Latest News
Home / Kirishanth admin (page 28)

Kirishanth admin

பனங்காடு அக்னி விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் விளையாட்டு சீருடை வழங்கி வைப்பு….

பனங்காடு அக்னி விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வானது அக்னி விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் ரவிந்திரன் வினோஜன் தலைமையில் இன்று (06/08/2023) காலை 11.00 மணியளவில் பனங்காடு விளையாட்டு மைதான கட்டடத்தில் இடம்பெற்றது. ஆலையடி வேம்பு பிரதேசத்தில் தனக்கென ஒரு இடத்தினை வைத்துக் கொள்ளும் கழகமாகவும், பல சமூக சமய செயற்பாடுகளில் அக்கறை காட்டிவரும் கழகமாகவும் பனங்காடு அக்னி விளையாட்டு கழகம் திகழ்கின்றது. இச் சீருடைக்கான நிதி பங்களிப்பினை …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, அருள் மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் சிரமதானம்…..

அக்கரைப்பற்று, அருள் மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் இன்றைய தினம் (04) வெள்ளிக்கிழமை சிரமதானம் மேற்கொண்டிருந்தார்கள். அக்கரைப்பற்று, அருள் மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் (11/08/2023) அன்று ஆரம்பமாக இருக்கும் நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் குறித்த சிரமதான பணி அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையில் நேர்த்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் வாசிக்க

கிழக்குமாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக பியசேன கிருத்திகன் நியமனம்….

ஆலையடிவேம்பு பிரதேச மண்ணை சேர்ந்த பியசேன கிருத்திகன் அவர்கள் இன்றைய தினம் (04) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமாண் அவர்களிடம் இருந்து கிழக்குமாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமனத்தைப் பெற்றுக்கொண்டார். குறித்த நியமனத்தில் மூலமாக கிழக்குமாகாணத்தில் வீடற்றவர்களுக்கு வீடமைப்பு திட்டங்கள் கொண்டு வருவதற்குரிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு பணிப்பாளர் சபை மூலமாக பல செயற்பாடுகளை முன்னெடுக்க கூடிய சர்ந்தப்பங்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். கிழக்குமாகாண வீடமைப்பு அதிகார …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கான பிரதேச செயலாளர் நியமனம் தொடர்பாக புதிய லங்கா சுதந்திர கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் கருத்து!

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட இருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்ற புதிய பிரதேச செயலாளர் நியமனம் தொடர்பாக பிரதேச பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்களும் மாறுபட்ட விமர்சனங்களும் தோன்றியுள்ளதாக அறியக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறு இருக்கின்ற நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கான புதிய பிரதேச செயலாளர் நியமனம் தொடர்பாக புதிய லங்கா சுதந்திர கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரான க.ரகுபதி அவர்கள் நேற்றய தினம் (03/08/2023) கருத்து வெளியிட்டிருக்கிறார் . …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவர்கள் வலய மட்ட ஆங்கில தின போட்டியில் சாதனை!!!

– ம.கிரிசாந்- திருக்கோவில் வலய, வலய மட்ட ஆங்கில தின போட்டி அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்று, கமு/திகோ/ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம் சார்பாக பங்குபற்றிய 10 மாணவர்கள் முதலாம் இடத்தினையும் 11 மாணவர்கள் இரண்டாம் இடத்தினையும் 07 மாணவர்கள் மூன்றாம் இடத்தினையும் பெற்றிருப்பதுடன் இதில் 21 மாணவர்கள் மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகியும் உ‌ள்ளன‌ர். இவ்வாறாக ஆங்கில போட்டிகளில் அதிகளவான மாணவர்கள் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தி மாவட்ட …

மேலும் வாசிக்க

4 மாதங்களில் சந்தைக்கு வரவுள்ள புதிய உருளைகிழங்குகள்

பதுளை மாவட்டத்தில் அடுத்த 4 மாதங்களில் அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை சந்தைப்படுத்த முடியும் என பதுளை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் மொத்த விலை 280 ரூபாவாக உள்ளதுடன், இந்த பருவத்தில் மூவாயிரம் ஹெக்டேயருக்கும் அதிகமான உள்ளூர் உருளைக்கிழங்கின் அறுவடை சந்தைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரசாயன உர மூட்டைக்கு 10,000 ரூபாய் குறைக்கப்பட்டதால்;; நிம்மதி அடைந்துள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

மொட்டயாமலை பகுதியில் தீயில் எரிந்து சேதமாகிய நீர் குழாய்கள்!

ஆலையடிவேம்பு பிரதேச, சாகாமம் வீதி மொட்டயாமலையை அண்மித்த பிரதான வீதியில் குடிநீர் இணைப்பிற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான நீர் குழாய்கள்(PE pipe) இன்று (01/08) தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. அருகில் காணப்படும் வயல் பகுதியில் வைக்கோலுக்கு வைத்த தீ வீதியில் இருந்த நீர் குழாயில் தாவி எரிந்திருக்கலாம் என பிரதேச மக்களால் ஊகிக்கப்படுகிறது. சம்பவமானது இன்று நண்பகல் வேளையில் இடம்பெற்றதுடன் இதனைக் கேள்வியுற்ற முன்னாள் …

மேலும் வாசிக்க

கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அனுமதி!

தொழில் துறைக்கு தேவையான கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சந்தையில் கோழி இறைச்சியின்  விலை உயர்வால் மக்கள் படும் இன்னல்களை குறைக்கும் வகையில் அரசாங்கம் …

மேலும் வாசிக்க

”அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்”

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்கு தொடர்பாக தாம்  விவாதித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பின் 13வது திருத்தம், மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் 13 ஆவது …

மேலும் வாசிக்க

இந்திய உயர்ஸ்தானிகர் – கூட்டமைப்பிற்கு இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அதன்படி நாளை செவ்வாக்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாட உள்ளார். இந்தச் சந்திப்பில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதமர் மோடி வெளியிட்ட கருத்துக்கள், சர்வகட்சிக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க