Latest News
Home / Kirishanth admin (page 3)

Kirishanth admin

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்ணான்டோ இதனை தெரிவித்தார். அதன்படி, 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 33.3 சதவீதத்தால் அது குறைக்கப்பட்டுள்ளதாக …

மேலும் வாசிக்க

பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலய 50 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கியது மட்டக்களப்பு Rotary கழகம்….

மட்டக்களப்பு Rotary கழகத்தினரினால் திருக்கோவில் கல்வி வலய பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட 50 இடைநிலை பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கான அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று (02.03.2024) பாடசாலையின் அதிபர் T.இந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

அதிகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள்!

இன்று (02) நள்ளிரவு முதல் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டார். உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிளேன்டி ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீர் …

மேலும் வாசிக்க

பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2024ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2024 செப்டம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை …

மேலும் வாசிக்க

ஊருக்கு பெருமை சேர்த்த ”கல்வியியலாளர்கள் கௌரவிப்பு விழா”

ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த ”கல்வியியலாளர்கள் கௌரவிப்பு விழா” ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் மற்றும் ”சத்தியம்”வாழும்போதே வாழ்த்துவோம் (இலண்டன்), அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்துடன் இணைந்து நேற்றய தினம் (28) பிற்பகல் 3.00 மணியளவில் அக்கரைப்பற்று சுவாமி விபுலாந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையம் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் த.கயிலாயப்பிள்ளை தலைமையில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தில் சிறப்பானதாக இடம்பெற்றது. நிகழ்வில் கௌரவிக்கப்பட்டவர்கள் விபரம்: கதிரியக்கவியல் வைத்திய …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் திருக்கோவில் கல்வி வலய அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் தந்தையை இழந்த மற்றும் தேவையுடைய குடும்பங்களுடைய 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு 28/02/2024 பாடசாலையின் அதிபர் க.ஜயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இணைந்த கரங்கள் அமைப்பானது கல்விற்க்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்றும் “எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கு கற்றல் …

மேலும் வாசிக்க

கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலயத்திற்கு கோளாவில் சின்னஞ்சிறு 07 மாதக்குழந்தை செய்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம்…..

-கிரிஷாந்- கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலயத்தின் புனராவர்த்தன மகா கும்பாபிஷேகத்திற்கான நிதிக்காக சின்னஞ்சிறு 07 மாதக்குழந்தை உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தினை வழங்கி இருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவமாக பார்க்கப்படுகிறது. அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச அருள் மிகு கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக பெருவிழா கடந்த (22.01.2024) அன்று இடம்பெற்று அதனை தொடர்ந்து புனராவர்த்தன மகா கும்பாபிஷேகத்திற்கான செயற்பாடுகள் ஆலய நிர்வாகத்தினரால் தற்பொழுது …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, இராமகிருஸ்ன மிஷன் மகா வித்தியாலயத்தின் இராணுவ மாணவர் சிப்பாய் படையணியின் sergeant பதவிக்கான சின்னம் மாணவர்களுக்கு சூட்டப்பட்டது….

அக்கரைப்பற்று, இராமகிருஸ்ன மிஷன் மகா வித்தியாலயத்தின் இராணுவ மாணவர் சிப்பாய் படையணியின் sergeant பதவிக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அதிபர் திருமதி.R.நித்தியானந்தன் மற்றும் பிரதி அதிபர் Cpt.திரு.K.ஜனார்தன் (கெப்டன்) தலைமையில் நேற்றய தினம் (22) காலை பாடசாலை ஒன்றுகூடலில் நடைபெற்றது. இராணுவ மாணவர் சிப்பாய் படையணியின் sergeant பதவிக்கான பாடநெறியை ரந்தம்மே NCC முகாமில் 07 நாட்கள் பயிற்சியை முடித்த S.அஸ்வின் மற்றும் S.சுவிதரன் எனும் இரண்டு மாணவர்களுக்கே sergeant …

மேலும் வாசிக்க

கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் M.சன்டேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22) நடைபெற்றது. முதலாம் தரத்திற்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு இரண்டாம் தர மாணவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அதிதிகள் உரைகள் என்பனவும் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.க.தங்கவடிவேல் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22) நடைபெற்றது. முதலாம் தரத்திற்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு இரண்டாம் தர மாணவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அதிதிகள் உரைகள் புதிய மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள் அதிதிகள், அதிபர் மற்றும் ஆசிரியர்களால் வழங்கிவைக்கப்பட்டது. …

மேலும் வாசிக்க