Latest News
Home / ஆலையடிவேம்பு (page 43)

ஆலையடிவேம்பு

அமைச்சர் ஹெகலிய அவர்களை கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சந்திப்பையடுத்து அதிரடிநடவடிக்கை! ஆலையடிவேம்பு மக்கள் விசேட நன்றி தெரிவிப்பு.

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவை கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சந்தித்து கலந்துரையாடியதன் பலனாக பனங்காடு பிரதேச வைத்தியசாலை 24 மணிநேரமும் இரவுபகலாக இயங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது . அமைச்சரைச்சந்தித்து 24 மணிநேரத்துள் அவ்வைத்தியசாலை 24 மணிநேரமும் இயங்கும்வகையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டமையானது அப்பகுதி மக்களை வியப்பில்ஆழ்த்தியுள்ளது . குறித்த சந்திப்பு கடந்த புதன்கிழமை கொழும்பிலுள்ள அமைச்சரது அலுவலகத்தில் நடைபெற்றது . மாத்தளை மாநகரசபை முதல்வர் சந்தனம் பிரகாஷ் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று தமிழ் பிரிவு பகுதிகளில் நாளை மின் முற்றாக தடைப்படும்!!!

மின் வழிகளில் பராமரிப்பு வேலை காரணமாக (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 08.45 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை நெசவாலை வீதி, ஆலையடிவேம்பு, கோளாவில், நாவற்காடு, வாச்சிக்குடா வரை உள்ள பகுதிகளில் அவசர திருத்த வேலை காரணமாக மின்சாரம் முற்றாகத் தடைபட்டு இருக்கும் என அக்கரைப்பற்று இலங்கை மின்சார சபை மின் அத்யட்சகர் மக்களுக்கு அறியத்தருகின்றார். மேலும் குறித்த பராமரிப்பு வேலைகள் குறிப்பட்ட நேரத்தினை விட முன்னராக முடிவடையும் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி பெருவிழா- 2021 : ஆரம்பம்….

-கபிஷன்- ஈழத்திருநாட்டில் கிழக்கு கரையோர எழில்மிகு அக்கரைப்பற்று பகுதியிலே அமர்ந்து அருளர்பாலித்துக்கொண்டிருக்கின்ற ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி பெருவிழா நிகழாண்டு மங்களம் நிறைந்த பிலவ வருடம் புரட்டாதித் திங்கள் 21ஆம் நாள் (2021.10.07) வியாழக்கிழமை பிரதமைத் நிதியும், சித்திரை நட்சத்திரமும், சித்தாமிர்த யோகமும் கூடிய சுப வேளையில் காலை 06.00 மணிக்கு அன்னையின் திருக்கதவு திறக்கும் வைபவம் ஆரம்பமாகி தொடர்ந்து 09 நாட்கள் விழா இடம்பெற …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சமூர்த்தி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சிரமதானப் பணி பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுப்பு

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சமூர்த்தி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான பணியானது பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.டி.எம்.சமந்த திஸ்ஸாநாயக்க அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று-7/4 கிராம சேவகர் பிரிவில் நேற்று (01.10.2021) நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர், பிரதேச செயலக கணக்காளர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சமூர்த்தி லொத்தர் வீடமைப்பு வேலைத்திட்டம் 02 பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு…

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சமூர்த்தி பிரிவினால் பிரதேச செயலாளர் திரு. வி.பபாகரன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக சமுர்த்தி லொத்தர் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். வறுமை நிலையினை அடிப்படையாகக் கொண்ட சமூர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி லொத்தர் வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அளிக்கம்பை …

மேலும் வாசிக்க

பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக கடமை ஆற்றிவந்த வைத்தியர் Dr. ஜாரியா இடமாற்றம்: நிலவும் வைத்தியர் வெற்றிடத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச மக்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் நிபந்தனை கோரிக்கை!

-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக கடமை ஆற்றிவந்த வைத்தியர் Dr. ஜாரியா அம்மணி அவர்கள் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்செல்கின்றார். இதுவரை காலமும் சிறந்த கடமையை ஆற்றிவந்த வைத்தியர் Dr. ஜாரியா அம்மணி அவர்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மற்றும் பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினர் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். இடமாற்றம் பெற்றுச்செல்லும் வைத்தியரின் வெற்றிடத்திற்கு பிறிதொரு வைத்தியர் …

மேலும் வாசிக்க

இதுவரை தடுப்பூசி பெறாத 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் இன்று நண்பகல் 12.30 மணிவரை இ.கி.தேசிய பாடசாலையில்: MOH ஆலையடிவேம்பு.

-கிரிசாந் மகாதேவன்- 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் அவர்களின் தலைமையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இதுவரை தடுப்பூசி பெறாத 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான சினோபாம் …

மேலும் வாசிக்க

2022 ஆம் ஆண்டில் கிராம சேவகர் பிரிவு ரீதியாக 03 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார அபிவிருத்தி செய்யும் நோக்கிலான ஒன்றுகூடல் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்: இராஜாங்க அமைச்சர் கௌரவ விமலவீர திசாநாயக்க பங்குபற்றலுடன்

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக 2022ஆம் ஆண்டில் கிராம சேவகர் பிரிவு ரீதியாக 03 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார செயற்பாட்டினை அபிவிருத்தி செய்யும் நோக்கிலான ஒன்றுகூடல் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ விமலவீர திசாநாயக்க அவர்களுடன், அமைச்சர் அவர்களின் மாவட்ட மட்ட மற்றும் கிராமிய மட்ட இணைப்பாளர்கள், பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் பிரதேச …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழை வாயில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பம்…

  திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழை வாயில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. சத்தியம் (வாழும் போதே வழங்கிடுவோம்) அமைப்பின் அனுசரணையில் பாடசாலை அதிபர் த.இராசநாதன் அவர்களின் ஏற்பாட்டில் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழை வாயில் அமைத்து அழகுபடுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலய பாடசாலை பிரதேசத்தில் காணப்படும் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச பொலிஸ் நிலையத்திற்கான நாவற்காடு பல்தேவைக்கட்டிடம் தெரிவு….

-கிரிசாந் மகாதேவன்- நாடுபூராகவும் சௌபாக்கியத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் பிரதேசங்கள் தோறும் பிரதேச மக்களின் நன்மை கருதி பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச செயலாக பிரிவில் பொலிஸ் நிலையம் ஒன்று அமைப்பதற்கு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரினால் நாவற்காடு பிரதேசத்தில் காணப்படும் நாவற்காடு பல்தேவைக்கட்டிடம் வழங்கப்பட்டுள்ளதை அறிய கூடியதாக உள்ளது. குறித்த நாவற்காடு பல்தேவைக்கட்டிடம் அப்பிரதேச …

மேலும் வாசிக்க