Latest News
Home / abiraj (page 10)

abiraj

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடும் மக்கள்!

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் நேற்று நள்ளிரவு முதல் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட ஆரம்பித்துள்ளனர். நத்தார் பண்டிகையானது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வண்ணமாக ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிறது. வத்திக்கானின் புனித பேதுரு பேராலயத்தில் பாப்பரசர் ப்ரான்ஸிஸ் தலைமையில் பிரதான நத்தார் தின ஆராதனைகள் இடம்பெற்றன. இந்தமுறை கொரோனா பரவல் காரணமாக குறைந்த மக்கள் தொகையுடன் ஆராதனைக் கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் உலக …

மேலும் வாசிக்க

ஈஸ்டர் தாக்குதலின் வலிகளை சுமந்தவாறே மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் – ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதலின் கடுமையான வலிகளை சுமந்தவாறே இந்த நாட்டின் கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான பக்தியுணர்வை தூண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய கிறிஸ்மஸ் பண்டிகையானது உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகையாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அவர் இன்று …

மேலும் வாசிக்க

இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததை கிறிஸ்மஸ் நினைவுப்படுத்துகிறது – பிரதமர்

கிறிஸ்மஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும் இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுப்படுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இது மனித அன்பையும் கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு நற்செய்தியாகும். இந்த புனிதமான நாளில் அமைதி மற்றும் கருணையின் செய்தி நம் இதயங்களில் உறுதியாக விளங்க …

மேலும் வாசிக்க

யாழில் சூட்சுமமான முறையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை- ஐவர் கைது!

யாழில் மிகவும் சூட்சுமமான முறையில் நடத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டதுடன், இரு பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொற்பதி வீதியிலேயே விபச்சார விடுதி இன்று (வியாழக்கிழமை) முற்றுகையிடப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் அவரது குழுவினர் தலைமையில் இந்த முற்றுகை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. மிகவும் சூட்சுமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட இந்த விபச்சார விடுதியில் இரண்டு பெண்கள் …

மேலும் வாசிக்க

சர்வதேச பயணிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்: நியூயோர்க் அரசாங்கம்!

தமது பிராந்தியத்துக்குள் நுழையும் சர்வதேச பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென நியூயோர்க் அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதியவகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியினைத் தொடர்ந்து குறித்த கட்டுப்பாட்டினை நியூயோர்க் மாகாணம் விதித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக நியூயோர்க் மாகாண மேயர் பில் டி பிளேசியோ கருத்து தெரிவிக்கையில், ‘தமது பிராந்தியத்துக்குள் நுழையும் பயணிகள் பயண விபரத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். மேலும், …

மேலும் வாசிக்க

நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா- மொத்தம் 39,000ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் 388 பேர் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 18 பேரும் சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 45ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 686 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள …

மேலும் வாசிக்க

யாழில் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்படுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த விசேட கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்ட பாதுகாப்பு கட்டளைத் …

மேலும் வாசிக்க

பிக் பேஷ்: அடிலெய்ட் அணி 2 ஓட்டங்களால் திரில் வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணி 2 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது. பிரிஸ்பேன் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணியும் பிரிஸ்பேன் ஹீட் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் …

மேலும் வாசிக்க

பிரெக்ஸிட்டுக்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் இன்று வெளியீடு!

பிரெக்ஸிட்டுக்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள நிலையில், இதுதொடர்பான முக்கிய தகவல்கள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையிலான, குறித்த பேச்சுவார்த்தைகள் நேற்று இரவு நேரம் வரை நீடித்திருந்த நிலையில், கடந்த பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாது காணப்பட்ட மீன்பிடி ஒதுக்கீடு தொடர்பான விடயங்களை முடிவுக்கு கொண்டுவர எண்ணியுள்ளதாக இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த பேச்சுவார்த்தை தொடர்பாக …

மேலும் வாசிக்க

வவுனியாவில் பல குடும்பங்களுக்கு உணவுப்பொதி கிடைக்கவில்லை – ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் செல்வம்

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்படாமை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடிதம் மூலம் கொண்டு வந்துள்ளார். இன்று(வியாழக்கிழமை) அவரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியாவின் உள்ள திருநாவல்குளம், மகாரம்பைக்குளம், ஸ்ரீநகர், கற்குழி மற்றும் தேக்கவத்தை ஆகிய கிராமங்களில்  கொரோனா தொற்றுநோயால் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள், சிறுவர்கள், கர்பிணித்தாய்மார்கள், வயதுமுதிர்ந்தவர்கள், இளைஞர்கள், யுவதிகள் உள்ளடங்கியுள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட இந்த ஏழை …

மேலும் வாசிக்க