Latest News
Home / ஆலையடிவேம்பு / கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலயத்திற்கு கோளாவில் சின்னஞ்சிறு 07 மாதக்குழந்தை செய்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம்…..

கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலயத்திற்கு கோளாவில் சின்னஞ்சிறு 07 மாதக்குழந்தை செய்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம்…..

-கிரிஷாந்-

கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலயத்தின் புனராவர்த்தன மகா கும்பாபிஷேகத்திற்கான நிதிக்காக சின்னஞ்சிறு 07 மாதக்குழந்தை உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தினை வழங்கி இருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவமாக பார்க்கப்படுகிறது.

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச அருள் மிகு கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக பெருவிழா கடந்த (22.01.2024) அன்று இடம்பெற்று அதனை தொடர்ந்து புனராவர்த்தன மகா கும்பாபிஷேகத்திற்கான செயற்பாடுகள் ஆலய நிர்வாகத்தினரால் தற்பொழுது துரித கதியில் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் ஆலய நிர்வாகனத்தினர் மற்றும் ஆலய நலன் விரும்பிகள் கும்பாபிஷேக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு பங்களிப்பு வழங்கும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் 02 ஆம் பிரிவை சேர்ந்த ரசிகரன் ரூபினி தம்பதிகளின் புதல்வி ஜஸ்விதா என்னும் சின்னஞ்சிறு குழந்தை (07 மாதக்குழந்தை) உண்டியலில் சேமித்து வைத்திருந்த தனது முதலாவது (கன்னி) சேமிப்பை கோளாவில் விக்னேஸ்வரப்பெருமானின் கும்பாபிஷேக நிதிக்காக ஆலய நிர்வாகத்தினரிடம் நேற்றய தினம் (26) திங்கட்கிழமை வழங்கி இருந்தார்.

குறித்த நிகழ்வு மக்களை நெகிச்சியை ஏற்படுத்துவதாகவும் மேலும் முன்னுதாரணமான ஒரு செயற்பாடாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கான ஒத்துழைப்பை பெற்றோர் வழங்கி இருந்தனர்.

அருள் மிகு கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலயத்தின் புனர் நிர்மாண செயற்பாடுகளுக்கு தன்னார்வமாக தங்களால் இயன்ற உதவிகளை வழங்க முடிந்தவர்கள் வழங்குமாறு நிர்வாகத்தினர் கோரிக்கை முன்வைக்கிறார்கள். (ஒன்றுபடுவோம் விநாயகப்பெருமானின் கும்பாபிஷேகம் விரைவில் காண்பதற்கு)

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *