Latest News
Home / abiraj (page 4)

abiraj

மார்ச் 7 கருப்பு ஞாயிறு தினம் பிரகடனம்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என தெரிவித்து கருப்பு ஞாயிறு தினமமாக அறிவிக்க கொழும்பு மறைமாவட்ட பேராயர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, எதிர்வரும் 07 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நாடு பூராகவும் ´கருப்பு ஞாயிறு´ தினமாக அறிவிக்க கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயர்கள் தீர்மானித்துள்ளனர்.. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழநத மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காமைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் …

மேலும் வாசிக்க

ஒரு முறை மட்டுமே செலுத்தக் கூடிய கொவிட்-19 தடுப்பூசிக்கு சீனா நிபந்தனையுடன் கூடிய அனுமதி!

சீனாவில் உருவாக்கப்பட்ட, ஒரு முறை மட்டுமே செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த நிபந்தனையுடன் கூடிய அனுமதியை சீன அரசாங்கம் வழங்கியுள்ளது. இதுகுறித்து சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழில் வெளியான தகவலில், சீனாவின் முதல் ஏடி5-என்கோவ் கொரோனா தடுப்பூசி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்தத் தடுப்பூசியின் முதல் கட்ட பரிசோதனைகள் கடந்த ஆண்டு மார்ச் 16ஆம் திகதி தொடங்கியது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் …

மேலும் வாசிக்க

சிறுமியொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற இளைஞன் கைது

  மட்டக்களப்பு நகர் பாரதி வீதியில் சைக்கிளில் சென்ற சிறுமியின் சைக்கிள் செயின் கழன்றதையடுத்து அதனை பூட்டி அவருக்கு உதவி செய்துவிட்டு சிறுமியின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை அறுத்து கொண்டு தப்பியோடிய இளைஞன் ஒருவனை இன்று (01) கைது செய்ததாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த 26 ம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பொலிசார் அந்த வீதியிலுள்ள குடிமனை ஒன்றில் பொருத்தப்பட்ட சிசிரிவி கெமரா மூலம் குறித்த …

மேலும் வாசிக்க

இலங்கையில் மோட்டார் சைக்கிள் வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் மோட்டார் சைக்கிள் திருடும் சம்பவங்கள் பாரியளவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு எ.ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேகம பிரதேசத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்து பாகங்களை விற்பனை செய்யும் இடம் ஒன்று க.ண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த இடத்தில் …

மேலும் வாசிக்க

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பமாக உள்ளது. அதன்படி, பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் காலை 7:45 மணிக்கு பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். நான்காயிரத்து 513 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு 6 லட்சத்து 22 ஆயிரத்து …

மேலும் வாசிக்க

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவைர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக இரஜாங்க அமைச்சர் எஸ். வியழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சந்திரகாந்தன், நஸீர் அஹமட், உபதலைவராக பொதுஜன பெரமுனை மாவட்ட அமைப்பாளர் ப. சந்திரகுமார் ஆகியோர் ஜனாதிபதி செயலனியின் பிரதம மேலதிக செயலாளர் என்டன் பெரேராவினால் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாகரன் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 2021 ஆம் …

மேலும் வாசிக்க

70 வருடகால குடிநீர்ப்பிரச்சினை இந்த அரசாங்கத்தில் தீர்த்து வைக்கப்படும்- நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகன் உறுதிமொழி…

வி.சுகிர்தகுமார் சுமார் 70 வருடங்களாக குடிநீர்ப்பிரச்சினையை எதிர்கொண்டுவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணக்கிராம மக்களின் குடிநீர்ப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகனால் உறுதிமொழி வழங்கப்பட்டது.. இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மூலமாக கொண்டு செல்லப்படுவதுடன் இந்த அரசாங்கத்தின் மூலமாக விரைவான தீர்வு காணப்படும் எனவும் கூறினார். கண்ணகிகிராமத்தின் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் …

மேலும் வாசிக்க

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸின் தெற்கு மாகாணமான டவாவோ டெல் சுரில் இன்று ஞாயிற்றுக்கிழமை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கத்தினால் பாரியளவிலான சேதம் ஏற்பட்டிருக்கலாம் என எதிர்பார்ப்பதாக நாட்டின் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் அடிக்கடி நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலைய செயற்பாடுகளில் மாற்றம்!

நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கும் கால எல்லை 14 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரின் சளி மாதிரி பெற்றுக் கொள்ளப்பட்ட தினத்தில் இருந்து 10 நாட்களுக்கு இவ்வாறு கணக்கிடப்படவுள்ளது. எவ்வாறாயினும், தொற்றாளர்களில் சிலர் 6 நாட்களின் பின்னரே தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களில் அவர்கள் 04 நாட்கள் …

மேலும் வாசிக்க

அமரர். பூபாலபிள்ளை சிவகெங்கை

அமரர். பூபாலபிள்ளை சிவகெங்கை சம்மாந்துறையை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்று நாவற்காடு,கோபால் கடை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலபிள்ளை சிவகெங்கை அவர்கள் (07.02.2021) ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற பூபாலபிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்புப்புதல்வியும் அமரர் கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் அழகுதுரை,காருண்ணியம், புவனேந்திரன், சிவகுரு, குமாரசாமி, சந்தானலெட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும். கிருபை, நிரஞ்சலாதேவி, ஆனந்தி, மோட்சவதி மற்றும் கிருபராஜா ஆகியோரின் மாமியாரும். பவளராணி, தில்லையம்மா,கண்ணகை, சண்முகராசா, காலம்சென்ற …

மேலும் வாசிக்க