Latest News
Home / abiraj (page 50)

abiraj

பழைய முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்; விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்பாடு

மாகாணசபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை இல்லாது செய்வதற்காக மாகாண சபைச் சட்டத்தில் திருத்தமொன்று மேற்கொள்ப்படவுள்ளது. மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எனவும் தெரியவருகின்றது. இது தொடர்பில் இருவருக்குமிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் …

மேலும் வாசிக்க

மற்றுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம்- மொத்த எண்ணிக்கை 2,890ஆக உயர்வு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,890ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 213 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,666 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வாசிக்க

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பிடித்துள்ள ராஜபக்ச குடும்பத்தினர்!!

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் முக்கிய அரச பதவிகளை வகிக்கும் சந்தர்ப்பம் இதுவாகும். ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதுடன், பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகித்து வருகிறார். இவர்களை தவிர பிரதமரின் மூத்த புதல்வர் அமைச்சரவை அந்தஸ்துள்ள இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். மேலும் ஜனாதிபதியின் …

மேலும் வாசிக்க

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!

    கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. உயர்தர புதிய, பழைய பாடத்திட்ட பரீட்சைகளுக்கான நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான அட்டவணைகளை கல்வித் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk  என்ற இணையத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க