Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
இலங்கை – Page 90 – Website of Alayadivembu
Latest News
Home / இலங்கை (page 90)

இலங்கை

மின்தடை ஏற்பட காரணம் இதுதான் – வௌியான புதிய தகவல்!

கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடைதான் சமீபத்திய மின்வெட்டுக்கு முக்கியக் காரணம் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த திடீர் மின் தடை காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், குறித்த திடீர் மின்தடை நாசகார வேலை என தற்போது தகவல் வெளியாகியுள்ளதாக ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு …

மேலும் வாசிக்க

இலங்கை டிஜிட்டல் அடையாள அட்டைக்கு இந்தியா உதவி!

இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு இந்திய உதவியை பெறுவதற்கு இரு நாடுகளும் உடன்படிக்கைக்கு வரவுள்ளன. அதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாட்டிலுள்ள தனிநபர்களின் பயோமெட்ரிக் தரவுகளின் அடிப்படையில் தனிநபர்களின் அடையாளத்தைச் உறுதிப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். டிஜிட்டல் மற்றும் உடல் சூழல்களில் ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய அடையாளங்காணல் இந்த டிஜிட்டல் அடையாள கட்டமைப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 2019 டிசம்பரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் …

மேலும் வாசிக்க

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக மீண்டும் துசித்த பி. வனிகசிங்க நியமனம்…

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அவர் நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார். இலங்கை நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாாியான துசித்த பி. வனிகசிங்க, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளதுடன், அரச நிறுவனங்கள் பலவற்றிலும் பல்வேறு பதவிநிலைகளை வகித்தவராவார். 2019 டிசெம்பர் மாதத்தில், கிழக்கு மாகாண பிரதம …

மேலும் வாசிக்க

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!

இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (07) காலை ஆரம்பமாகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸார், முப்படையினர் மற்றும் சுகாதார திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். இன்று முதல் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறுகிறது. இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 2,438 நிலையங்களில் மொத்தம் 345,242 மாணவர்கள் தோற்றவுள்ளனர். கொரோனா …

மேலும் வாசிக்க

பரீட்சைக்கு தோற்றும் சிறை கைதிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் இருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகள் இருவரும் 43 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மெகசின் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் இவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

3 தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் பயணிக்க முடியும்?

பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், சுகாதாரத் துறையிலிருந்து சுற்றறிக்கை அல்லது விழிப்புணர்வை மேற்கொண்டால், மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என்ற வழிமுறையை கடைப்பிடிக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். ஏனெனில் இது ஒரு …

மேலும் வாசிக்க

லங்கா சதொச மூலம் 998 ரூபாவிற்கு புதிய நிவாரண பொதி!

லங்கா சதொச ஊடாக ஐந்து உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்று 998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக அவர் கூறினார். வர்த்தக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார். இந்த நிவாரண பொதியில் 5 கிலோகிராம் நாட்டரிசி, 400 கிராம் நூடில்ஸ், 100 கிராம் நெத்திலி, 100 கிராம் தேயிலை …

மேலும் வாசிக்க

கிழக்கு மாகாண மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கலாநிதி.எம். கோபாலரெட்ணம் நாளை பதவியேற்பு….

கிழக்கு மாகாண மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கலாநிதி. எம்.கோபாலரெட்ணம் அவர்கள் நாளை 07.02.2022 திங்கட்கிழமை பி.ப 12.30 சுபநேரத்தில் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார். திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் பொதுச்சேவை ஆணைக்குழு அலுவலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் இதன்போது கலந்துகொள்ளவுள்ளனர். மட்டக்களப்பு செட்டிபாளையத்தினை பிறப்பிடமாக கொண்ட இவர் மூத்ததம்பி செல்லம்மா தம்பதியினரின் …

மேலும் வாசிக்க

அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா மற்றும் அவுஸ்ரேலியாவிடம் கடன் உதவிகளைப் பெற நடவடிக்கை

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதிக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்காக இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளிடம் கடன் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரையும் அவுஸ்ரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் டொலரையும் கடனாக பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அரிசி, பருப்பு மற்றும் மருந்து உட்பட அத்தியாவசியப் …

மேலும் வாசிக்க

3 தடுப்பூசிகளையும் பெறாதவர்கள் குறித்த சட்டமுலம்

மூன்று கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் அண்மையில் வெளியிட்டுள்ளமை சட்டத்திற்கு உட்பட்டது என ஜனாதிபதி சட்டதரணி யூ ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார். சில விதிமுறைகளுக்கு உட்பட்டு மக்கள் நலன் பேணுவது மிகவும் அவசியமான போது சுகாதார அமைச்சர் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க