Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது இணைந்த கரங்கள் அமைப்பு…

அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் திருக்கோவில் கல்வி வலய அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் தந்தையை இழந்த மற்றும் தேவையுடைய குடும்பங்களுடைய 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு 28/02/2024 பாடசாலையின் அதிபர் க.ஜயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இணைந்த கரங்கள் அமைப்பானது கல்விற்க்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்றும் “எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பல பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது.

மேலும் இன் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்களான திரு.சி.மதியழகன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.அகிலன், பழய மாணவர் சங்க உறுப்பினர் திரு.சுகிர்தகுமார், திரு.லக்மிகாந், பாடசாலையின் ஆசிரியர்களான செவ்வேல் குமரன், சுதர்சன், கின்ஸ்லி, சத்தியராஜ், அற்புதநாதன், திருமதி.L.திருச்செல்வம், M.ஜீவிதா ஆகிய ஆசிரியர்களும் மேலும் பாடசாலை உத்தியோகத்தர்களான பத்திமா M.M.F.ரோசானா, K.கிரியாழினி மற்றும்
இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான, லோ.கஜரூபன், சி.காந்தன் ஆகியோர் கலந்து கொண்டு 50 மாணவர்களுக்கான பாடசாலை செல்வதற்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *