Latest News
Home / இலங்கை (page 109)

இலங்கை

நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படாது….

நாட்டில் எந்தவித உணவு தட்டுப்பாடும் ஏற்படாது என்று விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன. இந்த போகத்தில் பொதுவாக 4.3 தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுகின்றது. கனிம உரம் பயன்படுத்தப்பட்டு சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த வருடம் முதல் மனை உற்பத்தி திட்டத்தை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படவுள்ளது. வீட்டுத்தோட்டத்தின் மூலம் …

மேலும் வாசிக்க

தனியார் பாதுகாப்புத்துறை ஒரு வளர்ந்து வரும் தொழில்துறையாகும் – பாதுகாப்புச் செயலாளர்

தனியார் பாதுகாப்புத் தொழிற்துறை, வளர்ந்து வரும் ஒரு துறையாகும், தேசிய பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வதால் இவர்களினால் நாட்டிற்கு வழங்கப்படும் சேவை அளப்பரியது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். “பொருளாதாரத்திற்கு பங்களிப்பது மற்றும் நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்பன தவிர மிக முக்கியமாக, இலங்கை படைத்தரப்பில் சேவையாற்றிய வீரர்ககளைக் கொண்டு தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிக பங்களிப்பை …

மேலும் வாசிக்க

நட்டத்தில் இருந்து சதொசவை மீட்டெடுத்த ஊழியர்களுக்கு “போனஸ்”

தொடர்ந்து இரண்டு வருடங்களாக நட்டத்தில் இயங்கிய சதொச நிறுவனம் இந்த வருடம் 100 மில்லியனுக்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியுள்ளது. அதனால் இந்த டிசம்பர் மாதத்தில் அனைத்து ச.தொ.ச ஊழியர்களுக்கும் தலா 28,500 வீதம் மேலதிக கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஒரு நிறுவனம் இலாபம் ஈட்டும் போது அதன் இலாபத்தில் ஒரு பகுதியையாவது அதன் ஊழியர்களுக்கு ஒதுக்குவதை உறுதிப்படுத்துமாறு வர்த்தக அமைச்சர் நிறுவனங்களின் …

மேலும் வாசிக்க

விடுமுறை வழங்காததால் துப்பாக்கிச்சூடு – உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக …

மேலும் வாசிக்க

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு : அரசாங்கம் அறிவிப்பு!!

அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட முற்கொடுப்பனவொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி, 4000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இக் கொடுப்பனவு விசேட கொடுப்பனவாக அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

மேலும் வாசிக்க

குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் பண்டிகைகளை கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு அறிவிப்பு

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கருத்திற்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் பண்டிகைகளை கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களுடன் பார்ட்டிகள் மற்றும் ஒன்றுகூடல்களை மட்டுப்படுத்துமாறு அந்த அமைச்சு மக்களை வலியுறுத்தியுள்ளது. அத்தகைய விருந்துகளும் சுகாதார வழிகாட்டுதல்களை கடுமையாகப் பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பதுவன்துடாவ வலியுறுத்தினார். கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற தகுதியுடையவர்கள் கூடிய விரைவில் …

மேலும் வாசிக்க

அரச வைத்திய அதிகாரிகளுக்கு எந்தவொரு அநீதியும் இழைக்கப்படவில்லை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்திருக்கும் பணிப்பகிஷ்கரிப்புநான்காவது நாளாக இன்றும் இடம்பெறுகின்றது 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுகிறது. பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களின் கோரிக்கைகளை அவதானிக்கும் போது, அவர்களுக்கு எந்தவொரு அநீதியும் இடம்பெறவில்லை என்று சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அநீதி இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்ட முடியுமாயின் அதை சரி செய்வதற்குப் பின்னிற்கப் போவதில்லை என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். இது பற்றி பேச்சுவார்த்தை நடத்த …

மேலும் வாசிக்க

தமிழக மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து நாளை போராட்டம்!

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் நாளைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம்(வியாழக்கிழமை) யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சம்மேளனத்தின் தலைவர் அன்னராசா, “நாம் இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் போராட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம். …

மேலும் வாசிக்க

கும்பாபிஷேக சர்ச்சையை தீர்த்துவைத்த ஆலயமணி மடத்தடியில் சம்பவம் அதிசயம் ஆனால் உண்மை..

கும்பாபிசேகத்திற்காக கூட்டிய கூட்டத்தில் எழுந்த ஒரு சர்ச்சையை அங்குள்ள ஆலயமணி தானாக திடீரென ஒலித்து தீர்த்துவைத்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இச்சம்பவம் வரலாற்றுப்பிரசித்திபெற்ற நிந்தவூ10ர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சிஅம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது. எந்தவொரு தூண்டியுமில்லாமல் தானாக ஆலயமணி ஒலித்தமை தொடர்பில் கூட்டத்தில் கூடியிருந்;த அனைவரும் ஒருகணம் அதிர்ச்சியடைந்தார்கள்.ஆச்சரியப்பட்டார்கள். அதிசயம் ஆனால் உண்மையான சம்பவம். அங்கு புதியஆலயத்தில் புதியஅம்மன்சிலையை வைப்பதா? பழையஆலய அம்மன்சிலையை வைப்பதா? என்ற சர்ச்சை எழுந்தது.ஒருமணிநேரம் கூட்டத்திலிருந்தோரது கருத்துக்கள் …

மேலும் வாசிக்க

சட்ட விரோத சொத்து :1917 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்க

சட்ட விரோதமாக அல்லது அசாதாரணமாக சொத்துக்கள் சேகரித்துள்ளமை தொடர்பான நியாயமான சந்தேகத்திற்குரிய தகவல்கள் இருக்குமாயின், அது தொர்பாக 1917 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலமும் செயல்படும். சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு சொத்துக்களை சேகரிக்கின்றமை கண்கானிக்கப்பட்டமையினால், அது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய தகவல்களை விசாரணை செய்வதற்காக சட்ட …

மேலும் வாசிக்க