Latest News
Home / ஆலையடிவேம்பு (page 2)

ஆலையடிவேம்பு

மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை….

மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற அம்பாள் பாலர் பாடசாலை, கனகதுர்க்கா, விவேகானந்தா, விநாயகர் என நான்கு பாலர் பாடசாலைகள் இணைந்து மாணவர்களின் சிறுவர் சந்தை இன்று (15) பாலர் பாடசாலை ஆசிரியர்களின் நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் கோளாவில் அம்பாள் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது. நிகழ்வில் அதிதியாக மகளிர் அபிவிருத்தி நிலைய தலைவி திருமதி. காந்திமதி ஜோய், ஆலையடிவேம்பு முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோத்தர் ஹரீமா, கோளாவில் பெருநாவலர் வித்தியாலய அதிபர் திரு.மணிவண்ணன், …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, அன்னை சாரதா கலவன் பாடசாலை புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு….

 -ஹரிஷ், தனுசன்- அக்கரைப்பற்று, அன்னை சாரதா கலவன் பாடசாலையில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் கோமளம் துளசிநாதன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (13) புதன்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார், அன்னை சாரதா கலவன் பாடசாலையின் முதல் அதிபராக நியமனம் பெற்று பாடசாலை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பி.தணிகாசலம் அவர்கள் கலந்துகொண்டதுடன். நிகழ்வில் பாடசாலை சமூகத்தினரும் கலந்து …

மேலும் வாசிக்க

பிரதேச மின் நிலைமாற்றிகளுக்கு (Transformer) நடக்கும் அட்டூழியம்….

ஆலையடிவேம்பு பிரதேச பகுதிகளில் மின் நிலைமாற்றிகளில் (Transformer) காணப்படும் புவிக்கம்பி (Earth wire) இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. எவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக அக்கரைப்பற்று இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மூலமாக அறியக்கூடியக உள்ளது. புவிக்கம்பியினை வெட்டி அகற்றுவதனால் மின் பாவனையாளர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படக்கூடியதாக சாந்தப்பங்கள் அதிகளவாக ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தார்கள். மின் நிலைமாற்றிகளில் இருந்து புவிக்கம்பி அகற்றப்படுவது தொடர்பாக அனைவரும் விழிப்புடன் இருந்து இவ்வாறு அகற்றப்படுவதனை தடுத்து …

மேலும் வாசிக்க

கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் சரோஜாதேவி ஆசிரியரின் பிரியாவிடை நிகழ்வு…

கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் லோ.சரோஜாதேவி (பவானி) ஆசிரியைக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (07) பாடசாலையின் அதிபர் ஸ்ரீ.மணிவண்ணன் தலைமையில் சிறந்த முறையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் கலந்து ஆசிரியருக்கு ஆசீர்வாதம் வழங்கியதோடு மாணவர்களுக்கு மகா சிவராத்திரியின் பெருமை பற்றி சிறப்புரை ஒன்றினையும் நிகழ்த்தியிருந்தார். மேலும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கோளாவில் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர், …

மேலும் வாசிக்க

பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலய 50 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கியது மட்டக்களப்பு Rotary கழகம்….

மட்டக்களப்பு Rotary கழகத்தினரினால் திருக்கோவில் கல்வி வலய பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட 50 இடைநிலை பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கான அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று (02.03.2024) பாடசாலையின் அதிபர் T.இந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

ஊருக்கு பெருமை சேர்த்த ”கல்வியியலாளர்கள் கௌரவிப்பு விழா”

ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த ”கல்வியியலாளர்கள் கௌரவிப்பு விழா” ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் மற்றும் ”சத்தியம்”வாழும்போதே வாழ்த்துவோம் (இலண்டன்), அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்துடன் இணைந்து நேற்றய தினம் (28) பிற்பகல் 3.00 மணியளவில் அக்கரைப்பற்று சுவாமி விபுலாந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையம் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் த.கயிலாயப்பிள்ளை தலைமையில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தில் சிறப்பானதாக இடம்பெற்றது. நிகழ்வில் கௌரவிக்கப்பட்டவர்கள் விபரம்: கதிரியக்கவியல் வைத்திய …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் திருக்கோவில் கல்வி வலய அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் தந்தையை இழந்த மற்றும் தேவையுடைய குடும்பங்களுடைய 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு 28/02/2024 பாடசாலையின் அதிபர் க.ஜயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இணைந்த கரங்கள் அமைப்பானது கல்விற்க்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்றும் “எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கு கற்றல் …

மேலும் வாசிக்க

கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலயத்திற்கு கோளாவில் சின்னஞ்சிறு 07 மாதக்குழந்தை செய்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம்…..

-கிரிஷாந்- கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலயத்தின் புனராவர்த்தன மகா கும்பாபிஷேகத்திற்கான நிதிக்காக சின்னஞ்சிறு 07 மாதக்குழந்தை உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தினை வழங்கி இருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவமாக பார்க்கப்படுகிறது. அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச அருள் மிகு கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக பெருவிழா கடந்த (22.01.2024) அன்று இடம்பெற்று அதனை தொடர்ந்து புனராவர்த்தன மகா கும்பாபிஷேகத்திற்கான செயற்பாடுகள் ஆலய நிர்வாகத்தினரால் தற்பொழுது …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, இராமகிருஸ்ன மிஷன் மகா வித்தியாலயத்தின் இராணுவ மாணவர் சிப்பாய் படையணியின் sergeant பதவிக்கான சின்னம் மாணவர்களுக்கு சூட்டப்பட்டது….

அக்கரைப்பற்று, இராமகிருஸ்ன மிஷன் மகா வித்தியாலயத்தின் இராணுவ மாணவர் சிப்பாய் படையணியின் sergeant பதவிக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அதிபர் திருமதி.R.நித்தியானந்தன் மற்றும் பிரதி அதிபர் Cpt.திரு.K.ஜனார்தன் (கெப்டன்) தலைமையில் நேற்றய தினம் (22) காலை பாடசாலை ஒன்றுகூடலில் நடைபெற்றது. இராணுவ மாணவர் சிப்பாய் படையணியின் sergeant பதவிக்கான பாடநெறியை ரந்தம்மே NCC முகாமில் 07 நாட்கள் பயிற்சியை முடித்த S.அஸ்வின் மற்றும் S.சுவிதரன் எனும் இரண்டு மாணவர்களுக்கே sergeant …

மேலும் வாசிக்க

கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் M.சன்டேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22) நடைபெற்றது. முதலாம் தரத்திற்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு இரண்டாம் தர மாணவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அதிதிகள் உரைகள் என்பனவும் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க