Latest News
Home / இலங்கை / கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிரமங்களை ஏற்படுத்திய 60 பேர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிரமங்களை ஏற்படுத்திய 60 பேர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு சில தரப்பினர் தொடர்ந்தும் சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்துபவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்கானித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வாரங்களில் பயணிகளுக்கு அழுத்தம் பிரயோகித்த 60 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கடந்த வியாழக்கிழமை 4 பேரும் நேற்றைய தினம் இரண்டு பேரும் அடங்கலாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *