Latest News
Home / ஆலையடிவேம்பு (page 66)

ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 15 வீடுகள் இன்று மக்களிடம் கையளிப்பு…

வி.சுகிர்தகுமார்    “உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்” எனும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியத்தின் நோக்கு என்ற கொள்கைக்கு அமைய நாடு பூராகவும் கிராமத்திற்கு ஒரு வீடு எனும் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட 14022 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு தேசிய ரீதியில் இன்று நடைபெற்றது. உற்பத்தி திறன் மிக்க ஒரு பிரஜை மற்றும் மகிழ்ச்சியுடன் வாழும் ஒரு குடும்பத்தை உருவாக்கும் நோக்கில் அம்பாரை மாவட்டத்திலும் கல்முனை நகர …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பொலிசாரால் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பஸ்களில் ஒட்டப்பட்டதுடன் பொலிஸ் உப நிலையமும் திறப்பு

வி.சுகிர்தகுமார்      அம்பாரை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் பல்வேறு செயற்பாடுகளில் அக்கரைப்பற்று பொலிசாரும்; ஈடுபட்டு வருகின்றனர். இதற்கமைவாக இன்று அக்கரைப்பற்று மத்திய பஸ் தரிப்பிடத்தில் ‘சரியான நேரத்தில் சரியான முறையில் மாஸ்க் ஒன்றை அணிந்திடுபவராய் இருங்கள்’ எனும் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பஸ்களில் ஒட்டப்பட்டதுடன் விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்ட பின்னர் சுற்றுவட்டத்தின் அருகே அமைக்கப்பட்ட …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழகத்தினரினால் கொரோனா வைரஸினை கட்டுபடுத்தும் முகமாக முக கவசங்கள் வழங்கிவைப்பு…

நாட்டில் பரவிவரும் கொரோனா கோவிட் 19 தொற்றுநோய் பரவல் தடுப்பு தொடா்பில் விழிப்புணா்வினை ஏற்படுத்தும் முகமாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து அவா்களின் அறிவுறுத்தலுகளுக்கமைவாக இன்று ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக் கழகத்தினர் விழிப்புணா்வுச் செயற்பாட்டில் கலந்து கொண்டனர். இதன் முதற்கட்டமாக அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, கோளாவில், பனங்காடு போன்ற பிரதேசங்களில் பொது இடங்களில் முகக்கவசமின்றிக் காணப்பட்டவா்களுக்கு முகக்கவசங்கள் உதயம் விளையாட்டுக் கழகத்தினரினால் வழங்கி வைக்கப்பட்டது. -உதயம் விளையாட்டுக் கழகம் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கலைவாணி விழா:கொரோனா கொள்ளை நோய் நாட்டிலிருந்து அகல விசேட பிரார்த்தனை…

வி.சுகிர்தகுமார்     ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கலைவாணி விழாவின்போது கொரோனா கொள்ளை நோய் நாட்டிலிருந்து அகல வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் நலன் வேண்டிய விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்றன. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நேற்று  (25)  பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் விநாசித்தம்பி பபாகரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்ற வாணி விழா பூஜை வாழிபாடுகளின் போதே இவ்வாறு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது. கணக்காளர் க.பிரகாஸ்பதி …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஏடு தொடக்கல் நிகழ்வு….

R. அபிராஜ் ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இன்று காலை 08.00 மணியளவில்  சிறுவர்களுக்கு ஏடு தொடக்குதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி அன்று சிறார்களுக்கு ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெறுவது விசேடமானது. இந்த விசேட தினத்தில் இந்துக்கள் தமது குழந்தைகளுக்கு எழுத்தறிவினை சம்பிரதாய பூர்வமாக புகட்டுவது ஏடு தொடக்குதல் எனப்படுகிறது. ஆலயங்களிலும், பாடசாலைகளிலும் மற்றும் ஏனைய கல்விக்கூடங்களிலும் இவ் ஏடு …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற வாணி விழா – 2020

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற வாணி விழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை விசேட பூசைஆராதனைகள் நடைபெற்றன. ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற வாணி விழா, ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம கணக்காய்வாளர்) அவர்களின் தலைமையின் இந்து மாமன்ற செயலாளர் திரு.ந.சுதாகரன்(விரிவுரையாளர்) மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், தற்கால சூழ்நிலைக்கமைய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வாணி விழா சிறப்பாக நடைபெற்றது.

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா:கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறையுடன்…

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா (17) சனிக்கிழமை அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி பூசைகள் இடம்பெற்றுவருகின்றது. நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்ற நிலையில் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய நிர்வாகத்தினர் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை சிறந்த முறையில் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலையத்தினூடாக புதிய நெல் உற்பத்தியாளர்களை உருவாக்கும் செயற்றிட்டம் இன்று…

வி.சுகிர்தகுமார்     அதிமேதகு ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் எண்ணக்கருவிற்கு அமைவாக நாட்டின் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் செயற்றிட்டம் விவசாய திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் நிலவும் விதை நெல் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் புதிய நெல் உற்பத்தியாளர்களை உருவாக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு கட்டமாக அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலையத்திற்குட்பட்ட நெல் உற்பத்தியாளர்களுக்கான விழிப்பூட்டல் பயிற்சி செயமலர்வு இன்று(22) நடைபெற்றது. அம்பாரை மாவட்ட …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பில் ஜனாதிபதியின் 20 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை பயிரிடும் தேசிய வேலைத்திட்டம்

வி.சுகிர்தகுமார்   அதிமேதகு ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கில் முக்கிய எண்ணக்கருவாக கருதப்படுகின்ற ‘பயனுள்ள பிரஜை மகிழ்ச்சியாக வாழும் குடும்பம்’ எனும் எண்ணக்கருவை வலுப்படுத்தும் 20 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை பயிரிடும் தேசிய வேலைத்திட்டம் இன்று (21) நாடளாவீய ரீதியில் 14022 கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனிநபர் மற்றும் குடும்பத்தினை மையப்படுத்திய வீட்டுப் பொருளாதார போசனையை மேம்படுத்தும் வகையில் குடும்ப அலகுகளை வலுவூட்வதற்கான தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரினால் இரத்த தான முகாம் கொடையாளர்களுக்கு அழைப்பு….

  ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர். இதற்கு குறைந்தது 100 கொடையாளர்கள் தேவைப்படுவதால், இம்முகாமில் கலந்துகோள்ள விரும்புபவர்கள் கீழ் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தங்களது பெயரை அனுப்பி வைப்பதன் மூலம் பதிவு செய்து கோள்ளலாம். இரத்த தானம் தொடர்பான திகதி, இடம் என்பன பின்னர் அறிவிக்கப்படும். இரத்த தானம் செய்தால் ஏற்படும் நன்மைகள். 1. புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவடையும். 2. …

மேலும் வாசிக்க