Latest News
Home / abiraj (page 3)

abiraj

தரச் சான்றிதழ் நிறுவனத் தலைவர் நுஷாட் பெரேரா இராஜினாமா!

இலங்கையின் தரச் சான்றிதழ் நிறுவனத்தின் தலைவர் நுஷாட் பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனியார் நிறுவனமொன்றில் மீண்டும் இணைந்துகொள்ளவுள்ளதால் தான் இராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நுஷாட் பெரேரா, சதொச நிறுவனத்தின் தலைவராககவும் இதற்கு முன்னர் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

நாட்டில் மேலும் 9 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஒன்பது பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 687ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வாசிக்க

கண்டி, குண்டசாலையிலுள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தில் 37 பேர் தனிமைப்படுத்தல்!

கண்டி, குண்டசாலையில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையம் ஒன்றில் நேற்று(சனிக்கிழமை) இரண்டு பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 37பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று முந்தினம் ஓருவர் குறித்த பொலிஸ் பயிற்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பயிற்சி நிலையத்தில் பொலிஸ் கடமையில் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கான பயிற்சிகள் நடாத்தப்பட்டுவருகின்றது. இதில் நாடெங்கிலும் இருந்து சுமார் 120பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயிற்சிகளை முன்னெடுத்துவருகின்றனர். …

மேலும் வாசிக்க

சுகாதார நடைமுறைகளிற்கு ஒத்துழைக்காத உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது – ஐவர் கைது

வவுனியா கொறவப்பொத்தானை வீதி பள்ளிவாசலுக்கு அருகாமையில் அமைந்துள்ள உணவம் ஒன்று சுகாதாரபிரிவினரால் நேற்று(சனிக்கிழமை) தனிமைப்படுத்தப்பட்டதுடன், சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள உணவகங்களில் பணிபுரிபவர்களிடம் பிசிஆர்  பரிசோதனையினை முன்னெடுப்பதற்கும், சுகாதார நடைமுறைகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வருமாறு கடந்த இரு தினங்களிற்கு முன்பாக பணிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த உணவகத்தில் பணிபுரியும் சிலர் சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு சமூகமளிக்கவில்லை. …

மேலும் வாசிக்க

மக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி

தமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி 154 இடங்களிலும், சமக மற்றும் ஐஜேகே ஆகியவை தலா 40 இடங்களில் போட்டியிட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொது செயலாளர் …

மேலும் வாசிக்க

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது- அரசாங்கம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை முழுமையாக வாசிக்காமல், சிலர் குறை கூறுகின்றனர். ஆணைக்குழுவின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள …

மேலும் வாசிக்க

ஐ.நா.வில் இலங்கை விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- வி.உருத்திரகுமாரன்

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான விடயத்தில் இந்தியா தலைமைத்துவம் தாங்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஐ.நா.வின் தற்போதைய ஆணையாளர், முன்னாள் ஆணையர்கள், ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள் குறிப்பிட்டதுபோல், இலங்கையைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த இந்திய அரசு துணைபுரிய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு இன்று …

மேலும் வாசிக்க

இலங்கையில் தயாரிக்கப்படும் கறுவா சிகரெட் : சர்வதேச சந்தைக்கு அறிமுகம் !!

இலங்கையில் தயாரிக்கப்படும் கறுவா சிகரெட்டை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன் காரணமாக பல்தேசிய சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் குழப்பமடைந்துள்ளதாகவும், இலங்கையின் இந்த சிகரெட் தயாரிப்பை சந்தைப்படுத்துவதில் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. சுமார் 6 ஆண்டுகள் கஷ்டப்பட்டு இந்த கறுவா சிகரெட் தயாரிக்க்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தின் மூலம் இலங்கையில் 100 சிகரெட் தயாரிப்பு தொழிற்சாலைகளை ஆரம்பித்து, அவற்றை ஏற்றுமதி செய்து சுமார் ஒரு பில்லியன் …

மேலும் வாசிக்க

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடம்…

ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகளும் ஒவ்வொரு மைதானத்தை சொந்த மைதானமக கொண்டுள்ளது. சொந்த மைதானத்தில் ஏழு போட்டிகளிலும், வெளி மைதானத்தில் ஏழு போட்டிகளிலும் விளையாடும். கொரோனா காலம் என்பதால் கொல்கத்தால், சென்னை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய ஐந்து இடங்களில் நடத்த முடிவு செய்துள்ளது. வாய்ப்ப இருந்தால் மும்பை வான்கடே. அமகதாபாத் எந்த அணிக்கும் சொந்த மைதானம் கிடையாது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் …

மேலும் வாசிக்க

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் முடிவு: வீரர்களின் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் மாற்றம்!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டெஸ்ட் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை பொறுத்தவரை நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அவுஸ்ரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மார்னஸ் லபுஸ்சேகன் 878 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் தொடருகின்றனர். இங்கிலாந்தின் ஜோ ரூட் 853 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இந்தியாவின் விராட் கோஹ்லி …

மேலும் வாசிக்க