Latest News
Home / Kirishanth admin (page 10)

Kirishanth admin

யாழில் கரையொதுங்கிய மர்மப் பொருளால் பரபரப்பு!

யாழ் உடுத்துறை பகுதியிலுள்ள, அரசடி முருகன் கோயில் அருகே  மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருளை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் அங்கு வருகை தருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பொருளில் Asia 2 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், ஏதாவது கப்பலில் இருந்து குறித்த பொருள் தவறி விழுந்து  கரையொதுங்கியிருக்கலாமென பொலிஸாரினால்  சந்தேகிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக  உடுத்துறை, வேம்படி,நாகர்கோவில், ஆகிய பகுதிகளில் பல்வேறு  விதமான மர்ம பொருட்கள் …

மேலும் வாசிக்க

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்தல் மற்றும் வரி இலக்கம் (TIN) பெறுதல் போன்றவற்றை ஒன்லைனிலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வரி இலக்கத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து அதன் நகலை அச்சிடலாம். எனவே, விண்ணப்பத்தைப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதுடன் திணைக்களத்தின் இணையத்தளத்தில்  பெற்றுக்கொள்ள முடியும். வரி …

மேலும் வாசிக்க

வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்!

புதிய வற் வரி திருத்தமானது கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்களையே அதிகம் பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். இந்த வற் வரி திருத்தம் நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என அவர் தெரிவித்தார். “வற் வரியால், நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. …

மேலும் வாசிக்க

உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு!

எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (02) கருத்து தெரிவிக்கும் போதே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”உயர்தரப் பரீட்சை ஜனவரி 4 ஆம் திகதி …

மேலும் வாசிக்க

அஸ்வெசும விண்ணப்பங்கள் குறித்த அறிவித்தல்!

2024 ஆம் ஆண்டிற்கான அஸ்வெசும விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். ” அஸ்வெசும திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுவரை எங்களால் 1,410,000 பேருக்கு …

மேலும் வாசிக்க

வருமான வரிக் கோப்பு அவசியம் : இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான ரின் (Taxpayer Identification Number) இலக்கத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கத்தை (TIN) பெறாத நபர்களுக்கு 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை இலக்கமொன்று …

மேலும் வாசிக்க

சாதனை படைத்த சமரி அத்தபத்து!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின்  தலைவர் சமரி அத்தபத்து 2023 ஆம் ஆண்டுக்கான கிரிக்இன்போ இணையத்தள (cricinfo) மகளிர் ஒருநாள் மற்றும் 20-20 அணிகளின் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இதேவேளை இந்த ஆண்டு பிக் பாஷ் லீக் மகளிர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீராங்கனையாகவும் சமரி  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எவ்வாறு இருப்பினும் சமரி அத்தபத்து இந்த வருட இந்திய மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை …

மேலும் வாசிக்க

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது!

”எரிபொருள் விலை அதிகரிப்பினையடுத்து பேருந்துக் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாக இருந்த நிலையில்  பேருந்துக்  கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது” என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி,  346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன்  92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 366 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 426 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக …

மேலும் வாசிக்க

லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றம்!

இன்று முதல் லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 4,250 ரூபாவாக விற்பனையாகவுள்ளது இதேவேளை 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு விலை 795 ரூபாவாக விற்பனையாகவுள்ளது மேலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,707 …

மேலும் வாசிக்க