Latest News
Home / ஆலையடிவேம்பு / அமைச்சர் ஹெகலிய அவர்களை கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சந்திப்பையடுத்து அதிரடிநடவடிக்கை! ஆலையடிவேம்பு மக்கள் விசேட நன்றி தெரிவிப்பு.

அமைச்சர் ஹெகலிய அவர்களை கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சந்திப்பையடுத்து அதிரடிநடவடிக்கை! ஆலையடிவேம்பு மக்கள் விசேட நன்றி தெரிவிப்பு.

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவை கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சந்தித்து கலந்துரையாடியதன் பலனாக பனங்காடு பிரதேச வைத்தியசாலை 24 மணிநேரமும் இரவுபகலாக இயங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது .

அமைச்சரைச்சந்தித்து 24 மணிநேரத்துள் அவ்வைத்தியசாலை 24 மணிநேரமும் இயங்கும்வகையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டமையானது அப்பகுதி மக்களை வியப்பில்ஆழ்த்தியுள்ளது . குறித்த சந்திப்பு கடந்த புதன்கிழமை கொழும்பிலுள்ள அமைச்சரது அலுவலகத்தில் நடைபெற்றது . மாத்தளை மாநகரசபை முதல்வர் சந்தனம் பிரகாஷ் சந்திப்பிற்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.


சந்திப்பின்போது நீர்பாசனத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, சுகாதாரஅமைச்சின் செயலாளர் டாக்டர் எஸ்.எச்.முனசிங்க, பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலகுணவர்த்தன . மத்தியமாகாண ஆளுநர் லலித் யு கமகே, மாத்தளைமுதல்வர் ச.பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பனங்காடு பிரதேசவைத்தியசாலையாக 2019.01.27 இல் உத்தியோகபூர்வமாக இயங்க ஆரம்பித்தபோதிலும் அங்குள்ள அவசர சிகிச்சைப்பிரிவு 24 மணிநேரமும் இயங்கவில்லை.

அதற்கு காரணம் அது இரவில் இயங்குவதற்கு இரவுவேளையில் வைத்தியர் தங்கியிருக்கமுடியாத நிலை நிலவியது.கூடவே வைத்தியர் பற்றாக்குறையும் நிலவியது. இதனை நிவர்த்திசெய்துதருமாறு கோரும் மகஜரை உறுப்பினர் ராஜன் அமைச்சரிடம் கையளித்து கலந்துரையாடினார். அதனையடுத்து இவ் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஏலவே வைத்தியசாலையில் இரவில் வைத்தியர் தங்கியிருந்து அவசரசிகிச்சைப்பிரிவை 24 மணிநேரமும் இயக்கவைக்கவேண்டுமென வைத்தியசாலை அபிவிருத்திச்சபை கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனிடம் வேண்டுகோள்விடுத்திருந்தது. அவர் அதனை உடனடியான சுகாதாரஅமைச்சரின் பிரத்தியேகசெயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்தார். அதனையடுத்து வைத்தியரொருவர் நியமிக்கப்பட்டார் . பின்பு அவர் அமைச்சரைச்சந்தித்து குறித்த கோரிக்கையை முன்வைத்தபோது அமைச்சர் அன்றே அவசரசிகிச்சைப்பிரிவை 24 மணிநேரமும் இயங்கவைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இந்தஇடத்திலேயே அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி அன்றிரவே இரவிலும் அவசரசிகிச்சைப்பிரிவு இயங்க ஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அபிவிருத்திச்சபையின உறுப்பினர் ராஜனுக்கும் அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றனர். இவ்வைத்தியசாலை தற்போது 3 வைத்தியர்களுடன் அதனைச்சுற்றியுள்ள அழிக்கம்பை பனங்காடு மகாசக்திக்கிராமம் புளியம்பத்தை கண்ணகிகிராமம் கவடாப்பிட்டி நாவக்காடு தீவுக்காலை போன்ற பலகிராமங்களில் வாழும் சுமார் 25 ஆயிரம் மக்களின் சுகாதாரத்தேவையை கவனித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திர சேகரம் ராஜன் அவர்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் சார்பாக மனமார்ந்த விசேடமான இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்..

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *