Latest News
Home / இலங்கை (page 110)

இலங்கை

சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதா? இல்லையா?

பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீடிப்பதா? இல்லையா என்பது தொடர்பில் ஜனவர மாதம் 6 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் வரை தற்போதைய …

மேலும் வாசிக்க

இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள்!

இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் விவசாய அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி.பண்டாரநாயக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த நியமனம் அமுலுக்கு வரும் என ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப எதிர்வரும் புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, கட்டண திருத்தம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க

இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டிற்கு கடந்த 20 நாட்களில் மாத்திரம் 47 ஆயிரத்து 120 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று(புதன்கிழமை) இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 109 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் வாசிக்க

எரிவாயு நெருக்கடி – நாடு முழுவதுமுள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டன!

நாடு முழுவதுமுள்ள 7 ஆயிரம் பேக்கரிகளில் சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. எரிவாயு நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் ஏனைய பேக்கரிகளும் மூடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

13 தங்கப் பதக்கங்களை சுவீகரித்த மாணவி தணிகாசலம் தர்ஷிகா அவர்களுக்கு பா. உ கலையரசன் வாழ்த்து….

கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று அம்பாறை மாவட்ட அக்கறைபற்றினை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற மாணவி சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவிக்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றார். குறித்த வாழ்த்து செய்தியில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உள்ளடங்களாக 13 தங்கப்பதக்கங்களை பெற்று எமது அம்பாறை மாவட்டத்திற்கும் அனைத்து தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துதந்த கொழும்பு …

மேலும் வாசிக்க

எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம் வௌியானது

அண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே இதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக ப்ரோபைன் என்றழைக்கப்படும் இரசாயன வாயுவின் அளவு அதிகரித்தமையே இந்த வெடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என அவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் இந்த ப்ரோபைனின் அளவு 30 வீதத்திற்கும் அதிகமான அளவில் நிரப்பப்பட்டுள்ளதாக …

மேலும் வாசிக்க

‘எரிபொருள் விலை அதிகரிக்க இதுதான் காரணமாம்’

அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும இதனை கூறினார். எரிபொருள் விலை அதிகரிப்பு பணவீக்கத்தில் 3 வீத தாக்கத்தை ஏற்படுத்தும் என மத்திய வங்கி கணித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

பேக்கரி உணவு பொருட்களின் கட்டுப்பாடு விலை நீக்கம்!!

பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு இனிவரும் காலங்களில் கட்டுப்பாட்டு விலை கிடையாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (21) நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்யப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க உரிமையாளர்களுக்கு முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இதேநேரம் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 25 …

மேலும் வாசிக்க

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி அதன் விலை 157 ரூபாவில் இருந்து 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 23 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 184 ரூபாவில் இருந்து 207 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 111 …

மேலும் வாசிக்க