்தையும் இறுதி செய்ய குறைந்தது இன்னும் இரண்டு வாரங்கள் ஆகுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தடுப்பூசி அட்டையை எடுத்துச்செல்வது அவசியமா அல்லது QR குறியீட்டை அறிமுகப்படுத்துவது போன்ற பிற காரணிகள் இன்னும் இறுதி செய்யப்பட வேண்டும் என்று விளக்கினார். தடுப்பூசி அட்டையை எடுத்துச் …

மேலும் வாசிக்க

அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்!

தெற்காசிய பிராந்தியத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. 2021 நவம்பரில் 9.9% ஆக இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் 2021 டிசம்பரில் 12.1% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் பணவீக்க விகிதத்தில் இலங்கை 20ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

இலங்கையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவு

2015 ஆம் ஆண்டளவில் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆண்களின் எண்ணிக்கை 15 வீதத்தில் இருந்து தற்போது 9.1 வீதம் வரை குறைந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் புகையிலை மற்றும் மதுபானப் பாவனையை குறைப்பதற்காக, புகையிலைக்கான புதிய வரி சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபையின் தலைவர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்க …

மேலும் வாசிக்க

தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாயம்: சம்பந்தன்

அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் திட்டமிட்ட வகையில் இனமுறுகலை ஏற்படுத்தி சிங்களக் கடும் போக்குவாதிகள் முன்னெடுத்த அரசியலை மறக்க கூடாது என்றும் சுட்டிக்காட்டினார். ஆகவே வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்கள் கடந்தகாலத் துன்பியல் நிகழ்வுகளை மறந்துவிட்டு தீர்வை வென்றெடுக்க ஓரணியில் பயணிக்க …

மேலும் வாசிக்க

நல்லூர் ஆலயத்தில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும் நடைமுறையே இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆலயத்துக்கு சால்வையை அணிந்து சென்று வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் அதனை பை ஒன்றிலிட்டு வழங்கப்பட்ட இடத்திலுள்ள பெட்டியில் மீள வைக்க வேண்டும் என்று …

மேலும் வாசிக்க

எதிர்காலப் புத்தெழுச்சிக்காக நாம் உறுதியுடன் இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன் – ஜனாதிபதி!

மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கைமற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது புதுவருட வாழ்த்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நாட்டின் மீதும் எமது சமூகத்தின் மீதும் கடந்த ஆண்டு ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். எதிர்காலப் புத்தெழுச்சிக்காக நாம் உறுதியுடன் இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். இந்தச் …

மேலும் வாசிக்க

ஜப்பானில் இலங்கையர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகள்….

இலங்கையர்களுக்கு அதிகளவான தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கு ஜப்பான் செயற்பட்டு வருவதாகவும், ஜப்பானிய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குவதாகவும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Mishukoshi Heidiaki தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு ,70 வருடங்கள் 2022ஆம் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, கண்டி புனித தலதா மாளிகை வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். தலதா மாளிகைக்கு வருகை தந்த தூதுவரை, சர்வதேச அலுவல்கள் அமைச்சின் செயலாளர் …

மேலும் வாசிக்க

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய IOC உடன் ஒப்பந்தம்

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தில் உள்ள 61 தாங்கிகளை லங்கா ஐஓசி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 51 வீத பங்குகளை கொண்ட புதிய நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்த தாங்கிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என …

மேலும் வாசிக்க

நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது – பந்துல

நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹம்பேகமுவ சதொசவை திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மக்கள் பட்டினி கிடக்காமல் இருப்பதற்கான பொறுப்பை அமைச்சர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதால், இந்த நாட்டில் உள்ள மக்களை பட்டினி கிடக்க அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க