Latest News
Home / Kirishanth admin (page 50)

Kirishanth admin

200 ரூபா இலஞ்சம் பெற்ற அதிகாரி கல்முனையில் கைது!

கல்முனை தனியார் பேருந்து நிலைய பொறுப்பதிகாரி   சாரதி ஒருவரிடம் 200 ரூபா இலஞ்சம் வாங்கிய நிலையில்  கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (புதன்கிழமை) பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண போக்குவரத்து சபையின் தனியார் பேருந்தி நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் குறித்த நபர்   பேருந்து நிலையத்தில் இருந்து  போக்குவரத்து அனுமதி பத்திரம் இல்லாது போக்குவரத்து சேவையில் ஈடுபடுதற்கு   சராதிகளிடம் தொடர்ச்சியாக   இலஞ்சம் வாங்கிவருவதாக இலஞ்ச …

மேலும் வாசிக்க

கோலாகலமாக நடைபெற்ற கோரக்கர் மாபெரும் கௌரவிப்பு விழா….

நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம், கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கம் மற்றும் கோரக்கர் பட்டதாரிகள் சமூக சேவை ஒன்றியம் இணைந்து மாபெரும் கௌரவிப்பு விழா இன்று (08) கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது பிரதம அதிதியாக பிரித்தானிய சைவ முன்னேற்றச் சங்கத்தின் கட்டடத் திட்டச் செயலாளரும் ஜெய் கட்டிட நிர்மாண ஆலோசனை நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜெயகுமார் அவர்களும் விசேட அதிதிகளாக சம்மாந்துறை …

மேலும் வாசிக்க

கண்ணகி கிராமத்தில் காட்டுயானை அட்டகாசம்: நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கையும்! விசனமும்….

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணகி கிராமத்தில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்புகள், விவசாய நிலங்களுக்குள் வருகைதந்து தொடந்து அட்டகாசம். கண்ணகி கிராம பகுதியில் சுமார் 650 குடும்பங்கள் வசித்துவருவதுடன் குறித்த பகுதியில் அண்மைக்காலமாக இப்பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதுடன் மக்கள் குடியிருப்பு பகுதியில் உட்புகுந்து தொடர்ந்தும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. கடந்த வருடம் நவம்பர் மாதம் குறித்த காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி …

மேலும் வாசிக்க

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கையில் தரையிறங்கியது!

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே குறித்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. நியூசிலாந்தின் ஒக்லாந்தில் இருந்து டுபாய் நோக்கி பயணித்த போது, ​​எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை இந்த விமானம் வந்தடைந்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானத்திற்கு 62 ஆயிரத்து 800 …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமிக்கு முன்பாக கார் விபத்து!

அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் அக்கரைப்பற்று 241 ஆம் காலாற்படையணி இராணுவ முகாமிக்கு முன்பாக (04) நேற்றிரவு 11.00 அளவில் இடம்பெற்றது. இராணுவ முகாம் வீதித்தடைக்கு முன்பாகச் சென்று கொண்டிருக்கும் வேளையில், திடிரென பிராதான வீதியின் சாலையின் குறுக்கு வழியில் முச்சகர வண்டியொன்று வீதியைக் கடந்த சாந்தப்பத்தில். முச்சகர வண்டியுடனான விபத்தை தடுக்கும் நோக்கில், சாரதி தடையைப் பிரயோகித்துள்ளார். இதே நேரம் குறித்த கார் வீதியை விட்டு விலகி தடம் …

மேலும் வாசிக்க

உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்த அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி!

ரஷ்யாவுடனான அதன் தீவிரப் போரின் போது தீர்ந்துபோன உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்துவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்க உள்ளது. இதில் உயர் துல்லியமான ஹிமார்ஸ் பீரங்கி ரொக்கெட்டுகள் மற்றும் ஹோவிட்சர்கள் அடங்குவதாக, வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள பீரங்கிகளும் குண்டுகளும் தேவை என முன்பு உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தமைக்கு அமைய இந்த உதவி …

மேலும் வாசிக்க

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒரு வருடமேனும் பிற்போடப்படும்? பெப்ரல்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பல மாதங்கள் அல்லது ஒரு வருடமேனும் பிற்போடப்படும் நிலையே இருப்பதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தேர்தல் முறையை மாற்றுவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதியின்றி ஒத்திவைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார். வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் மீண்டும் வேட்புமனு கோருவதற்கே …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு மூவரின் விளக்கமறியல் நீடிப்பு…!

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற அலுவலகக் கட்டடத் தொகுதிக்கு ஒப்பந்த அடிப்படையில் தீ வைத்த மூவரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணைகள் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் தெசீபா ரஜீவன் முன்னிலையில் கடந்த (28.02.2023) இடம்பெற்றது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தீ பரவியிருந்தது. இந்தத் …

மேலும் வாசிக்க

திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் நிகழ்வு….

2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த தை மாதம் (25) அன்று வெளியாகிய நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகளவான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்ததுடன், ஆலையடிவேம்பு கல்வி கோட்டம் வலயத்தில் முதலாம் இடத்தையும் பெற்றது. இவ்வாறு இருக்கின்ற நிலையில் இன்றைய தினம் (02) ஆலையடிவேம்பு கல்வி கோட்ட கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் இருந்து 05 ஆம் தர …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச ஒரு பகுதியில் நாளை (01) மின் தடை!

ஆலையடிவேம்பு பிரதேச ஒரு பகுதியில் மின் வழிகளில் படும் மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்காக 2023.03.01 ஆம் திகதி புதன் 08.30 மணி தொடக்கம் மதியம் 12.00 மணி வரை மின்சாரம் தடைப்பட இருக்கிறது. முருகன் கோயில் வீதி, பிள்ளையார் கோயில் முன் வீதி, கோப்ரட்டி வீதி, கோபால் கடை வீதி, நிகோட் வீதி, கத்தையா வீதி, அதன் கிளை வீதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்பதை தெரிவிந்துக்கொளவதோடு, அன்றைய தினம் மரக்கிளைகளைவெட்டி …

மேலும் வாசிக்க