Latest News
Home / Kirishanth admin

Kirishanth admin

ஆலையடிவேம்பு பிரதேசசபைக்கு உட்பட்ட சின்ன முகத்துவாரம் கடற்கரை பகுதி சிரமதானம்….

ஆலையடிவேம்பு பிரதேசசபைக்கு உட்பட்ட இயற்கை அழகு நிறைந்த சின்னமுகத்துவாரம் கடற்கரை பகுதி இன்றைய தினம் (01) பார்தீபன் அவர்களின் முன்னெடுப்பில் மருது விளையாட்டு கழகம், அக்கரைப்பற்று தமிழ் பற்றளர்களின் சுற்றுப்புறச் சூழல் பசுமைப் புரட்சிக் குழு, சமூக ஆர்வலர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டு சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் இயற்கை அழகை சீர்குழைக்கும் வகையில் காணப்பட்ட குப்பைகள், வெற்றுப் போத்தல்கள் என்பன அகற்றப்பட்டு தூய்மையாக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

தேசிய விஞ்ஞான மன்றத்தினால் அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி 08 மாணவர்கள் கெளரவிப்பு…

தேசிய விஞ்ஞான மன்றத்தின் எற்பாட்டில் சிறந்த எதிர்காலத்திற்கு STEAM கல்வி முறைமை – (NSF Award Ceremony For Science Popularization(NACSP)2024) எனும் தொணினிப்பொருளின் கீழ் அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இருந்து 08 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். குறித்த மாணவர்களை கெளரவிப்பு நிகழ்வானது கொழும்பு மருத்துவ பீட கலை அரங்கில் இன்று (30/04/2024) இடம்பெற்றறிருந்தது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சர் கலாநிதி …

மேலும் வாசிக்க

பிரபஞ்சத்தில் ஏலியனை உறுதி செய்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!

பிரபஞ்சத்தில் தனித்துவிடப்பட்ட உயிர்க்கோளமான பூமிக்கு அப்பால், அதே போன்ற இன்னொரு கிரகத்தில் உயிர்களின் சாத்தியத்தை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி உறுதி செய்திருக்கிறது. சுமார் 124 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தை சுற்றிவரும் K2-18b என்ற கிரகத்தை, உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளுடன் ஜேம்ஸ் வெப் விண்வெளி ஆய்வுக்கான தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இதுவரை ஏவப்பட்டவற்றில் சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தந்திருக்கும் தரவுகள், விண்வெளி …

மேலும் வாசிக்க

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள மட்/மமே/நெல்லூர் கலைமகள் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களுடைய 60 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர். திரு.பா. லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 2024/04/26 இன்று இடம்பெற்றது. இன் நிகழ்வில் பாடசாலை இணைப்பாடவிதான இனணப்பாளர் திரு. சி. கண்ணன், முன்பள்ளி பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. சு. கணேஸ் …

மேலும் வாசிக்க

கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரின் சித்திரப்புத்தாண்டு விழா – 2024

-ஹரிஷ்- ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரின் அறநெறி மாணவர்களுக்கான சித்திரப்புத்தாண்டு விழா இன்று (28) காலை 8.00 மணியில் இருந்து 11.30 வரை கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. சித்திரப்புத்தாண்டு விழாவில் அறநெறி மாணவர்களுக்கான பல கலாச்சர போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றது. அந்தவகையில் மாலை கட்டுத்தல், யானைக்கு கண் வைத்தல், கோலம் போடுதல், நிறைகுடம் வைத்தல் , முட்டியுடைத்தல், கயிறு இழுத்தல், தேங்காய் திருவுதல் …

மேலும் வாசிக்க

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் (04/05/2024) சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணிமுதல் அக்கரைப்பற்று, தர்மரத்ன பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடாத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் சீரற்ற காலநிலை மற்றும் வேறு சில காரணங்களால் திகதிகள் மாற்றப்பட்ட போதிலும் திட்டமிட்டபடி நேர்த்தியான முறையில் எதிர்வரும் (04/05/2024) அன்று …

மேலும் வாசிக்க

சிவ தொண்டர் அமைப்பினால் கடந்த வருடம் 2023 கதிர்காம பாதயாத்திரைக்காக குடிநீர் வழங்கல் செயற்பாட்டிற்கு உதவிகளை வழங்கியவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு….

அம்பாறை மாவட்ட சிவ தொண்டர் அமைப்பினால் கடந்த வருடம் 2023 கதிர்காம பாதயாத்திரைக்காக குடிநீர் வழங்கல் செயற்பாட்டிற்கு முன்வந்து உழவு இயந்திரங்கள், வாகனங்கள், அமைப்பு சீருடை, நீர்த்தாங்கிகள் வழங்கியவர்களின் சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு தம்பிலுவில் சிவ தொண்டர் அமைப்பு காரியாலயத்தில் நேற்று (26) இடம்பெற்றது. மேலும் குறித்த நிகழ்வில் சேவை செய்த அமைப்பு தொண்டர்கள், உதவிகள் செய்து வரும் நபர்களின் சேவையும் பாராட்டி கௌரவித்ததுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்வுகள் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் சிரமதானம்….

      சிரமதான பணி அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையிலும், அமைப்பின் ஆலோசகர் சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம கணக்காய்வாளர்) அவர்களின் ஆலோசனையிலும் மிகவும் நேர்த்தியான முறையில் சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த சிரமதானத்திற்கான முழுமையான ஒத்துழைப்பை பனங்காடு பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்தினர் வழங்கியதுடன். அவர்களால் சிரமதானம் மேற்கொண்டவர்களுக்கு தேநீர் ஆகாரம் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த செயற்பாடுகளை பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் வைத்தியர் …

மேலும் வாசிக்க

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 14 அன்று….

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து எதிர்வரும் 2024.04.14 ம் திகதி தர்மசங்கரி மைதானத்தில் (S.R.K தேசிய கல்லூரிக்கு அருகாமையில்) பி.ப 07 மணியளவில் தமிழ் சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மேலும் உற்சாகப்படுத்தும் நோக்குடன் பிரம்மாண்டமான இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூகங்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் சமூக புரிந்துணர்வை ஏற்படுத்த பங்களிப்பு வழங்கும் நோக்குடனும், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, திருக்கோவில் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் “வெற்றிக்கான நெறியாள்கை” விழிப்பூட்டல் கருத்தரங்கு…..

அக்கரைப்பற்று, இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் “வெற்றிக்கான நெறியாள்கை” எனும் தலைப்பில் அண்மையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள க.பொ.த உயர் தரம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் கற்கும் மாணவர்களுக்காக பரீட்சைக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது சம்பந்தமான ஓர் விழிப்பூட்டல் கருத்தரங்கு இன்று (08) நடைபெற்றது. கருத்தரங்கு பாடசாலையின் அதிபர் திருமதி ரவிலேகா நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றதுடன். நிகழ்வில் பிரபல மருத்துவத்துறை பேராசிரியர் கலாநிதி மார்க்கண்டு திருக்குமார் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார். …

மேலும் வாசிக்க