Latest News
Home / இலங்கை (page 428)

இலங்கை

ஈழ அகதிகள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும் – சுமந்திரன்

இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் அனைவரும் இந்த நாட்டில் இருந்து துரத்தப்பட்டவர்கள். அவர்கள் இங்கே மீண்டும் வந்து குடியேற வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.   யாழில்.நேற்றய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இந்தியாவில் நிறைவேற்றும் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என நான் கருத்து கூற முடியாது. அது இந்தியா தனது  …

மேலும் வாசிக்க

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரிக்கும் எண்ணம் இல்லை – விக்னேஸ்வரன்

கொள்கை ரீதியாக ஒன்றுபட்டவர்களை மாத்திரம் எமது மாற்று அணியில் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை எமது அணியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் எனவும் கூட்டமைப்பை பிரிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் அவர் கூறினார். வடமராட்சியில் மருதங்கேணிப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் …

மேலும் வாசிக்க

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

ஜனாதிபதி  செயலகத்தில் நேற்று தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்து  கலந்துரையாடியபோது  ஜனாதிபதி காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும். அவர்களை  மீளக்கொண்டுவர  முடியாதென  தெரிவித்தார் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மாலை 4 மணியளவில்  முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1032 நாட்களாக போராடிவரும் உறவினர்களாலே இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. …

மேலும் வாசிக்க

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட விவகாரத்தில் ராஜிதவிற்கு தொடர்பா?

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரணை நடத்தவுள்ளது. இதற்கமைய, இந்த வார இறுதியில் ராஜித சேனாரத்ன விசாரணைக்காக அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த உறுதியான தகவல்கள் வெளியாகாத போதும், இதனை மெய்ப்பிக்கும் வகையில் இலங்கை பொலிஸ் தலைமையக தகவல்கள் அமைந்துள்ளன. இந்தக் கடத்தல் குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டதாக இருக்கலாமென சந்தேகம் கொண்டுள்ள குற்ற விசாரணைப் பிரிவினர், இந்த …

மேலும் வாசிக்க

ஜனவரி மாதத்துக்குள் 54,000 பட்டதாரிகளுக்கு அரசதுறை வேலைவாய்ப்பு

எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் 54ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரசதுறை வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலுக்கிணங்க அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நாடளாவிய சகல கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை …

மேலும் வாசிக்க

வெடி பொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 110 கிலோ கிராம் மீன்கள் மீட்பு

திருகோணமலை லங்காபட்டுன பிரதேசத்தில் வெடி பொருட்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட 110 கிலோ கிராம் மீன்கள் இன்று(16) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடல்வள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இலங்கையின் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும், அதற்கமைய கடற்படையினரால் திருகோணமலை லங்காபிட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதையடுத்தே  அந்த பெட்டிகளுக்குள் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 110 கிலோ …

மேலும் வாசிக்க

வடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாளை(செவ்வாய்கிழமை) முதல் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான காலநிலை ஓரளவிற்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யலாம். சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் பல …

மேலும் வாசிக்க

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் – கருணா

தமிழர்களின் நலன் கருதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தான் தயாராகவே உள்ளதாக கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்திற்கு வேறு பிரச்சினைகள், கிழக்கு மாகாணத்திற்கு வேறு பிரச்சினைகள் …

மேலும் வாசிக்க

வடக்கு- கிழக்கு இணைந்த சுயாட்சிதான் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு- சிவாஜிலிங்கம்

வடக்கு- கிழக்கு இணைந்த சுயாட்சிதான் நிரந்தர தீர்வென்பதே எமது கட்சியின் நிலைப்பாடு என தமிழ் தேசிய கட்சியின் செயலாளரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ரெலோவிலிருந்து பிரிந்து சென்ற சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் அணி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘தமிழ் தேசிய கட்சி’ என்ற பெயரில்  புதிய கட்சியை அங்குரார்ப்பணம் செய்துள்ளனர். இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “பொறுப்புக்கூறல் மற்றும் இழைக்கப்பட்ட போர்க்குற்ற விவகாரங்களை …

மேலும் வாசிக்க

தமிழர் தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகப்பட வேண்டாம்- சம்பந்தன்

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “வாய்ப்புகளைப் பார்த்து  அதனடிப்படையில் நாம் அரசியல் தீர்வைத் தேடிப்போவதில்லை. தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அதனைப் பெறுவதற்கு நாம் தொடர்ந்து முயல்லோம் அதனை எவராலும் தடுக்க முடியாது. சிங்கள மக்கள், தமிழ் …

மேலும் வாசிக்க