Latest News
Home / ஆலையடிவேம்பு (page 24)

ஆலையடிவேம்பு

இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தேர்ச்சி பெறுபேறுகளை அடைய வேண்டி ஆலையடிவேம்பு ஶ்ரீ முருகன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை…

இம்முறை 2022 ஆம் ஆண்டிற்கான தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சையில் சிறந்த தேர்ச்சி பெறுபேறுகளை அடைய வேண்டி ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2022.12.18) காலை 07.30 மணியளவில் சிறப்பு பூஜை இடம்பெற ஆலய நிர்வாக சபையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பிரதேச தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் கலந்து கொண்டு இறை ஆசியை பெற்றுக்கொள்ளுமாறு …

மேலும் வாசிக்க

இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தேர்ச்சி பெறுபேறுகளை அடைய வேண்டி அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை…

இம்முறை 2022 ஆம் ஆண்டிற்கான தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சையில் சிறந்த தேர்ச்சி பெறுபேறுகளை அடைய வேண்டி அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2022.12.18) காலை 07.30 மணியளவில் சிறப்பு பூஜை இடம்பெற ஆலய பரிபாலன சபை மற்றும் திருப்பணிச் சபையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பிரதேச தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் கலந்து கொண்டு இறை ஆசியை பெற்றுக்கொள்ளுமாறு …

மேலும் வாசிக்க

புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு மருது விளையாட்டு கழகத்தினரின் அனுசரணையுடன் இலவச கருத்தரங்கு….

எதிர்வருகின்ற தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு நேற்று (2022.12.14) புதன்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் மருது விளையாட்டு கழகத்தினரின் அனுசரணையுடன் இடம்பெற்றது. குறித்த இலவச கருத்தரங்கில் மாணவர்களுக்கு முன்னோடிப் பரீட்சை வினாத்தாள்கள் பயிற்சிகளுடன் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டு கருத்தரங்கு ஆசிரியர் பிரபாகரன் அவர்களால் சிறப்புற நடாத்தி முடிக்கப்பட்டது. மேலும் கருத்தரங்கினை மேற்கொண்ட ஆசிரியர் பிரபாகரன் அவர்களுக்கு மருது விளையாட்டு கழகத்தினரினால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு இன்று (13.12.2022) செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்கள் தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேவகிராம பங்குத்தந்தை வாசு அடிகளாரும், விசேட விருந்தினர்களாக கிறிஸ்தவ பாட ஆசிரிய ஆலோசகர் திரு.யோகராஜா அவர்களும் மற்றும் தேவகிராம உதவி பங்குதந்தையும் கலந்து சிறப்பித்தனர். மேலும் குறித்த ஒளிவிழா நிகழ்வில் மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் பலவும் கோலாகலமாக …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் நிவாரண உதவிகள்…

சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டிங்கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கான பொருளாதார நிவாரண உதவிகளை சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் முன்னேடுத்து வருகின்றது. மேலும் அறப்பணி செயற்திட்டங்களை மற்றும் முன்பள்ளி நிலையங்களையும் முன்னெடுத்து வரும் வேளையில் ஆறுமுக நாவலரின் 200 வது ஆண்டினை முன்னிட்டும், அறப்பணி திட்டத்தின் ஊடாக அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண் தலைமை தாங்கும் …

மேலும் வாசிக்க

திருநாவுக்கரசு வித்தியாலய நீர்வசதி மேம்படுத்தும் திட்டம் “சத்தியம்” அமைப்பின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கிவைப்பு….

ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/ திருநாவுக்கரசு வித்தியாலய பாடசாலையில் நீர் வசதியினை மேம்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக புதிய நீர் ஏற்றும் இயந்திரம், புதிய குழாய் இணைப்பு வசதி செயற்பாடுகள் “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு நேற்றய தினம் (06.12.2022) மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலையில் நீர் வசதியினை மேம்படுத்தும் திட்ட செயற்பாட்டை முன்னெடுக்க பாடசாலையின் அதிபர் சுரேஸ் ஸ்டீபன்சன் அவர்களினால் “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று 7ம் பிரிவை சேர்ந்த பெண் தலமைதாங்கும் குடும்பம் ஒன்றுக்கு சஜிராஜ் நடா அவர்களின் நான்காம் கட்ட மனிதாபிமான பணி…

ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று 7ம் பிரிவை சேர்ந்த பெண் தலமைதாங்கும் குடும்பம் ஒன்றுக்கு தற்போது காணப்படுகின்ற இக்கட்டான பொருளாதார சூழ்நிலையை வெற்றி கொள்ளும் முகமாக நெல் அவித்தல் மற்றும் இடியாப்பம், புட்டு, இட்லி அவித்து வீட்டு கைத்தொழில் ஒன்றை மேற்கொள்வதற்கான சகலவிதமான மூலப் பொருட்களையும் மனிதாபிமான செயற்பாட்டாளர் திரு.கார்த்திகேசு யோகநாதன் அவர்களின் தலைமையில் இன்று (07.12.2022) புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. குறித்த மனிதாபிமான செயற்பாடானது கனடா நாட்டில் வசிக்கும் திரு …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய YOUNG FLOWER’S PREMIER LEAGUE 2022 சுற்றுப்போட்டியில் YOUNG WARRIOR அணி வெற்றி வாகை!

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய YOUNG FLOWER’S PREMIER LEAGUE 2022 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஸ்ரீ தம்மரதன சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது. குறித்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற YOUNG FIGHTERS மற்றும் YOUNG WARRIOR ஆகிய அணியினருக்கு இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் YOUNG WARRIOR அணியினர் சிறப்பாக விளையாடி வெற்றி வாகை சூடி இத் தொடரில் 1ம் இடத்தை …

மேலும் வாசிக்க

“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு மகாசக்தி அறநெறிப் பாடசாலை சிறுவர் பூங்கா மறுசீரமைக்கப்பட்டு அங்குராப்பண நிகழ்வு…

ஆலையடிவேம்பு பிரதேச சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வேண்டுதலுக்கு அமைய “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறிப் பாடசாலை சிறுவர் பூங்கா முழுவதுமாக புதுப்பொலிவுடன் மறுசீரமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காக வழங்கும் அங்குராப்பண நிகழ்வு இன்று (25.11.2022) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. இந்த சிறுவர் பூங்கா மறுசீரமைப்பிற்கு சத்தியமூர்த்தி “சத்தியம் “ வாழும் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிகிராம இந்து மயானத்தில் மாபெரும் சிரமானப்பணி…….

-ம.கிரிசாந்- ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பல்வேறு சமய சமூக பணிகளை அண்மைக்காலத்தில் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (25.11.2022) வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிகிராம இந்து மயானத்தில் மாபெரும் சிரமானப்பணியினை ஏற்பாடு செய்து முன்னெடுத்தனர். அமைப்பின் தலைவர் க.சுந்தலிங்கம் தலைமையில் அமைப்பின் ஆலேசாகரும் ஓய்வு பெற்ற அம்பாரை மாவட்ட உள்ளக கணக்காய்வாளர் எஸ்.கனகரெத்தினத்தின் வழிகாட்டலில் இடம்பெற்ற சிரமதானப்பணியில் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். குறித்த …

மேலும் வாசிக்க