Latest News
Home / ஆலையடிவேம்பு (page 26)

ஆலையடிவேம்பு

மகாசக்தி சி.க.கூ.சங்க பெரும் போக விவசாயக் கடன் ஆலையடிவேம்பு பிரதேச மகாசக்தி சங்க விவசாயப் பயிர்செய்கை மேற்கொள்ளும் 120 அங்கத்தவர்களுக்கு வழங்கிவைப்பு…..

வரைவுள்ள மகாசக்தி சி. க. கூ.சங்கத்தினால் இன்று (04.11.2022) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேசத்தவர்களுக்கு பெரும் போக விவசாயக் கடன் வழங்கும் நிகழ்வு சங்க உபதலைவர் – திரு. க. நவரத்தினம் அவர்கள் தலைமையில் மகாசக்தி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு தலைமைக்காரியாலய கூ. அ. உத்தியோகத்தர் (அபிவிருத்தி) கல்முனை ஜனாப் M.I.M. பரீட் அவர்கள் பிரதம அதிதியாகவும், சங்கத்தின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் கல்முனை …

மேலும் வாசிக்க

கண்ணகி கிராம மலை உடைப்பு சம்பவம்: பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கள விஜயம்….

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கண்ணகி கிராமத்தில் காணப்படுகின்ற மலை உடைப்பு சம்மந்தமாக கண்ணகி கிராம மக்களின் முறைப்பாட்டின் பிரகாரம் அம்பாறை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்கள் அண்மையில் நேரில் அப்பிரதேசத்துக்கான கள விஜயம் மேற்கொண்டு இருந்தார். கள விஜயத்தில் மக்களுடன் இது தொடர்வாக கலந்துரையாடியதுடன் குறித்த மலை உடைப்பு செயற்பாடுகளை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை அன்றைய தினமே முன்னெடுத்தும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.    

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி பாடசாலையின் விஞ்ஞானக் கழகத்தினால் திருசியம் நூல் வெளியீடு…

கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் விஞ்ஞானக்கழக தினமானது நேற்று (03/11/2022) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் பிரதி அதிபர் திரு.C.மதியழகன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுகளுக்கு வருகை தந்த அதிதிகளை இசை வாத்தியங்கள் இசைத்து மலர்மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர். இன் நிகழ்விற்கு அதிதியாக திருக்கோவில் கல்வி வலயத்தின் நிர்வாக பிரிவு பிரதிக் கல்விப் பண்ணிப்பாளர் திரு.S.சுரனுதன் அவர்களும் சிறப்பு அதிதியாக பாடசாலையின் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவாரம் பகுதியில் விரைவில் புதிய சிறுவர் பூங்கா: சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்….

-ம.கிரிசாந்- ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவனது அண்மையில் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றாற்போல் சிறுவர்கள் விரும்பும் வகையிலான புதிய விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டு ஆலையடிவேம்பு பிரதேச சபையினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக தற்போது பிரதேச சிறுவர்கள் மற்றும் சிறுவயது பாடசாலை மாணவர்கள் குறித்த சிறுவர் பூங்காவிற்கு சென்று மகிழ்வுடன் விளையாடிவருவதனை காணக்கூடியதாகவும் இருக்கின்றது. இவ்வாறாக இருக்கின்ற நிலையில் உரிய தரப்பினருக்கு அதாவது ஆலையடிவேம்பு …

மேலும் வாசிக்க

ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்தினால் ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி மாணவர்களுக்கான சீருடை வழங்கிவைப்பு….

-காந்தன்- மாணவர்களுக்கான விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்வானது அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இன்று (02/11/2022) காலை 11.00 மணியளவில் பிரதி அதிபர் திரு.C.மதியழகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் J.R.டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் வழிகாட்டலுடன் இடம்பெற்றதுடன். மாணவர்களுக்கான விளையாட்டு சீருடைக்கான அனுசரணையினை ஆலையடிவேம்பு ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகம் வழங்கி இருந்தது. அதன் தலைவர் திரு.பி. புனிதராஜா, மற்றும் முன்னாள் விளையாட்டுக்கழகத் …

மேலும் வாசிக்க

கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தில் பல நூறு ஆண்டுகளாக தொடரும் கந்தசஷ்டி பெருவிழாவின் நாளை சூரன் தலைகாட்டல், வேல்வாங்குதல், சம்காரம் நிகழ்வுகள்….

அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தில் பல நூறு ஆண்டுகளாக தொடரும் கந்தசஷ்டி பெருவிழாவின் இந்த வருடத்துக்கான இன்றைய நாளுக்கான நிகழ்வுகள் பக்திபூர்வமாக இடம்பெற்றது. மேலும் நாளை (30.10.2022) மாலை 03.00 முதல் கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய வளாகத்தில் சூரன் தலைகாட்டல், வேல்வாங்குதல், சம்காரம் நிகழ்வுகள் என்பன சிறப்பாக இடம்பெற இருக்கின்றது. முருகன் அருள் பெற பக்த அடியார்களை அழைக்கின்றார்கள் ஆலய நிர்வாகத்தினர்.

மேலும் வாசிக்க

“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் மாணவர் கல்வி மேன்பாட்டு திட்டம் – 2022 மாதிரி வினாத்தாள் பொதி வழங்கும் முதல்கட்ட நிகழ்வு….

“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் இந்த வருடம் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களும் பயன்பெரும் முறையில் மாதிரி வினாத்தாள் பொதிகள் சென்றடைய வேண்டும் என்ற தொனிப்பொருளில் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் முதல்கட்டமாக இன்று (28.10.2022) வெள்ளிக்கிழமை நண்பகல் 03.00 மணியளவில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் உள்ளடங்கும் வகையில் சிறப்பு …

மேலும் வாசிக்க

பல ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரிய நொச்சி மரம் சாய்ந்து விழுந்து ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தின் ஒரு பகுதிக்கு சேதம்!!!

ம.கிரிசாந் திருக்கோவில் கல்வி வலய, ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் நேற்று இரவு (27.10.2022) பல ஆண்டுகள் பழமை வாய்ந்த நொச்சி இனத்தை சேர்ந்த பாரிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்து பாடசாலையின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது. குறித்த பாடசாலையில் முன் வாசலில் பல வருடங்களாக இருந்து வந்த நொச்சி மரத்தின் அடிப்பகுதி பலவீனம் அடைந்து பாதிப்படைந்தமையினால் நேற்று இரவு குறித்த மரமானது சாய்ந்து …

மேலும் வாசிக்க

நூலக வாசங்களை அச்சிட்டு அன்பளிப்பாக அக்ரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை நூலகத்திற்க்கு அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு….

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு எனும் தலைப்பில் நூலகத்தின் முக்கியத்துவம் என்பவற்றினை மாணவர்களுக்கிடையில் எடுத்துக்காட்டும் முகமாக அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை நூலகத்திற்கு நூலக வாசங்களை அச்சிட்டு அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வு இன்று (26/10/2022) புதன்கிழமை காலை 9.30 மணியளவில் பாடசாலை பிரதி அதிபர்களான திரு.C.மதியழகன், திரு.க.ஜயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலை நூலகத்திற்கு நூலக வாசங்களை அச்சிட்டு அன்பளிப்பாக Thaki shanth.H. …

மேலும் வாசிக்க

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொனிப்பொருளின் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள்….

-காந்தன்- தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொனிப்பொருளின் கீழ் கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இன்று (19/10/2022) புதன்கிழமை காலை 10.30 மணியளவில் பாடசாலை அதிபர் மற்றும் பிரதிஅதிபர் தலைமையில் பாடசாலை நூலக பொறுப்பாளர்களான S. A.C.M. றமின், திரு.சி.சிறிக்காந்தன், திருமதி.கோ.கிரியாழினி ஆகியோரின் ஏற்பாட்டிலும் நூலகத்தில் தரம் 06 தொடக்கம் 09 வரையான வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டிகளுக்கு திருமதி.T.பிரியதர்சினி, …

மேலும் வாசிக்க