Latest News
Home / இலங்கை (page 440)

இலங்கை

இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) முதல் நாளை வரை 6 கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நாடாளாவிய ரீதியில் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்க செயலாளர் …

மேலும் வாசிக்க

புர்கா அணிய விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிப்பு!

ஊவா மாகாணத்தில் ‘புர்கா’ அணிய விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்தும் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஊவா மாகாண ஆளுனர் மைத்திரி குணரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘புர்கா’ உடையை ஊவா மாகாணத்தில் தடைசெய்வதன் ஊடாக நான் முஸ்லீம் மக்களுக்கு எதிரானவன் அல்ல. மாகாணத்தின் பாதுகாப்பினை முன்னிலைப்படுத்திய வகையிலேயே ‘புர்கா’ தடையை மேற்கொண்டிருக்கின்றேன். கடந்த காலத்தில் சங்கைக்குரிய ஞானசார தேரரின் முஸ்லீம்களுக்கெதிரான செயற்பாடொன்றிலும் நான் தேரரை எதிர்த்து …

மேலும் வாசிக்க

ஞானசாரருக்கு எதிரான வழக்கில் இடை மனுதாரராக இணைய தமிழ் சட்டத்தரணிகள் தீர்மானம்!

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இடைபுகு மனுதாரராக இணைவதற்கு தமிழ் சட்டத் தரணிகள் தீர்மானித்துள்ளனர். முல்லைத்தீவு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஞானசார தேரர் செயற்பட்டிருந்ததைத் தொடர்ந்து வடக்கு மாகாண சட்டத்தரணிகளால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு ஹோமகம நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டிருந்த போது, நீதிமன்றத்துக்குள் …

மேலும் வாசிக்க

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் – பிரதமர் இணக்கம்!

சஜித்தை வேட்பாளராக களமிறக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒப்புக் கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என அறிய முடிகின்றது. இருப்பினும் இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு …

மேலும் வாசிக்க

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் நேற்று இரவு அலரி மாளிகையில் நடத்திய கலந்துரையாடலையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்காக கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை எதிர்வரும் வியாழக்கிழமை கூட்டுவதற்கும் இந்த சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் வஜிர அபேவர்த்தன, …

மேலும் வாசிக்க

போலி ஆவண தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு : மூவர் கைது

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலயாணி பிரதேசத்தில் போலி ஆவண தயாரிப்பு நிலையமொன்று சுற்றி வளைக்கப்பட்டு சந்தேகநபர்கள் மூவர் மீரிகம விஷேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வத்தளை, கனேமுல்ல மற்றும் மருதங்கடவல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 39 , 53 மற்றும் 63 வயதுடையவர்கள் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அரச அதிகாரிகள், காணிப் பதிவாளர் அலுவலகம், சட்டத்தரணி, அதிபர், இலங்கை துறைமுக …

மேலும் வாசிக்க

கோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, 2005 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்தபோது ஹம்பாந்தோட்டை – மெதமுலன வாக்காளர் இடாப்பில் பெயர் உள்வாங்கப்பட்ட விதம், குறித்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் ஊடாக சட்ட விரோத செயலொன்றினை புரிந்தமை மற்றும் தற்போது இலங்கை கடவுச் சீட்டொன்றினை பெற்றுக்கொண்ட விதம் தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி. கொழும்பு …

மேலும் வாசிக்க

தெரிவுக்குழு முன் ஜனாதிபதி தெரிவித்தது என்ன?

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹரான் குறித்தும் இவ்வாறான ஒரு தாக்குதல் திட்டம் இருப்பது தெரிந்தும் பொலிஸ்மா அதிபரோ பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவோ என்னிடம் எதனையும் தெரிவிக்கவில்லை. அனாவசியமான விடயங்கள் குறித்து என்னிடம் பேசிய நபர்கள் அவசியமான விடயத்தை மறைத்துள்ளனர் என பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன் பாதுகாப்பு குழுக்கூட்டம் நம்பிக்கைக்குரிய இடமாக கருதவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து …

மேலும் வாசிக்க

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் கைது!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டுப் பெற்றுக்கொண்டமைக்கான போதிய ஆதாரங்களுடன் இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் அனுமதிக்காக 50 ஆயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்றுக் கொண்டதற்கான …

மேலும் வாசிக்க

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுரம் நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கு ரயில் பயணச்சீட்டு இன்று(வெள்ளிக்கிழமை) மாலை விநியோகிக்கப்பட்டுள்ளது. எனினும் உரிய நேரத்துக்கு ரயில் வராமை காரணமாக இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. நேற்று நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் சில ரயில்வே தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் வாசிக்க