Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
இலங்கை – Page 106 – Website of Alayadivembu
Latest News
Home / இலங்கை (page 106)

இலங்கை

பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும்- இறக்குமதியாளர்கள் சங்கம்

பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அஷோக பண்டார மேலும் கூறியுள்ளதாவது, “பால்மா ஏற்றிய கப்பல்கள் இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ பால்மா வர இருக்கின்றது. மேலும் டொலர் தட்டுப்பாடு காரணமாகவே கடந்த 31 ஆம் திகதி முதல் பால்மா விலையினை அதிகரிப்பதற்கு அதன் இறக்குமதியாளர்கள் தீர்மானித்தனர். …

மேலும் வாசிக்க

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் சுற்றுநிருபம் இன்று!

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் சுற்றுநிருபம் வௌியிடப்படவுள்ளது. இன்று(வியாழக்கிழமை) குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்படவுள்ளதாக பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 வரவு செலவுத் திட்ட யோசனைக்கமைய இந்த சுற்றுநிரூபம் வௌியிடப்படவுள்ளது. எவ்வாறாயினும், அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் திட்டத்திற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது. ஓய்வுபெறும் வயது …

மேலும் வாசிக்க

12-15 வயதுடையோருக்கு 7ஆம் திகதி முதல் தடுப்பூசி!

நாட்டில் 12 தொடக்கம் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 7ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முதல் குறித்த வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

இன்று முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

பேருந்து கட்டண உயர்வு இன்று (05) முதல் அமலுக்கு வருகிறது. புதிய கட்டணங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. 14 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இன்று முதல் 17 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பேருந்து கட்டணம் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் பயணிகள் சேவை அனுமதிப் பத்திரத்தின் கீழ் பயணிக்கும் தனியார் பேருந்துகளுக்குப் பொருந்தக்கூடிய பொதுவான சேவைக் கட்டணங்களின் பட்டியலை கீழ் …

மேலும் வாசிக்க

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் தரம் – 5ம் ஆண்டு மாணவர்களுக்கான விசேட செயலமர்வு….

45 வருடங்களாக பிரித்தானியாவிலிருந்து பல சமய, சமூக பணிகள் மட்டுமன்றி பல கல்விச் சேவைகளையும் செய்துவரும் சைவ முன்னேற்றச் சங்கத்தினால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய மாகாணங்களிலிருந்து விண்ணப்பித்திருந்த பிந்தங்கிய 142 பாடசாலைகளைச் சேர்ந்த தரம் – 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 4862 மாணவர்களுக்கான விசேட செயலமர்வை நடாத்தி வருகின்றது. அதில் ஒரு கட்டமாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள பாடசாலைகளுக்கான செயலமர்வுக்கான வினாத்தாள்களை …

மேலும் வாசிக்க

10ஆம் திகதி முதல் சாதாரண நடைமுறைகளுக்கு அமைய பாடசாலைகள் திறப்பு

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய, முதலாம் தரம் முதல் 13ஆம் தரம் வரையில் கல்வி நடவடிக்கைகளை சாதாரண நடைமுறைகளுக்கு அமைய முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனவினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனையடுத்து, சில கட்டுப்பாடுகளுடன் பாடசாலைகள் மீள திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

அரசாங்க ஊழியர்களுக்கு ஒவ்வொருமாதமும் ரூபா 5,000 விசேட கொடுப்பனவு: சமூர்த்தி பயனாளிகளுக்கும் ,தோட்டத்தொழிலாளர், விவசாயிகளுக்கும் நிவாரணம்

அரசாங்க ஊழியர்களுக்கு நேற்று முதல் ஒவ்வொருமாதமும் ரூபா 5000 கொடுப்பனவை வழங்குவதற்கு நேற்று (03) அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக நிதி அமைச்சர் பேசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இதற்கமைவாக சமூர்தி பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூபா 3500 க்கு மேலதிகமாக ரூபா 1000 மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படவிருப்பதாகவும் நிதி அமைச்சர் கூறினார். ஊனமுற்ற படைவீரர்களுக்காகவும் இந்த ரூபா 5000 வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துளள்து. இதற்கு மேலதிமாக அத்தியாவசிய அபாருட்கள் மீது விதிக்கப்பட்ட மேலதிக வரிகளையும் …

மேலும் வாசிக்க

சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்

ஜனாதிபதியினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் சட்டத்தரணி பணிக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டமையை ஊடகங்கள் மூலமே அறியக் கிடைத்தது என்றும் எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விவசாயமும் அரசாங்கத்தின் கொள்கை திட்டமும் தோல்வியடைந்துவிட்டன என்று பதிலளித்ததாக சுசில் பிரேமஜயந்த கூறினார். திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சில …

மேலும் வாசிக்க

பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைத்துள்ளது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. பிரதமருடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அரச மருத்துவ அதிகாரி சங்க இடமாற்ற சபை தொடர்பான  பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் நிர்வாக சபை வைத்திய உத்தியோகத்தர் தொடர்பாக ஆராயப் பிரதமர் குழுவொன்றை நியமித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு ஆகியவற்றின் உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் …

மேலும் வாசிக்க

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயத்தின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளது. இவற்றின் வர்த்தக பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதே இதற்கான காரணமாகும். நிதியமைச்சு கடந்த 31 ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட உருளை கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் சம்பந்தமாக சுங்கவரியை 30 ரூபாவினால் குறைத்திருந்தது. சந்தையில் இவற்றுக்கு இருந்த விலையை குறைப்பதே இதன் நோக்கமாகும். இதற்கமைவாக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நிதியமைச்சரின் அங்கீகாரத்துடன் சம்பந்தப்பட்ட வரி குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க