Latest News
Home / இலங்கை (page 105)

இலங்கை

மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் அவரது கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) அதனை நிராகரித்துள்ளது.

மேலும் வாசிக்க

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் தரம் – 5ம் ஆண்டு மாணவர்களுக்கான விசேட செயலமர்வு ஊவா மாகாணத்தில் 

45 வருடங்களாக பிரித்தானியாவிலிருந்து பல சமய, சமூக பணிகள் மட்டுமன்றி பல கல்விச் சேவைகளையும் செய்துவரும் சைவ முன்னேற்றச் சங்கத்தினால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய மாகாணங்களிலிருந்து விண்ணப்பித்திருந்த பிந்தங்கிய 142 பாடசாலைகளைச் சேர்ந்த 4862 தரம் – 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட செயலமர்வை நடாத்தி வருகின்றது. அதில் ஒரு கட்டமாக பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கான செயலமர்வுக்கான வினாத்தாள்களை வழங்கும் நிகழ்வு …

மேலும் வாசிக்க

நாட்டு மக்களுக்கு மின்சார சபையின் அவசர அறிவித்தல்!

இன்றிரவு 9.30 மணி வரை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடைக்கிடையில் மின்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் ஒன்று பழுதடைந்துள்ளதாலும் மற்றும் அதிக மின்சார தேவையினாலும் இவ்வாறு மின்தடை ஏற்படக்கூடும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்புறுதி – முக்கிய அறிவிப்பு வெளியானது!

எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். அனைத்து லிட்ரோ எரிவாயு பாவனையாளர்களுக்கும் 1 மில்லியன் ரூபாய் வரையான காப்புறுதியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் 1311 என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் இந்த காப்புறதியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த காப்புறுதி திட்டத்தின் மூலம் …

மேலும் வாசிக்க

தொடர்ச்சியாக மாத்திரைகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள்

வெளிநாடுகளுக்குச் செல்ல ஒரு மாதத்திற்கு முன்பு, அதன் பின்னர் அந்த நாடுகளில் தங்கி இருக்கின்ற காலப்பகுதி, நாட்டுக்கு திரும்பிய பின்னர் என தொடர்ச்சியாக மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும். இதை பின்பற்றினால் மலேரியா தொற்று ஏற்படாது. அதைமீறி மலேரியா தொற்று ஏற்பட்டாலும் நோய் தாக்கம் தீவிரமாக இருக்காது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (05) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் …

மேலும் வாசிக்க

உயர்தர பரீட்சையில் புதிய பாடம்!

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு கொரிய மொழி பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரிய குடியரசின் பிரதிப் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருக்கு இடையில் சியோல் நகரில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தென் கொரியாவில் பணிபுரியும் 22,000 இலங்கையர்களைப் பற்றிக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் கொரிய மொழி புலமையை இலக்காகக் கொண்ட கற்றல் கற்கைநெறிகளின் பிரபல்யம் …

மேலும் வாசிக்க

மறுசீரமைக்கப்படுகின்றது அமைச்சரவை – புதிய எவருக்கும் அமைச்சுப் பதவிகள் இல்லை எனவும் தகவல்!

அமைச்சரவையில் பாரிய மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள இணைய ஊடகமொன்று இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது. இதற்கமைய அமைச்சரவையில் 60 வீதமான மாற்றங்கள் இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அமைச்சுகளின் விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளதுடன், புதிதாக எவரும் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படமாட்டார்கள் எனவும் கூறப்படுகின்றது. அத்துடன், சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு புதிய இராஜாங்க அமைச்சர் …

மேலும் வாசிக்க

சம்பளம் அதிகரிப்புடன் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்!

51,000 பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி 3 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அரச சேவைக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளின் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிரந்தர நியமனத்துடன் அவர்களது சம்பளம் 31,490 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறுகிய காலத்திற்குள் அதிகளவானோருக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் முதற் சந்தர்ப்பம் இதுவாகும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் …

மேலும் வாசிக்க

பொருளாதாரக் கொள்கைகள் கேந்திர நிலைமொன்றை நிறுவியது ஐக்கிய மக்கள் சக்தி!

பொருளாதாரக் கொள்கைகள் கேந்திர நிலைமொன்றை ஐக்கிய மக்கள் சக்தி நிறுவியுள்ளது. பொருளாதாரத்துறையில் நிபுணத்துவம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசீம் மற்றும் இரான் விக்கிரமரத்ன ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் குறித்த கேந்திர நிலையம் இயங்கவுள்ளது. நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை இந்த குழு முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க

கஜமுத்து கடத்தி வந்த இருவர் அம்பாறையில் கைது!

பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜமுத்துக்களை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று (05) இரவு அம்பாறை நகர்பகுதியில் வைத்து கைது செய்து ஒப்படைத்துள்ளதாக அம்பாறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய நேற்று இரவு அம்பாறை கண்டி வீதியிலுள்ள அம்பாறை நகர் பகுதியை அண்டிய புத்தங்கல பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அம்பாறையை நோக்கி பிரயாணித்த காரை நிறுத்தி …

மேலும் வாசிக்க