Latest News
Home / இலங்கை (page 425)

இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கு புதிய நடைமுறை – ஜனாதிபதி!

கனரக வாகன உரிமங்களுக்கான முழு மருத்துவ பரிசோதனையையும், குறைந்த வலுக்கொண்ட வாகன உரிமங்களுக்கு கண் பரிசோதனையையும் மட்டுமே பெற்றுக்கொள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார். பயணிகள் போக்குவரத்து அமைச்சின் மூத்த அதிகாரிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்தார். அந்தவகையில் “கனரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு மட்டுமே முழுமையான மருத்துவ பரிசோதனைச் சான்றிதழ் பெறப்படவேண்டும். ஆனால் இலகுரக …

மேலும் வாசிக்க

சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடினால் வடக்கு கிழக்கில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் ;சிவாஜிலிங்கம்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என அரசு கூறுமாயின் வடக்கு கிழக்கு மக்கள் அன்றைய நாளினை தேசிய துக்க தினமாக அனுஷ்ட்டிக்க நிர்ப்பந்திக்கப் படுவார்கள் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கடசியின் செயலாளரும் முன்னாள் பாராளுமனற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இதனால் பல்லின மக்கள் இடையே பிளவுகள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.   யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற …

மேலும் வாசிக்க

பிறக்கபோகும் புதுவருடம் – மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

புத்தாண்டு காலத்தில் அனர்த்தங்களைத் தவிர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பட்டாசுகளைப் பயன்படுத்துதல் மற்றும் வீதி, நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு பண்டிகைக் காலத்தில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் சிறுவர்கள் விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்துமாறும் அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளதமையும் குறிப்பிடதக்கது.

மேலும் வாசிக்க

தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவன் நானே – கருணா!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முக்கிய பங்கை ஆற்றியவன் நான் என முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஆனால் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இருப்பவர்களின் பதவி ஆசையாலும் பண ஆசையாலும் அதன் கொள்கை இல்லாத அரசியல் என்ற நிலையில் அவர்களின் நடவடிக்கை சென்றுகொண்டிருப்பதாகவும் அவர் …

மேலும் வாசிக்க

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழா இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்டடக்கிளையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் ஆரம்பமானது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கலந்து கொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் …

மேலும் வாசிக்க

அரசாங்கம் வடக்கு- கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாது- அநுர

சிங்கள-பௌத்த தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் முனையுமானால் வடக்கு- கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாதென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிங்கள-பௌத்த தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்தால்,வடக்கு -கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாது. அத்துடன் ஜனாதிபதியின் எதிர்கால கொள்கைகள் குறித்து நாடாளுமன்ற …

மேலும் வாசிக்க

பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார் முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்தோடு அவர் பொலன்னறுவை மாவட்டத்தில் சிறிலங்க சுதந்திர கட்சி மற்றும் சிறிலங்க பொதுஜன பெரமுனவின் கூட்டனியில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் ஆரம்பம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் குறித்த கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. கடந்த 17ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாகவே இன்றைய கூட்டம் இடம்பெற்று வருகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பங்காளிக் கட்சிகளுக்கான ஆசன …

மேலும் வாசிக்க

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகின

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி http://doenets.lk என்ற அரசாங்க இணையத்தளத்தினூடாக பரீட்சை பெறுபேறுகளை பரீட்சார்த்திகள் பார்வையிட முடியும். குறித்த பெறுபெறுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்திருந்த நிலையில் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி, தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்தும் பார்க்க முடியும். கடந்த …

மேலும் வாசிக்க

மக்கள் கண்களை திறப்பார்கள்: ஹிருணிகா

புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் இடம்பெற்றுவரும் சில விடயங்கள் நாட்டைப் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளன. இதனால் எதிர்வரும் பொதுத்தேர்தலில்  மக்களின் கண்கள் திறக்கும் என்று நம்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹிருணிகா பிரேமசந்திர மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தின் செயற்பாடுகள்,  நாட்டின் நிலைமை  ஆகியவை …

மேலும் வாசிக்க