Latest News
Home / இலங்கை (page 426)

இலங்கை

தமிழர்கள் தேசிய கீதம் பாட வேண்டாம் என்றே அரசாங்கம் கூறுகிறது – சுமந்திரன்

தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என அரசாங்கம் தெரிவித்திருப்பது, தமிழர்கள் தேசிய கீதம் பாட வேண்டாம் என்பதையே எடுத்துக்காட்டுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே பாடப்படுமென பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போது தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்த …

மேலும் வாசிக்க

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை!

2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளைய தினம் (27) வௌியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைப் பெறுபேறு வௌியீடு குறித்து நியூஸ்பெஸ்ட் வினவியபோதே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்பட்டது. இதில் 3,37,704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை …

மேலும் வாசிக்க

சொந்த வீட்டில் ராஜிதவை காணவில்லை…. சி.ஐ.டி தொடர்ந்தும் வலை வீச்சு

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன ஒருநாளுக்குள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் ராஜித சேனாரத்னவை காணவில்லை என்பதனால் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரைத் தேடி விசாரணையை ஆரம்பித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதவானால் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே …

மேலும் வாசிக்க

மழையுடனான வானிலை தொடருமா? – வளிமண்டலவியல் திணைக்களம்

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை டிசம்பர் 25 ஆம் திகதியிலிருந்து தற்காலிகமாக சிறிது குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், நாட்டின் வடக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்தோடு ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என …

மேலும் வாசிக்க

ராஜிதவை கைது செய்ய பிடியாணை – நீதிமன்றம் அதிரடி

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதவானால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சி.ஐ.டி அளித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பண்டாரா நெலும்தெனிய இந்த உத்தரவை பிறப்பித்தார். ரஜித சேனாரத்னவை கைது செய்ய சி.ஐ.டி. இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நீதிமன்றத்தில் பிடியாணை கோரியிருந்தது. இதன்பின்னர் பிடியாணை உத்தரவொன்றை பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்யுமாறு குற்றப்புலனாய்வு …

மேலும் வாசிக்க

சம்பிக்கவின் சாரதியின் மனைவி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதி, திலும் துசித குமாரவின் மனைவியினால் அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் உட்பட சிலருக்கு எதிராகவே இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றத்தில் அவரால் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜகிரிய விபத்து தொடர்பாக இன்று நீதிமன்றில் சரணடைந்த குறித்த சாரதி, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி …

மேலும் வாசிக்க

அம்பாறையில் போலி நாணயத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது!

அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் ஒன்றுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து அச்சு இயந்திரம் மற்றும் போலி நாணயத்தாள் தயாரிக்கும் தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்பாறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர் கல்முனை தேசிய புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலை அடுத்து இன்று பகல் 12 மணியளவில் தேசிய புலனாய்வுப் பிரிவினர் ஒலுவில் சந்தைப் …

மேலும் வாசிக்க

சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது?

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திரதின நிகழ்வு குறித்து முன்னேற்பாட்டு கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) அனர்த்த முகாமைத்துவம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே, சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாட …

மேலும் வாசிக்க

வெள்ள அனர்த்தத்தில் மட்டக்களப்பு – அனைத்து பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கின

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழை மற்றும் மாதுறு ஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக இதுவரையில் சுமார் 7,300 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் 12 பிரதேச செயலாளர் பிரிவுகள் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள. இதில் கிரான் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். மாவடியோடை அணைக்கட்டினை …

மேலும் வாசிக்க

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: ஹக்கீம், ரிஷாட்டிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள சி.ஐ.டி. நடவடிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு சி.ஐ.டி. கோரியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நீதிமன்ற அமர்வின்போது கொழும்பு மேலதிக நீதவான் லங்கா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை …

மேலும் வாசிக்க