Latest News
Home / இலங்கை (page 100)

இலங்கை

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச சூரியக்கலங்களை வழங்க நடவடிக்கை

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச சூரியக்கலங்களை வழங்க மின்சக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சரான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இதற்கமைய , 5W, 10W மற்றும் 15W மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சூரியக்கலங்கள் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், அவை இலவசமாக நிறுவப்படவுள்ளன. மேலும், சுமார் 5W சூரியக்கலங்களைப் பெறுபவர்களுக்கு 1500 …

மேலும் வாசிக்க

வைத்தியசாலைகளில் A/L பரீட்சை மையங்கள்

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் ‘கொவிட்’ வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பல நாட்களாக நடைபெறும் பரீட்சை என்பதனால் அதற்கென தனியான வைத்தியசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் அந்த வைத்தியசாலை பரீட்சை நிலையமாக செயற்படவுள்ளதாக …

மேலும் வாசிக்க

நெருக்கடி நிலையிலும் மருந்துகள் மீதான கட்டுப்பாட்டுவிலை நீக்கப்படாது – அரசாங்கம்

அந்நிய செலாவணி நெருக்கடியால் ஏற்பட்ட சிரமங்களுக்கு மத்தியிலும், இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளுக்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துகளுக்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது பெரும்பாலான மக்கள் மீது பாரிய சுமையை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார். நாட்டிற்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான மருந்துகளை இறக்குமதி செய்யும் இலங்கை மருந்துத் தொழிற்துறை சம்மேளனம், இதற்குரிய நடவடிக்கையை எடுக்காதுவிட்டால் …

மேலும் வாசிக்க

புலமைப்பரிசில் பரீட்சை – பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நிறைவடையும் வரை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துதல், ஒழுங்குபடுத்தல், பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துதல், குறித்த பரீட்சைகள் தொடர்பான மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல், விநியோகித்தல், பரீட்சைகள் தொடர்பான அனுமான வினாக்களை வழங்குதல், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், …

மேலும் வாசிக்க

முழுமையாக ஸ்தம்பிக்கப்போகும் இலங்கை : அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

இலங்கையில் எரிபொருள் கையிருப்பு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதி செய்யப்படும் டீசல் கையிருப்புகளை இலங்கை மின்சார சபையிடம் ஒப்படைத்தால் மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்க முடியாத நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் மின்சாரத்திற்காக எரிபொருள் வழங்கப்படவில்லை எனவும், டொலர்களை வழங்கினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளை இலங்கை மின்சார சபையிடம் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …

மேலும் வாசிக்க

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஆவணம் இந்தியத் தூதுவரிடம் கையளிப்பு

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த இந்தியா உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ் கட்சிகள் இணைந்து இந்த ஆவணத்தை தயாரித்தன. இந்நிலையில் இன்று கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் கோபால் பாக்லேவை சந்தித்த போதே குறித்த ஆவணம் இரா.சம்பந்தனால் கையளிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், …

மேலும் வாசிக்க

12 மணி நேரத்தில் ரூ 2,805,100 லட்சம் வருமானம்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) 15 ஆம் திகதி அன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுசரணையின் கீழ் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. பாதை திறக்கப்பட்ட முதல் 12 மணிநேரத்தில் ரூ. 2,805,100.00 லட்சம் வருமானம் கிடைத்ததாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மீரிகம முதல் குருநாகல் வரையிலான அதிவேக நெடுஞ்சாலையில் முதல் 12 மணித்தியாலங்களில் 13,583 வாகனங்கள் …

மேலும் வாசிக்க

மைத்திரி தலமையிலான சு.க. அடுத்த தேர்தலில் தனித்து களமிறங்குகின்றது !

எதிர்வரும் தேர்தலில் தனிக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச இதனை தெரிவித்தார். 5,000 மேலதிக கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளபோதும் மக்கள் தொகையில் 7 விகிதமானோர் மட்டுமே அரசுத்துறை ஊழியர்கள் என சுட்டிக்காட்டினார். மேலும் அரசாங்கம் தொடர்ந்து அச்சிட்டே 5,000 ரூபாயை வழங்குகின்றது என்றும் …

மேலும் வாசிக்க

அம்பாறை நிந்தவூர் மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பெளர்ணமி பூசை நிகழ்வு பெரும் சிறப்பாக இடம்பெற்றது….

ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை நிந்தவூர் மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பெளர்ணமி பூசை நிகழ்வு இன்றைய தினம் (17) பெரும் சிறப்பாக இடம்பெற்றது. இவ் பெளர்ணமி பூசை நிகழ்வில் பெரும் தொகையான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றதுடன். இவ் ஆலயத்தின் கும்பாபிஷேகமானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற உள்ளநிலையில். பூஜை நிறைவுற்றதும் ஆலய தலைவர் கே.ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்ற பக்தர்களுடனான …

மேலும் வாசிக்க

அம்பாறையில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி!

அம்பாறையில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் மூவர் உயிரிழந்துள்ள நிலையிலி் மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். அம்பாறை, தமன பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க