Latest News
Home / Kirishanth admin (page 29)

Kirishanth admin

தேசிய கீதத்தை மாற்றியது குறித்து விசாரணை!

ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ஆரம்ப விழாவில் தேசிய கீதம் மாற்றப்பட்டமை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு கவலை தெரிவித்துள்ளது. தேசிய கீதத்தை விருப்பப்படி மாற்றுவது அரசியலமைப்புக்கு எதிரான செயல் என்றும் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. இதனை அனுமதிக்க முடியாது  என்பதால், குறித்த நிகழ்வு தொடர்பில் விரைவான விசாரணையொன்று இடம்பெறவுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே. டி. என். ரஞ்சித் அசோக …

மேலும் வாசிக்க

கோளாவில் பெருநாவலர் வித்தியாலய, சிவசக்தி அறநெறி மாணவர்களின் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வு….

சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளின் குருபூஜை தின நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச, கமு/திகோ/கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சிவசக்தி அறநெறி மாணவர்களினால் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வு நேற்று (29) இடம்பெற்றது. இதற்கான ஒழுங்கமைப்புக்களை ஆலையடிவேம்பு இந்துமாமன்றம் மேற்கொண்டிருந்தது. சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களின் சிறப்புக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் அறநெறி கல்வியினை ஊக்குவிக்கும் முகமாகவும் குறித்த நிகழ்வு திறன்பட இடம்பெற்றிருந்தது. சிவசக்தி அறநெறி மாணவர்கள் சுந்தரமூர்த்தி நாயனாரின் உருவப்படம் …

மேலும் வாசிக்க

திருக்கோவில் கல்வி வலய பிரதேச பாடசாலை மாணவர்களது சிகையலங்காரத்தில் சீரான ஒழுங்குமுறையை பேணுதல்: சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்தினரால் உறுதி!

திருக்கோவில் கல்வி வலய பிரதேச பாடசாலை மாணவர்களது சிகையலங்காரத்தில் சீரான ஒழுங்குமுறையை பேணுதல் தொடர்பான விசேட கூட்டமொன்று திருக்கோவில் பிரதேசசெயலகத்தில் நேற்று (26) இடம்பெற்றது. மாணவர்களின் சிகை அலங்காரம் தொடர்பாக பல்வேறு விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் இக்காலகட்டத்தில் நடாத்தப்பட்ட இக்கூட்டத்தில், பாடசாலை மாணவர்களுக்கான சிகையலங்காரமானது பாடசாலை சட்டதிட்டங்களுக்கு அமைவானமுறையில் ஒழுக்கமானதாக சகல சிகை அலங்காரநிலையங்களிலும் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கை சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை 25.07.2023 முதல் …

மேலும் வாசிக்க

திருக்கோவில் கல்வி வலய பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகளை நடத்துவதில் புதிய கட்டுப்பாடு!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலய பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை சீரமைத்தலும் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவித்தலும் தொடர்பான விசேட கூட்டமொன்று திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்றது. இக் கூட்டத்தில் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவிக்கும் முகமாகவும் மாலை நேரங்களில் மைதானங்களில் மாணவர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் ஆலயங்களுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவிக்கும் முகமாகவும், …

மேலும் வாசிக்க

உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான பாதயாத்திரை ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவிலில் இருந்து இன்று ஆரம்பமாகியது…..

உகந்தை மலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் இடம்பெறுகின்ற ஆடிவேல் மகோற்சவத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் ஒழுங்குசெய்யப்பட்ட உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கான புனித பாதயாத்திரை ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் ஸ்ரீ வினேஸ்வரர் ஆலயத்தில் இருந்து இன்று (26/07/2023) புதன்கிழமை அதிகாலை 04.00 மணியளவில் ஆரம்பமாகியது. குறித்த புனித பாதயாத்திரையில் 25 இற்கும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் யாத்திரையின் முதலாம் நாளாகிய …

மேலும் வாசிக்க

24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்

போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முறையின் கீழ், 24 புள்ளிகளைபெறும் சாரதியின் அனுமதிப்பத்திரம் உடனடியாக இரத்து செய்யப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். இதற்கிடையில், வீதிகளில் இடம்பெறும் தவறுகளுக்கு குறித்த வீதியிலே அபராதம் அறவிடப்படும் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கான அனைத்து பரிவர்த்தனைகளையும் டெபிட் …

மேலும் வாசிக்க

முட்டைக்கான வர்த்தமானி அறிவித்தல் வாபஸ்!

முட்டைக்கான அதிகபட்ச சில்லரை விலையை நிர்ணயித்து இதற்கு முன்னர் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு முதல் மீளப்பெறப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இன்று முதல் 35 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், பொதி செய்யப்பட்ட முட்டைகள் 40 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படவுள்ளதாக வர்த்தக …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பிரதேசத்தில் அவசர பராமரிப்பு வேலை காரணமாக நாளை (26) நீர் விநியோகத் தடை!

அக்கரைப்பற்று பிரதேசத்தில் நாளை (26.07.2023) புதன்கிழமை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 10 மணித்தியாலங்கள் அவசர பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என்பதனை அறியத்தருகிறார்கள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினர். மக்கள் தங்களுக்கு தேவையான நீரை முன்கூட்டியே சேமித்துவைத்து சிக்கனமாக பாவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.

மேலும் வாசிக்க

சுமந்திரன் போன்ற பிரிவினைவாதிகள் தேர்தல்கள் மூலம் அரசியல் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர் : முஸாமில்!

சுமந்திரன் போன்ற தமிழ் பிரிவினைவாதிகள், நாட்டில் இப்போது இருக்கும் பொருளாதார சிக்கல்களைளையும், ஜனாதிபதித் தேர்தலையும் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான அரசியல் தேவைகளை பூர்த்தி செய்ய முற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸாமில் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொலிஸ் அதிகாரம் இல்லாமல் ஏனைய அனைத்து அதிகாரங்களையும் வழங்க, ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார் என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் …

மேலும் வாசிக்க

2023ல் இதுவரை 55,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வரை மொத்தம் 55 ஆயிரத்து 49 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் 52 பிரதேசங்கள் டெங்கு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதிகளவான நோயாளிகள் குறிப்பாக 11,929 பேர் கமபஹாவில் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. …

மேலும் வாசிக்க