Latest News
Home / ஆலையடிவேம்பு (page 67)

ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரிவுகளில் தேசிய டெங்கொழிப்பு நடவடிக்கை- 1057 இடங்கள் பரிசோதனை-16 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்

வி.சுகிர்தகுமார் தேசிய டெங்கொழிப்பு வார வேலைத்திட்டத்திற்கிணங்க ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரிவுகளில் இன்றுவரை குடியிருப்புக்கள் பாடசாலை கட்டடங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட 1057 இடங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் 16 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி  எஸ்.அகிலன் தெரிவித்தார். மேலும் 46 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டதுடன் 48 மணித்தியாலங்களுக்குள்  துப்பரவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு இடப்பட்டதாகவும்   …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு MOH காரியாலயத்தினரின் ஏற்பாட்டில் பெரியபிள்ளையார் ஆலயத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி …

  தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக (14.10.2020 – 20.10.2020) காலப்பகுதியானது பிரகடனப்படுத்தப்பட்டு பல டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது அதனை முன்னிட்டு ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினர் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பு மற்றும் ஆலையடிவேம்புவெப் சமூக அமைப்பு மேலும் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு போன்ற சமூக அமைப்புகளுக்கு சிரமதானம் ஒன்றை மேற்கொள்ளுவதற்கான அழைப்பினை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் இன்றைய தினம் (18.10.2020) …

மேலும் வாசிக்க

ஆலய வழிபாடுகளில் 5 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்: ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்

வி.சுகிர்தகுமார் ஆலய வழிபாடுகளில் 5 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் இதனை ஆலய நிருவாகமும் பொதுமக்களும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். சமய வழிபாடு மற்றும் ஆலயங்களின் இடம்பெறவுள்ள உற்வசம் விசேட வழிபாடுகள் தொடர்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து …

மேலும் வாசிக்க

பனங்காடு பாசுபதேசுவரர் தேவஸ்தான சங்காபிகேமும் கும்பாபிசேக மலர் வெளியீடும்

வி.சுகிர்தகுமார்     அம்பாரை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான புனராவர்த்தன நவகுண்ட பஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிசேக பெரும்சாந்தி குடமுழுக்கு பெருவிழாவின் பின்னர் இடம்பெற்ற முதலாவது சங்காபிகேமும் கும்பாபிசேக மலர் வெளியீடும் நேற்று நடைபெற்றது. ஆலயத்தின் கும்பாபிசேகமானது ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி காலை 6மணி தொடக்கம் 7.20 மணிவரையுள்ள சுக்கிலபட்சத்து தசமி திதியும் மூல …

மேலும் வாசிக்க

அத்தியாவசியப் பொருட்களின் விலையினை குறைத்துள்ள அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அம்பாரை மாவட்ட அக்கரைப்பற்று மக்கள்…

வி.சுகிர்தகுமார்   கொரோனா அச்சுறுத்தல் அதன் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலையினை குறைத்துள்ள அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அம்பாரை மாவட்ட மக்கள் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு தமது ஆதரவினை தெரிவிப்பதாக கூறுகின்றனர். ஆயினும் சத்தொச உள்ளிட்ட அனைத்து விற்பனை நிலையங்களிலும் விலைக்குறைப்பினை செய்வதோடு பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அரசாங்கம் அதிரடியாக சீனி பருப்பு ரின்மீன் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு MOH காரியாலயத்தினரின் தேசிய டெங்கு ஒழிப்பு வார சிரமதான அழைப்பு…

மழையுடனான காலநிலை ஆரம்பமாக இருப்பதனால் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவுவதற்காக சாத்தியம் காணப்படுவதாக, சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.எனவே, பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும் மேலும் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை துப்புரவு செய்யும் நோக்கில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக (14.10.2020 – 20.10.2020) காலப்பகுதியானது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அதனை முன்னிட்டு ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினர் அக்கரைப்பற்று 7/1 யில் அமைந்துள்ள …

மேலும் வாசிக்க

க.பொ.த.உயர்தர பரீட்சை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் பூரண கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்….

வி.சுகிர்தகுமார் க.பொ.த.உயர்தர பரீட்சைகள் இன்று காலை 8.30 மணிமுதல் நாடளாவிய ரீதியில் 2684 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகின. அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை பேணி பரீட்சை இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள இச்சந்தர்ப்பத்தில் பரீட்சை நிலையங்கள் யாவும் சுகாதார பிரிவினரால் தொற்று நீக்கம் செய்யப்பட்டிருந்தன. திருக்கோவில் கல்வி வலயத்தில் 5 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டதுடன் அக்கரைப்பற்று ஸ்ரீ …

மேலும் வாசிக்க

சமூக இடைவெளியை பேணி 5ம் தர புலமை பரிசில் பரீட்சை…

வி.சுகிர்தகுமார் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை இன்று காலை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின. அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களில் சமூக இடைவெளியை பேணி பரீட்சை இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பரீட்சை நிலையங்கள் யாவும் தொற்று நீக்கம் செய்யப்பட்டிருந்தன. முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கெரரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் சென்றதை அவதானிக்க முடிந்தது. திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று …

மேலும் வாசிக்க

அரச அலுவலங்களுக்குள் நுழைகின்ற அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை – முகக்கவசம் கட்டாயம் ஆலையடிவேம்பு பிரதேசங்களிலும் விழிப்பூட்டும் செயற்பாடுகள்

வி.சுகிர்தகுமார்  கொரோனா வைரஸ் பரவலை அடுத்து அரச அலுவலகங்கள் அனைத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக அரச அலுவலங்களுக்கு வருகை தருகின்ற அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலங்களுக்குள் நுழைகின்ற அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனையும் இடம்பெற்று வருகின்றது. அவசியமற்ற விதத்தில் அலுவலங்களுக்கு மக்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதுபோல் களப்பணிகளில் ஈடுபடுகின்ற கள உத்தியோகத்தர்களின் கடமையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச …

மேலும் வாசிக்க

COVID-19 தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் விடுத்துள்ள விசேட அறிக்கை…

வி.சுகிர்தகுமார்  COVID-19  பரவலிலிருந்து எம்மையும் எமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளல் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்  இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விசேட அறிவித்தல்! இதுவரை காலமும் எமது மிகச் சிறந்த செயற்பாடுகள் காரணமாக நாம், நமது குடும்பம் மற்றும் நமது நாடு முழுவதும் உயிர்கொல்லி நோயான  COVID-19  வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்டோம். இருப்பினும் இக்கொடிய  COVID-19  வைரஸ் தாக்கம் மீண்டும் தற்போது எமது நாட்டினை சவாலுக்குள்ளாக்கியுள்ளது. எனவே இதுவரைகாலமும் உலகில் பத்து இலட்சம் உயிர்களுக்கு மேல் …

மேலும் வாசிக்க